நீதிமொழிகள் 16 : 1 (ECTA)
எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.
நீதிமொழிகள் 16 : 2 (ECTA)
மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
நீதிமொழிகள் 16 : 3 (ECTA)
உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.
நீதிமொழிகள் 16 : 4 (ECTA)
ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.
நீதிமொழிகள் 16 : 5 (ECTA)
இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.
நீதிமொழிகள் 16 : 6 (ECTA)
அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.
நீதிமொழிகள் 16 : 7 (ECTA)
ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.
நீதிமொழிகள் 16 : 8 (ECTA)
தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.
நீதிமொழிகள் 16 : 9 (ECTA)
மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.
நீதிமொழிகள் 16 : 10 (ECTA)
அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது; தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.
நீதிமொழிகள் 16 : 11 (ECTA)
நிறைகோலும் துலாக்கோலும் ஆண்ட வருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்க ளெல்லாம் அவரால் உண்டானவை.
நீதிமொழிகள் 16 : 12 (ECTA)
தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்; ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.
நீதிமொழிகள் 16 : 13 (ECTA)
நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.
நீதிமொழிகள் 16 : 14 (ECTA)
அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.
நீதிமொழிகள் 16 : 15 (ECTA)
அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.
நீதிமொழிகள் 16 : 16 (ECTA)
பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.
நீதிமொழிகள் 16 : 17 (ECTA)
நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புட னிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.
நீதிமொழிகள் 16 : 18 (ECTA)
அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.
நீதிமொழிகள் 16 : 19 (ECTA)
மேட்டிமையானவர்களோடு கொள்ளை யடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.
நீதிமொழிகள் 16 : 20 (ECTA)
போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.
நீதிமொழிகள் 16 : 21 (ECTA)
ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்; இனிமை யாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.
நீதிமொழிகள் 16 : 22 (ECTA)
விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.
நீதிமொழிகள் 16 : 23 (ECTA)
ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.
நீதிமொழிகள் 16 : 24 (ECTA)
இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.
நீதிமொழிகள் 16 : 25 (ECTA)
ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும். [* நீமொ 14:12.. ]
நீதிமொழிகள் 16 : 26 (ECTA)
உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.
நீதிமொழிகள் 16 : 27 (ECTA)
பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.
நீதிமொழிகள் 16 : 28 (ECTA)
கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.
நீதிமொழிகள் 16 : 29 (ECTA)
வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.
நீதிமொழிகள் 16 : 30 (ECTA)
கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக் கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.
நீதிமொழிகள் 16 : 31 (ECTA)
நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.
நீதிமொழிகள் 16 : 32 (ECTA)
வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிற வரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
நீதிமொழிகள் 16 : 33 (ECTA)
மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33