ஒபதியா 1 : 1 (ECTA)
ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்து இவ்வாறு சொல்கின்றார்: “விழித்தெழுங்கள், ஏதோமுக்கு எதிராகப்
போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!”
என்று அறிவிக்கத் தூதன் ஒருவனை வேற்றினத்தாரிடையே ஆண்டவர் அனுப்பினார், என்பதாக ஆண்டவரிடமிருந்து வந்த செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 2 (ECTA)
ஏதோம் நாட்டை ஆண்டவர் தண்டிப்பார் நான் உன்னை மக்களினத்தாரிடையே சிறுமைக்குள்ளாக்குவேன்; நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 3 (ECTA)
பாறை இடுக்குகளில் வாழ்பவனே!
உயரத்திலே குடியிருப்பை
அமைத்திருப்பவனே! ‘என்னைத் தரை மட்டும் தாழ்த்தக் கூடியவன் யார்?’ என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு
உன்னை ஏமாற்றிவிட்டது. [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 4 (ECTA)
நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன்,
என்கிறார் ஆண்டவர். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 5 (ECTA)
உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின், கொள்ளைக்காரர்கள் இரவில் வருவார்களாயின் தங்கள் தேவைக்கு அதிகமாகத் திருடுவார்களோ? திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள் உன்னிடம் வந்தால் திராட்சைப் பழங்களில் சிலவற்றையாவது விட்டுவைக்க மாட்டார்களா? நீயோ வெனில் முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்! [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 6 (ECTA)
ஏசா எவ்வளவாய்க் கொள்ளையடிக்கப்பட்டான்! மறைத்து வைக்கப்பட்ட அவனுடைய கருவூலங்கள் சூறை யாடப்பட்டன. [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 7 (ECTA)
உன்னோடு உடன்படிக்கை செய்தவர்கள் யாவரும் உன்னை ஏமாற்றி விட்டார்கள்; அவர்கள் உன்னை நாட்டின் எல்லைவரை விரட்டி விட்டார்கள்; உன்னோடு உறவாடியவர்கள் உனக்கு எதிராய் எழும்பி உன்னை மேற்கொண்டார்கள்; உன்னோடு உண்டவர்களும் நல்லுறவு கொண்டிருந்தவர்களும் உனக்குக் கண்ணி வைத்தார்கள்; உன்னைக் குறித்து ‘அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை
எங்கே?’ என்றார்கள். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 8 (ECTA)
அந்நாளில் நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் மலைமேல் உள்ள அறிவாளிகளையும் அழிக்காமல் விடுவேனா? என்கிறார் ஆண்டவர். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 9 (ECTA)
தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள் திகிலடைவார்கள்; ஆதலால் ஏசாவின் மலைமேல் உள்ள யாவரும், வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 10 (ECTA)
ஏதோம் தண்டிக்கப்படக் காரணம் உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக
நீ செய்த கொடுமையை முன்னிட்டு,
நீ வெட்கி நாணுவாய். நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 11 (ECTA)
அயல் நாட்டார்
யாக்கோபின் செல்வத்தைக்
கொள்ளையிட்ட அந்நாளில் — வெளிநாட்டார் அவன் வாயில்களுக்குள் புகுந்து எருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில் — நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே! [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 12 (ECTA)
நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும்; யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும்; அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது
இருந்திருக்க வேண்டும்; [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 13 (ECTA)
என் மக்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்கவேண்டும்; அவர்கள் கேடுற்ற நாளில், அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது
இருந்திருக்க வேண்டும்.
அவர்கள் அழிவுற்ற நாளில், அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 14 (ECTA)
அவர்களுள் தப்பி ஓடியவர்களை வெட்டி வீழ்த்தும்படி வழிச் சந்துகளில் பதுங்கியிராது இருந்திருக்க வேண்டும்; அவர்கள் துயருற்ற நாளில், அவர்களில் எஞ்சியோரைக் காட்டிக் கொடுக்காது இருந்திருக்க வேண்டும். [* எசா 3:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; மலா 1:2- 5 ]
ஒபதியா 1 : 15 (ECTA)
வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு ஏனெனில், ஆண்டவரின் நாள் வேற்றினத்தார் எல்லார் மேலும்
வரப்போகின்றது;
நீ செய்ததுபோலவே உனக்கும் செய்யப்படும்; நீ செய்த வினைகள் உன் தலைமேலேயே விழும்.
ஒபதியா 1 : 16 (ECTA)
என் திரு மலையில், நீங்கள் என் தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும்
குடிப்பார்கள்.
மேலும்குடிப்பார்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்; குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.
ஒபதியா 1 : 17 (ECTA)
இஸ்ரயேலின் வெற்றி ஆனால், தப்பிப் பிழைத்தோர் சீயோன் மலையில் இருப்பர்; சீயோன் மலையும் தூய்மையாய் இருக்கும்; யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத்
திரும்பப் பெறுவர்.
ஒபதியா 1 : 18 (ECTA)
யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்; யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர்; ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்; ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார்; ஆண்டவரே இதைக் கூறினார்.
ஒபதியா 1 : 19 (ECTA)
நெகேபில் இருப்பவர்கள் ஏசாவின் மலையைத் தமதாக்கிக் கொள்வார்கள். செபேலாவைச் சார்ந்தவர்கள் பெலிஸ்தியர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எப்ராயிம், சமாரியா நாடுகளைத் தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்; பென்யமினோ கிலயாதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.
ஒபதியா 1 : 20 (ECTA)
இஸ்ரயேலிலிருந்து நாடுகடத்தப்பட்ட வீரர்கள் திரும்பி வந்து பெனீசியாவிலிருந்து சாரிபாத்து வரை உள்ள நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; எருசலேமிலிருந்து செபராதுக்கு நாடுகடத்தப்பட்டோர் நெகேபின் நகர்களைச் சொந்தமாக்கிக் கொள்வர்.
ஒபதியா 1 : 21 (ECTA)
விடுதலை பெற்றோர்* ஏசாவின் மலையை ஆளுவதற்குச் சீயோன் மலைமேல் ஏறுவர்; அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும். [* ‘வெற்றி வீரர்கள்’ என்பது எபிரேய பாடம்.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21