எண்ணாகமம் 34 : 1 (ECTA)
நாட்டின் எல்லைகள் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 34 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது,
எண்ணாகமம் 34 : 3 (ECTA)
உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும்.
எண்ணாகமம் 34 : 4 (ECTA)
அந்த எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீனைத் தாண்டிக் காதேசு பர்னேயாவுக்குத் தென்புறத்தை அடையும்; பின், அது அட்சராதாருக்குச் சென்று அட்சமோன் ஓரமாகக் கடந்து செல்லும்.
எண்ணாகமம் 34 : 5 (ECTA)
அந்த எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும்.
எண்ணாகமம் 34 : 6 (ECTA)
உங்கள் மேற்கு எல்லை பெருங்கடலும், அதன் கரையோரமும்; இதுவே உங்கள் மேற்கு எல்லை.
எண்ணாகமம் 34 : 7 (ECTA)
உங்கள் வட எல்லையாகப் பெருங்கடலிலிருந்து ஓர் மலை வரை நீங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ளுங்கள்.
எண்ணாகமம் 34 : 8 (ECTA)
ஓர் மலையிலிருந்து காமாத்தின் நுழைவாயில் வரை அதனைக் குறிப்பீர்கள்; எல்லையின் முடிவு செதாதில் இருக்கும்.
எண்ணாகமம் 34 : 9 (ECTA)
அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து சென்று அட்சரேனோனில் முடிவுறும்; இதுவே உங்கள் வடஎல்லை.
எண்ணாகமம் 34 : 10 (ECTA)
உங்கள் கிழக்கு எல்லையாக அட்சரேனோனிலிருந்து செபாம் வரைக்குமுள்ள பகுதியைக் குறித்துக் கொள்ளுங்கள்.
எண்ணாகமம் 34 : 11 (ECTA)
அந்த எல்லை அயினுக்குக் கிழக்கே செபாம் முதல் ரிப்லா வரைக்கும் செல்லும்; அந்த எல்லை கிழக்கு நோக்கிச் சென்று கினரேத்துக் கடலின் சரிவை வந்தடையும்;
எண்ணாகமம் 34 : 12 (ECTA)
அந்த எல்லை யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கடலில் முடிவுறும்.
எண்ணாகமம் 34 : 13 (ECTA)
மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: திருவுளச் சீட்டு மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாடு இதுவே: இதனை ஒன்பது குலங்களுக்கும் பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்; * யோசு 14:1-5..
எண்ணாகமம் 34 : 14 (ECTA)
மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மனாசேயின் பாதிக் குலமும் தங்கள் உரிமைச் சொத்தினைப் பெற்றுவிட்டனர். * யோசு 14:1-5..
எண்ணாகமம் 34 : 15 (ECTA)
இரண்டு குலங்களும் பாதிக் குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள் உரிமைச் சொத்தைப் பெற்றுள்ளார்கள். * யோசு 14:1-5..
எண்ணாகமம் 34 : 16 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 34 : 17 (ECTA)
உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன; குரு எலயாசர்; நூனின் மகன் யோசுவா.
எண்ணாகமம் 34 : 18 (ECTA)
இவர்களைத் தவிர உரிமைச் சொத்துக்காக நாட்டைப் பங்கிடும்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் தலைவன் ஒருவனை நீங்கள் தேர்ந்து கொள்ள வேண்டும்.
எண்ணாகமம் 34 : 19 (ECTA)
அவர்களின் பெயர்கள்: யூதாக் குலத்திலிருந்து எபுன்னேயின் மகன் காலேபு;
எண்ணாகமம் 34 : 20 (ECTA)
சிமியோன் மக்களின் குலத்திலிருந்து அம்மிகூதின் மகன் செமுவேல்.
எண்ணாகமம் 34 : 21 (ECTA)
பென்யமீன் குலத்திலிருந்து கிஸ்லோனின் மகன் எலிதாது;
எண்ணாகமம் 34 : 22 (ECTA)
தாண் மக்களின் குலத்திலிருந்து வரும் தலைவன், யோக்லியின் மகன் புக்கி.
எண்ணாகமம் 34 : 23 (ECTA)
யோசோப்பின் மக்களில் மனாசே புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன் எப்போத்தின் மகன் கன்னியேல்;
எண்ணாகமம் 34 : 24 (ECTA)
எப்ராயிம் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், சிப்தானின் மகன் கெமுவேல்;
எண்ணாகமம் 34 : 25 (ECTA)
செபுலோன் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், பர்னாக்கின் மகன் எலிசாபான்;
எண்ணாகமம் 34 : 26 (ECTA)
இசக்கார் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அசானின் மகன் பல்தியேல்;
எண்ணாகமம் 34 : 27 (ECTA)
ஆசேர் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், செலோமியின் மகன் அகிகூத்து;
எண்ணாகமம் 34 : 28 (ECTA)
நப்தலி புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அம்மிகூத்தின் மகன் பெதாவேல்;
எண்ணாகமம் 34 : 29 (ECTA)
கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உரிமைச் சொத்தைப் பங்கிடும்படி ஆண்டவரால் பணிக்கப்பட்டவர்கள் இவர்களே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29