எண்ணாகமம் 32 : 1 (ECTA)
யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த குலங்கள்
(இச 3:12-22) ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.
எண்ணாகமம் 32 : 2 (ECTA)
எனவே, அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,
எண்ணாகமம் 32 : 3 (ECTA)
“அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள்
எண்ணாகமம் 32 : 4 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை; உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு” என்றனர்.
எண்ணாகமம் 32 : 5 (ECTA)
மேலும், அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்” என்றனர்.
எண்ணாகமம் 32 : 6 (ECTA)
ஆனால், மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: "நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா?
எண்ணாகமம் 32 : 7 (ECTA)
ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்?
எண்ணாகமம் 32 : 8 (ECTA)
அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர். [* எண் 13:17- 33 ]
எண்ணாகமம் 32 : 9 (ECTA)
அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர். [* எண் 13:17- 33 ]
எண்ணாகமம் 32 : 10 (ECTA)
அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது: [* எண் 14:26- 35 ]
எண்ணாகமம் 32 : 11 (ECTA)
எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை. [* எண் 14:26- 35 ]
எண்ணாகமம் 32 : 12 (ECTA)
எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏனெனில், அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர். [* எண் 14:26- 35 ]
எண்ணாகமம் 32 : 13 (ECTA)
அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது. [* எண் 14:26- 35 ]
எண்ணாகமம் 32 : 14 (ECTA)
இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே!
எண்ணாகமம் 32 : 15 (ECTA)
அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.”
எண்ணாகமம் 32 : 16 (ECTA)
பின்னும், அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, “நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்;
எண்ணாகமம் 32 : 17 (ECTA)
ஆயினும், நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்;
எண்ணாகமம் 32 : 18 (ECTA)
இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.
எண்ணாகமம் 32 : 19 (ECTA)
நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில், எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது” என்றார்கள்.
எண்ணாகமம் 32 : 20 (ECTA)
மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,
எண்ணாகமம் 32 : 21 (ECTA)
உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால்
எண்ணாகமம் 32 : 22 (ECTA)
நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்; ஆண்டவருக்கும் இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.
எண்ணாகமம் 32 : 23 (ECTA)
ஆனால், நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.
எண்ணாகமம் 32 : 24 (ECTA)
உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.
எண்ணாகமம் 32 : 25 (ECTA)
காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், “எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்;
எண்ணாகமம் 32 : 26 (ECTA)
எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்;
எண்ணாகமம் 32 : 27 (ECTA)
ஆனால்,எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்” என்றனர்.
எண்ணாகமம் 32 : 28 (ECTA)
இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார். * யோசு 1:12-15..
எண்ணாகமம் 32 : 29 (ECTA)
மோசே அவர்களிடம், “காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்; நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்; * யோசு 1:12-15..
எண்ணாகமம் 32 : 30 (ECTA)
ஆனால், அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர்” என்றார். * யோசு 1:12-15..
எண்ணாகமம் 32 : 31 (ECTA)
காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, “ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்; * யோசு 1:12-15..
எண்ணாகமம் 32 : 32 (ECTA)
நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்” என்றனர். * யோசு 1:12-15..
எண்ணாகமம் 32 : 33 (ECTA)
மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார்.
எண்ணாகமம் 32 : 34 (ECTA)
காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர்,
எண்ணாகமம் 32 : 35 (ECTA)
அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா,
எண்ணாகமம் 32 : 36 (ECTA)
பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர்.
எண்ணாகமம் 32 : 37 (ECTA)
ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம்,
எண்ணாகமம் 32 : 38 (ECTA)
நெபோ, பாகால்மெகோன், (இந்தப் பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.
எண்ணாகமம் 32 : 39 (ECTA)
மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.
எண்ணாகமம் 32 : 40 (ECTA)
மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார்.
எண்ணாகமம் 32 : 41 (ECTA)
மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.
எண்ணாகமம் 32 : 42 (ECTA)
நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத் தம் பெயராலேயே ‘நோபாகு’ என்று அழைத்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42