நீதிமொழிகள் 30 : 1 (ECTA)
ஆகூரின் மொழிகள் மாசாவைச் சார்ந்த யாக்கோபின் மகன் ஆகூரின் மொழிகள்; அவர் ஈத்தியேல் ஊக்கால் என்பவர்களுக்குக் கூறிய வாக்கு;* <b> /b> ‘ஈத்தியேல்’ என்பதை ‘கடவுளே, நான் சோர்ந்துபோனேன்’ எனவும், ‘ஊக்கால்’ என்பதை ‘நான் நொந்துபோனேன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்..
நீதிமொழிகள் 30 : 2 (ECTA)
மாந்தருள் மதிகேடன் நான்; மனிதருக் குரிய அறிவாற்றல் எனக்கில்லை.
நீதிமொழிகள் 30 : 3 (ECTA)
ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.
நீதிமொழிகள் 30 : 4 (ECTA)
வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லை களைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன? நீதான் எல்லா வற்றையும் அறிந்தவனாயிற்றே!
நீதிமொழிகள் 30 : 5 (ECTA)
கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக் கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 30 : 6 (ECTA)
அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.
நீதிமொழிகள் 30 : 7 (ECTA)
வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.
நீதிமொழிகள் 30 : 8 (ECTA)
வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
நீதிமொழிகள் 30 : 9 (ECTA)
எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.
நீதிமொழிகள் 30 : 10 (ECTA)
வேலைக்காரரைப் பற்றி அவர் தலைவரிடம் போய்க் கோள் சொல்லாதே; சொன்னால், அவர் உன்மீது பழிசுமத்துவார்; நீயே குற்றவாளியாவாய்.
நீதிமொழிகள் 30 : 11 (ECTA)
தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 12 (ECTA)
மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 13 (ECTA)
கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம் — இத்தகைய மக்களும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 14 (ECTA)
பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி — இவற்றை உடைய மக்களும் உண்டு; அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்; உலகிலுள்ள எளி யோரைத் தின்று விடுவார்கள்.
நீதிமொழிகள் 30 : 15 (ECTA)
அட்டைப்பூச்சிக்கு, “தா, தா” எனக் கத்தும் இரு புதல்வியர் உண்டு; ஆவல் தணியாத மூன்று உண்டு; “போதும்” என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 16 (ECTA)
அவை; பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அவாவும் வறண்ட நிலம், “போதும்” என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.
நீதிமொழிகள் 30 : 17 (ECTA)
தகப்பனை ஏளனம் செய்யும் கண் களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.
நீதிமொழிகள் 30 : 18 (ECTA)
எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு; என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 19 (ECTA)
அவை: வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறைமேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.
நீதிமொழிகள் 30 : 20 (ECTA)
விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே: தவறு செய்தபின் அவள் குளித்து விட்டு, “நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்பாள். [ …* ‘அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம்.. ]
நீதிமொழிகள் 30 : 21 (ECTA)
உலகத்தை நிலைகுலைப்பவை மூன்று; அது பொறுக்க இயலாத நான்காவது ஒன்றும் உண்டு:
நீதிமொழிகள் 30 : 22 (ECTA)
அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,
நீதிமொழிகள் 30 : 23 (ECTA)
யாரும் விரும்பாதிருந்தும் இறுதியில் மணம் முடிக்கும் பெண், உரிமை மனைவியின் இடத்தைப் பறித்துக் கொள்ளும் அடிமைப் பெண்.
நீதிமொழிகள் 30 : 24 (ECTA)
சிறியவையாயினும் ஞானமுள்ள சிற்று யிர்கள் நான்கு உலகில் உண்டு:
நீதிமொழிகள் 30 : 25 (ECTA)
எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
நீதிமொழிகள் 30 : 26 (ECTA)
குறுமுயல்கள்: இவையும் வலிமையற்ற இனமே; எனினும், இவை கற்பாறைகளுக் கிடையே தம் வளைகளை அமைத்துக் கொள்கின்றன.
நீதிமொழிகள் 30 : 27 (ECTA)
வெட்டுக்கிளிகள்: இவற்றிற்கு அரசன் இல்லை; எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.
நீதிமொழிகள் 30 : 28 (ECTA)
பல்லி: இதைக் கைக்குள் அடக்கி விடலாம்; எனினும், இது அரச மாளிகையிலும் காணப்படும்.
நீதிமொழிகள் 30 : 29 (ECTA)
பீடுநடை போடுபவை மூன்று உண்டு; ஏறுபோல நடக்கின்ற நான்காவது ஒன்றும் உண்டு;
நீதிமொழிகள் 30 : 30 (ECTA)
விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும் எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;
நீதிமொழிகள் 30 : 31 (ECTA)
பெருமிதத்துடன் நடக்கும் சேவல்; மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா; படையோடு செல்லும் அரசன்.
நீதிமொழிகள் 30 : 32 (ECTA)
நீ வீண் பெருமைகொண்டு மூடத் தனமாக நடந்திருந்தாலும், தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும், உன் வாயை பொத்திக் கொண்டிரு.
நீதிமொழிகள் 30 : 33 (ECTA)
ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்; மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்; எரிச்சலூட்டினால் சண்டை வரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33