நீதிமொழிகள் 26 : 1 (ECTA)
வேனிற் காலத்தில் பனி இருக்குமா? அறுவடைக் காலத்திற்கு மழை பொருத்துமா? அவ்வாறே மதிகேடருக்குப் புகழ் ஒவ்வாது.
நீதிமொழிகள் 26 : 2 (ECTA)
சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல, காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.
நீதிமொழிகள் 26 : 3 (ECTA)
குதிரைக்குச் சவுக்கடி, கழுதைக்குக் கடிவாளம்; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு.
நீதிமொழிகள் 26 : 4 (ECTA)
மடையரின் கேள்விக்கு முட்டாள் தனமாகப் பதிலுரைக்காதே; உரைத்தால் நீயும் அவரை போல ஒரு மடையனே.
நீதிமொழிகள் 26 : 5 (ECTA)
மடையரின் கேள்விக்கு அவரது மடமையை உணர்த்தும் வகையில் பதிலுரை; இல்லாவிடில், அவர் தம்மை ஞானி என்று எண்ணிக் கொள்வார்;
நீதிமொழிகள் 26 : 6 (ECTA)
மூடரைத் தூதாக அனுப்புதல், தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக் கொள்வதற்குச் சமம். [* லூக் 14:8- 10 ]
நீதிமொழிகள் 26 : 7 (ECTA)
ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும். [* லூக் 14:8- 10 ]
நீதிமொழிகள் 26 : 8 (ECTA)
மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர் கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.
நீதிமொழிகள் 26 : 9 (ECTA)
மூடன் வாயில் முதுமொழி, குடிகாரன் கையிலுள்ள முட்செடிக்குச் சமம்.
நீதிமொழிகள் 26 : 10 (ECTA)
மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர் வழிப்போக்கர் எவராயிருப்பினும் அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.
நீதிமொழிகள் 26 : 11 (ECTA)
நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச் செயலையே மீண்டும் செய்வார்.
நீதிமொழிகள் 26 : 12 (ECTA)
தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக் கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.
நீதிமொழிகள் 26 : 13 (ECTA)
“வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது” என்று சொல்லிக் கொண்டிருப்பவர் சோம்பேறி.
நீதிமொழிகள் 26 : 14 (ECTA)
கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண் டிருப்பதுபோல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.
நீதிமொழிகள் 26 : 15 (ECTA)
சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.
நீதிமொழிகள் 26 : 16 (ECTA)
விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட, தாம் மிகுந்த ஞான முள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.
நீதிமொழிகள் 26 : 17 (ECTA)
பிறருடைய சச்சரவுகளில் தலையிடு கிறவர், தெருவில் செல்லும் வெறிநாயின் வாலைப் பிடித்து இழுப்பவருக்கு ஒப்பாவார்.
நீதிமொழிகள் 26 : 18 (ECTA)
கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும் பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,
நீதிமொழிகள் 26 : 19 (ECTA)
பிறனை வஞ்சித்துவிட்டு “நான் விளையாட்டுக்குச் செய்தேன்” என்று சொல் பவரே.
நீதிமொழிகள் 26 : 20 (ECTA)
விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்; புறங்கூறுபவர் இல்லாவிடில் சண்டை அடங்கும்.
நீதிமொழிகள் 26 : 21 (ECTA)
கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்; சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும். [* உரோ 12:20.. ]
நீதிமொழிகள் 26 : 22 (ECTA)
புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பது போலாம். அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள். [* உரோ 12:20.. ]
நீதிமொழிகள் 26 : 23 (ECTA)
தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது, மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.
நீதிமொழிகள் 26 : 24 (ECTA)
பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்; உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.
நீதிமொழிகள் 26 : 25 (ECTA)
அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே; அவர் உள்ளத்தில் அருவருக்கத் தக்கவை ஏழு இருக்கும்.
நீதிமொழிகள் 26 : 26 (ECTA)
அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும், அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.
நீதிமொழிகள் 26 : 27 (ECTA)
தான் வெட்டின குழியில் தானே விழுவார்; தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.
நீதிமொழிகள் 26 : 28 (ECTA)
பொய் பேசும் நா உண்மையை வெறுக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
❮
❯