எண்ணாகமம் 31 : 1 (ECTA)
மிதியானுக்கு எதிரான புனிதப் போர் ஆண்டவர் மோசேயிடம்,
எண்ணாகமம் 31 : 2 (ECTA)
“இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
எண்ணாகமம் 31 : 3 (ECTA)
மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
எண்ணாகமம் 31 : 4 (ECTA)
இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும்.
எண்ணாகமம் 31 : 5 (ECTA)
அப்படியே, இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்பட்டனர்.
எண்ணாகமம் 31 : 6 (ECTA)
மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை, குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார். அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார்.
எண்ணாகமம் 31 : 7 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.
எண்ணாகமம் 31 : 8 (ECTA)
இவ்வாறு, வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்; மிதியானின் ஐந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்; அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர்.
எண்ணாகமம் 31 : 9 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்; அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர்.
எண்ணாகமம் 31 : 10 (ECTA)
அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.
எண்ணாகமம் 31 : 11 (ECTA)
ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர்.
எண்ணாகமம் 31 : 12 (ECTA)
பின்பு, அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர்.
எண்ணாகமம் 31 : 13 (ECTA)
படை திரும்பி வருதல் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே வந்தனர்.
எண்ணாகமம் 31 : 14 (ECTA)
ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார்.
எண்ணாகமம் 31 : 15 (ECTA)
மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?
எண்ணாகமம் 31 : 16 (ECTA)
பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது. * எண் 25:1-9..
எண்ணாகமம் 31 : 17 (ECTA)
எனவே, ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.
எண்ணாகமம் 31 : 18 (ECTA)
ஆனால், ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணாகமம் 31 : 19 (ECTA)
உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள். உங்களையும், நீங்கள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள்.
எண்ணாகமம் 31 : 20 (ECTA)
உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.
எண்ணாகமம் 31 : 21 (ECTA)
பின்னர், குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே;
எண்ணாகமம் 31 : 22 (ECTA)
பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய,
எண்ணாகமம் 31 : 23 (ECTA)
நெருப்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும். அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும். மேலும், அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்; நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும்.
எண்ணாகமம் 31 : 24 (ECTA)
ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்; நீங்கள் பாளையத்துக்குள் வரலாம்.
எண்ணாகமம் 31 : 25 (ECTA)
கொள்ளைப் பொருளைப் பங்கிடுதல் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 31 : 26 (ECTA)
ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.
எண்ணாகமம் 31 : 27 (ECTA)
போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள்.
எண்ணாகமம் 31 : 28 (ECTA)
போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள்.
எண்ணாகமம் 31 : 29 (ECTA)
அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாகக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 31 : 30 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 31 : 31 (ECTA)
மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.
எண்ணாகமம் 31 : 32 (ECTA)
படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை; ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள்,
எண்ணாகமம் 31 : 34 (ECTA)
அறுபத்தோராயிரம் கழுதைகள்,
எண்ணாகமம் 31 : 35 (ECTA)
ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்; அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள்.
எண்ணாகமம் 31 : 36 (ECTA)
போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
எண்ணாகமம் 31 : 37 (ECTA)
ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து.
எண்ணாகமம் 31 : 38 (ECTA)
காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
எண்ணாகமம் 31 : 39 (ECTA)
கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஐந்நூறு; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
எண்ணாகமம் 31 : 40 (ECTA)
ஆள்கள் தொகை பதினாறாயிரம்; அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர்.
எண்ணாகமம் 31 : 41 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார்.
எண்ணாகமம் 31 : 42 (ECTA)
போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு;
எண்ணாகமம் 31 : 43 (ECTA)
மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
எண்ணாகமம் 31 : 44 (ECTA)
காளைகள் முப்பத்தாறாயிரம்.
எண்ணாகமம் 31 : 45 (ECTA)
கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு.
எண்ணாகமம் 31 : 46 (ECTA)
ஆள்கள் பதினாறாயிரம் பேர்.
எண்ணாகமம் 31 : 47 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார்.
எண்ணாகமம் 31 : 48 (ECTA)
பின்பு, பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள்- ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும்- மோசேயை அணுகினர்.
எண்ணாகமம் 31 : 49 (ECTA)
அவர்கள் மோசேயிடம், “உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை.
எண்ணாகமம் 31 : 50 (ECTA)
அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைகள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்” என்றனர்.
எண்ணாகமம் 31 : 51 (ECTA)
மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர்.
எண்ணாகமம் 31 : 52 (ECTA)
ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம்.
எண்ணாகமம் 31 : 53 (ECTA)
ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான்.
எண்ணாகமம் 31 : 54 (ECTA)
மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்; அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54