எண்ணாகமம் 35 : 1 (ECTA)
லேவியருக்கு வழங்கப்பட்ட நகர்கள் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 2 (ECTA)
தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும். [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 3 (ECTA)
இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர்; இவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அவர்கள் கால்நடைகளுக்கும், மந்தைகளுக்கும், வீட்டு விலங்குகள் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 4 (ECTA)
நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மேய்ச்சல் நிலங்கள் நகரின் சுவரைச் சுற்றிலும் ஆயிரம் முழம் அகலமாய் இருக்கும். [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 5 (ECTA)
நகருக்கு வெளியில் கிழக்கே இரண்டாயிரம் முழமும், தெற்கே இரண்டாயிரம் முழமும், மேற்கே இரண்டாயிரம் முழமும், வடக்கே இரண்டாயிரம் முழமும் நீங்கள் அளக்க வேண்டும். இதுநடுவே இருக்கும் நகர்களுக்கு இது மேய்ச்சல் நிலமாகும். [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 6 (ECTA)
நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டிய நகர்களாவன; கொலையாளி தப்பியோடித் தஞ்சம் புகும் அடைக்கல நகர்கள் ஆறு; இவை தவிர நாற்பத்திரண்டு நகர்கள். [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 7 (ECTA)
மேய்ச்சல் நிலங்கள் உட்பட நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மொத்த நகர்கள் நாற்பத்தெட்டு. [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 8 (ECTA)
இஸ்ரயேல் மக்களின் உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும் நகர்களைப் பொறுத்த வரை குலங்களில் பெரியவற்றிலிருந்து மிகுதியாகவும், சிறியவற்றிலிருந்து குறைவாகவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குலமும் உடைமையாக்கியுள்ள உரிமைச் சொத்தின் விகிதப்படி அதன் நகர்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். [* யோசு 21:1- 42 ]
எண்ணாகமம் 35 : 9 (ECTA)
அடைக்கல நகர்கள்
(இச 19:1-13; யோசு 20:1-9) ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 35 : 10 (ECTA)
“இஸ்ரயேல் மக்களிடம் சொல்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டுக்குள் நுழையும் போது,
எண்ணாகமம் 35 : 11 (ECTA)
உங்களுக்காக அடைக்கல நகர்களைத் தேர்ந்து கொள்ளுங்கள்; தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறுவான்.
எண்ணாகமம் 35 : 12 (ECTA)
இந்த நகர்கள் பழிவாங்குவோனிடமிருந்து உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்; இதனால் கொலை செய்தவன் நீதித் தீர்ப்புக்காக மக்கள் கூட்டமைப்புக்கு முன் நிற்கும் முன்னரே அவன் சாகவேண்டியதில்லை.
எண்ணாகமம் 35 : 13 (ECTA)
நீங்கள் கொடுக்கும் நகர்கள் ஆறும் அடைக்கல நகர்களாயிருக்கும்.
எண்ணாகமம் 35 : 14 (ECTA)
யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும் கானான் நாட்டுக்குள் மூன்று நகர்களும் நீங்கள் அடைக்கல நகர்களாகக் கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 35 : 15 (ECTA)
இந்த ஆறு நகர்களும் இஸ்ரயேல் மக்களுக்கும்,அன்னியருக்கும் அவர்களிடையே தற்காலிகமாகத் தங்கியிருப்போருக்கும் அடைக்கல நகர்களாயிருக்கும்; தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறலாம்.
எண்ணாகமம் 35 : 16 (ECTA)
ஆனால், அவன் ஓர் இரும்புக் கருவியினால் ஒருவனை அடிக்க அவன் இறந்தால் அவன் ஒரு கொலைகாரன்; அந்தக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்.
எண்ணாகமம் 35 : 17 (ECTA)
ஒரு மனிதன் சாகும்படி கையில் ஒரு கல்லை வைத்து அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே; அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.
எண்ணாகமம் 35 : 18 (ECTA)
அல்லது ஒரு மனிதன் சாகும்படி கையில் மர ஆயதம் ஒன்றை வைத்து அவனை அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே; அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.
எண்ணாகமம் 35 : 19 (ECTA)
இரத்தப் பழி வாங்குவோன்தான் கொலைகாரனைக் கொல்ல வேண்டும்; அவனைச் சந்திக்கும்போது அவன் அவனைக் கொல்ல வேண்டும்.
எண்ணாகமம் 35 : 20 (ECTA)
மேலும், பகை முன்னிட்டு அவன் அவனை விழத்தள்ளினால் அல்லது பதுங்கியிருந்து எறிந்து அவன் மடிந்தால்,
எண்ணாகமம் 35 : 21 (ECTA)
அவன் பகை முன்னிட்டு அவன் அவனைக் கையினால் அடித்து அவன் மடிந்தால், அடித்தவன் கொல்லப்பட வேண்டும்; அவன் ஒரு கொலைகாரன்; இரத்தப்பழி வாங்குவோன் கொலைகாரனைச் சந்திக்கும் போதே அவனைக் கொன்று விடவேண்டும்.
எண்ணாகமம் 35 : 22 (ECTA)
ஆயினும், பகை ஏதுமின்றித் திடீரென்று அவனைக் கீழே விழத்தள்ளி, அல்லது பதுங்கியிராமலேயே எதையாவது அவன் மேல் எறிந்து,
எண்ணாகமம் 35 : 23 (ECTA)
கொலைகாரனுக்கும் இரத்தப்பழி வாங்குவோனுக்குமிடையில் இந்த நீதித் தீர்ப்புகளைக் கொண்டு மக்கள் கூட்டமைப்பு தீர்ப்பு வழங்க வேண்டும்.
எண்ணாகமம் 35 : 24 (ECTA)
மக்கள் கூட்டமைப்பினர் இரத்தப் பழி வாங்குவோன் கையிலிருந்து கொலைகாரனைக் காப்பாற்ற வேண்டும்; அவன் ஓடித் தஞ்சம் புகுந்த அடைக்கல நகருக்கு மக்கள் கூட்டமைப்பினர் அவனைத் திரும்பக் கொண்டு வர வேண்டும்;
எண்ணாகமம் 35 : 25 (ECTA)
தூய தைலத்தால் திருநிலைப்படுத்தப்பட்ட தலைமைக் குரு இறக்குமட்டும் அவன் அதில் தங்குவான்.
எண்ணாகமம் 35 : 26 (ECTA)
ஆனால், அவன் ஓடித் தஞ்சம் புகுந்திருந்த அடைக்கல நகரின் எல்லைக்கு அப்பால் எப்போதாவது போயிருந்து,
எண்ணாகமம் 35 : 27 (ECTA)
அவனை இரத்தப்பழி வாங்குவோன் அடைக்கல நகரின் எல்லைகளுக்கு வெளியே கண்டு அவனை வெட்டினால் இரத்தப்பழி வாங்குவோன் மேல் பழி இராது.
எண்ணாகமம் 35 : 28 (ECTA)
ஏனெனில், அவன் தன் தலைமைக் குரு இறக்கும்வரை தன் அடைக்கல நகரில்தான் தங்கியிருக்க வேண்டும்; தலைமைக் குரு இறந்த பின்னர்தான் அந்தக் கொலைகாரன் தனக்குரிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம்.
எண்ணாகமம் 35 : 29 (ECTA)
என்றும் எங்கும் உங்களுக்கு இதுவே நீதி நியமம்.
எண்ணாகமம் 35 : 30 (ECTA)
எவனாவது இன்னொருவனைக் கொன்றால் சாட்சிகளின் வாக்குமூலம் முன்னிட்டுக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்; ஆனால், ஒரே சாட்சியின் கூற்றை வைத்து ஒருவனும் கொல்லப்படக் கூடாது. * இச 17:6; 19:15..
எண்ணாகமம் 35 : 31 (ECTA)
மேலும், மரண தண்டனைக்குரிய கொலைக்காரன் ஒருவனின் உயிருக்காக ஈட்டுத்தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம். அவன் கொல்லப்படத்தான் வேண்டும்.
எண்ணாகமம் 35 : 32 (ECTA)
அடைக்கல நகருக்குள் ஓடித் தஞ்சம் புகுந்து விட்டு, தலைமைக் குரு இறக்கும் முன் தனக்குரிய நாட்டில் குடியிருக்கும்படி ஒருவன் திரும்பிச் சென்றால் அவனிடமிருந்து ஈட்டுத் தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம்.
எண்ணாகமம் 35 : 33 (ECTA)
நீங்கள் வாழும் நாட்டைத் தீட்டுப்படுத்தாதீர்கள். இரத்தம் நாட்டைத் தீட்டுப்படுத்தும், நாட்டுக்காக, அதில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனைச் சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும்.
எண்ணாகமம் 35 : 34 (ECTA)
நீங்கள் வாழும் நாட்டை நீங்கள் கறைப்படுத்தவே கூடாது. நான் அதன் நடுவில் வாழ்கிறேன்; நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும் ஆண்டவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34