நீதிமொழிகள் 18 : 1 (ECTA)
பிறரோடு ஒத்துவாழாதவர் தன்ன லத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்..
நீதிமொழிகள் 18 : 2 (ECTA)
மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.
நீதிமொழிகள் 18 : 3 (ECTA)
கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்; மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.
நீதிமொழிகள் 18 : 4 (ECTA)
மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன் றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.
நீதிமொழிகள் 18 : 5 (ECTA)
பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல; நேர்மையானவருக்கு நீதி கிடைக் காமல் தடுப்பது நேரியதல்ல.
நீதிமொழிகள் 18 : 6 (ECTA)
மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்கு வாதம் பிறக்கும்; அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.
நீதிமொழிகள் 18 : 7 (ECTA)
மதிகேடர் தம் வாயால் அழிவார்; அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.
நீதிமொழிகள் 18 : 8 (ECTA)
புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்; அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.
நீதிமொழிகள் 18 : 9 (ECTA)
தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.
நீதிமொழிகள் 18 : 10 (ECTA)
ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.
நீதிமொழிகள் 18 : 11 (ECTA)
செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.
நீதிமொழிகள் 18 : 12 (ECTA)
முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு; மேன்மை அடையத் தாழ்மையே வழி.
நீதிமொழிகள் 18 : 13 (ECTA)
வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர் களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.
நீதிமொழிகள் 18 : 14 (ECTA)
மன வலிமை நோயைத் தாங்கிக் கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?
நீதிமொழிகள் 18 : 15 (ECTA)
உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்; ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.
நீதிமொழிகள் 18 : 16 (ECTA)
ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர் முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.
நீதிமொழிகள் 18 : 17 (ECTA)
வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.
நீதிமொழிகள் 18 : 18 (ECTA)
திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.
நீதிமொழிகள் 18 : 19 (ECTA)
*உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்; அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான்.* [* ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.. ]
நீதிமொழிகள் 18 : 20 (ECTA)
ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.
நீதிமொழிகள் 18 : 21 (ECTA)
வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.
நீதிமொழிகள் 18 : 22 (ECTA)
மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.
நீதிமொழிகள் 18 : 23 (ECTA)
ஏழை கெஞ்சிக் கேட்பார்; செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.
நீதிமொழிகள் 18 : 24 (ECTA)
கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24