நீதிமொழிகள் 17 : 1 (ECTA)
சண்டை நடக்கும் வீட்டில் விருந் துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்..
நீதிமொழிகள் 17 : 2 (ECTA)
முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்ட வனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர் களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.
நீதிமொழிகள் 17 : 3 (ECTA)
வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத் தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.
நீதிமொழிகள் 17 : 4 (ECTA)
தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.
நீதிமொழிகள் 17 : 5 (ECTA)
ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்.
நீதிமொழிகள் 17 : 6 (ECTA)
முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள் ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.
நீதிமொழிகள் 17 : 7 (ECTA)
பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.
நீதிமொழிகள் 17 : 8 (ECTA)
கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத் தையும் நிறைவேற்றுவார்.
நீதிமொழிகள் 17 : 9 (ECTA)
குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடு கிறவர்; குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான்.
நீதிமொழிகள் 17 : 10 (ECTA)
சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.
நீதிமொழிகள் 17 : 11 (ECTA)
தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்; அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப் பப்படுவார்.
நீதிமொழிகள் 17 : 12 (ECTA)
மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேட னுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.
நீதிமொழிகள் 17 : 13 (ECTA)
நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ, அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.
நீதிமொழிகள் 17 : 14 (ECTA)
வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்; வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.
நீதிமொழிகள் 17 : 15 (ECTA)
குற்றம் செய்தவரை நேர்மையானவ ரென்றும் நேர்மையானவரைக் குற்றம் செய்தவ ரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.
நீதிமொழிகள் 17 : 16 (ECTA)
மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன? ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா? அவருக்குத் தான் மனமில் லையே!
நீதிமொழிகள் 17 : 17 (ECTA)
நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.
நீதிமொழிகள் 17 : 18 (ECTA)
அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று, அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறி வில்லாதவனே.
நீதிமொழிகள் 17 : 19 (ECTA)
வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.
நீதிமொழிகள் 17 : 20 (ECTA)
கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்; வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.
நீதிமொழிகள் 17 : 21 (ECTA)
மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள் ளாவார்; மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.
நீதிமொழிகள் 17 : 22 (ECTA)
மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.
நீதிமொழிகள் 17 : 23 (ECTA)
கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டு, நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.
நீதிமொழிகள் 17 : 24 (ECTA)
உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்; மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.
நீதிமொழிகள் 17 : 25 (ECTA)
மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை; பெற்ற தாய்க்குத் துயரம். [* நீமொ 14:12.. ]
நீதிமொழிகள் 17 : 26 (ECTA)
நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல; மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.
நீதிமொழிகள் 17 : 27 (ECTA)
தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர்.
நீதிமொழிகள் 17 : 28 (ECTA)
பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.
❮
❯