நீதிமொழிகள் 24 : 1 (ECTA)
19 தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே.
நீதிமொழிகள் 24 : 2 (ECTA)
அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.
நீதிமொழிகள் 24 : 3 (ECTA)
20 ஞானம் வீட்டைக் கட்டும்; மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும்.
நீதிமொழிகள் 24 : 4 (ECTA)
அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.
நீதிமொழிகள் 24 : 5 (ECTA)
21 வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்; வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர்.
நீதிமொழிகள் 24 : 6 (ECTA)
ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.
நீதிமொழிகள் 24 : 7 (ECTA)
22 ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது; எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.
நீதிமொழிகள் 24 : 8 (ECTA)
23 தீமை செய்யத் திட்டமிடுபவன் வஞ்சனையாளன் என்னும் பெயர் பெறுவான்.
நீதிமொழிகள் 24 : 9 (ECTA)
மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை; ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள்.
நீதிமொழிகள் 24 : 10 (ECTA)
24 நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?
நீதிமொழிகள் 24 : 11 (ECTA)
25 கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார்.
நீதிமொழிகள் 24 : 12 (ECTA)
“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?
நீதிமொழிகள் 24 : 13 (ECTA)
26 பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும்.
நீதிமொழிகள் 24 : 14 (ECTA)
ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்; உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 24 : 15 (ECTA)
27 கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே; அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே.
நீதிமொழிகள் 24 : 16 (ECTA)
நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.
நீதிமொழிகள் 24 : 17 (ECTA)
28 உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே; அவர் கால் இடறும் போது களிகூராதே.
நீதிமொழிகள் 24 : 18 (ECTA)
நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.
நீதிமொழிகள் 24 : 19 (ECTA)
29 தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.
நீதிமொழிகள் 24 : 20 (ECTA)
தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது; ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.
நீதிமொழிகள் 24 : 21 (ECTA)
30 பிள்ளாய்! ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சி நட; கிளர்ச்சி செய்வாரோடு உறவுகொள்ளாதே.
நீதிமொழிகள் 24 : 22 (ECTA)
ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?
நீதிமொழிகள் 24 : 23 (ECTA)
பல்வகைப்பட்ட முதுமொழிகள் ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்: நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல.
நீதிமொழிகள் 24 : 24 (ECTA)
குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும்.
நீதிமொழிகள் 24 : 25 (ECTA)
ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்; நற்பேறும் கிடைக்கும்.
நீதிமொழிகள் 24 : 26 (ECTA)
நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார்.
நீதிமொழிகள் 24 : 27 (ECTA)
வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.
நீதிமொழிகள் 24 : 28 (ECTA)
தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.
நீதிமொழிகள் 24 : 29 (ECTA)
“அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று சொல்லாதே.
நீதிமொழிகள் 24 : 30 (ECTA)
சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.
நீதிமொழிகள் 24 : 31 (ECTA)
அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் கற்சுவர் இடிந்து கிடந்தது.
நீதிமொழிகள் 24 : 32 (ECTA)
அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்; அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே;
நீதிமொழிகள் 24 : 33 (ECTA)
இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு. * நீமொ 6:10-11..
நீதிமொழிகள் 24 : 34 (ECTA)
அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும். * நீமொ 6:10-11..
❮
❯