எண்ணாகமம் 29 : 1 (ECTA)
{புத்தாண்டு விழாப் படையல்கள்[BR](லேவி 23:23-25)} [PS] ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது.
எண்ணாகமம் 29 : 2 (ECTA)
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 3 (ECTA)
அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளைக்காக ஆறு படியும், ஆட்டுக் கிடாய்க்காக நான்கு படி அளவில் இருக்கும்.
எண்ணாகமம் 29 : 4 (ECTA)
ஏழு ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி அளவாக இருக்கும்.
எண்ணாகமம் 29 : 5 (ECTA)
மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்யப் பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.
எண்ணாகமம் 29 : 6 (ECTA)
இவை தவிர மாதந்தோறும் அளிக்கும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை அவர்கள் முறைமையின்படி ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலியாக அமையும்.[PE]
எண்ணாகமம் 29 : 7 (ECTA)
{பாவம் போக்கும் நாளுக்கான படையல்[BR](லேவி 23:26-32)} [PS] இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; அப்போது உங்களை நீங்களே வருத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருங்கள்.
எண்ணாகமம் 29 : 8 (ECTA)
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியொன்றை நீங்கள் அவருக்குச் செலுத்துங்கள். அதற்குத் தேவையானவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்கவேண்டும். [* லேவி 16:29-34. ]
எண்ணாகமம் 29 : 9 (ECTA)
அத்துடன் உணவுப்படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு காளைக்காக ஆறுபடியும் ஆட்டுக்கிடாய்க்காக நான்குபடி அளவில் இருக்கும். [* லேவி 16:29-34. ]
எண்ணாகமம் 29 : 10 (ECTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி என்ற அளவில் இருக்கும். [* லேவி 16:29-34. ]
எண்ணாகமம் 29 : 11 (ECTA)
மேலும், கறை நீக்கத்திற்கான பாவம் போக்கும் பலி, எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்துவாய். [* லேவி 16:29-34. ] [PE]
எண்ணாகமம் 29 : 12 (ECTA)
{கூடாரத் திருநாள் படையல்கள்[BR](லேவி 23:23-44)} [PS] ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது; ஏழு நாள்கள் நீங்கள் ஆண்டவருக்கு விழா எடுக்க வேண்டும். [* லேவி 16:29-34. ]
எண்ணாகமம் 29 : 13 (ECTA)
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புப் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டியவை; இளங்காளைகள் பதின் மூன்று, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 14 (ECTA)
அத்துடன் உணவுப் படையலான எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்கும் ஆறு படி இரண்டு ஆட்டுக்கிடாய்களில் ஒவ்வொன்றுக்கும் நான்குபடி பங்கு.
எண்ணாகமம் 29 : 15 (ECTA)
பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு படி அளவில் இருக்கும்.[PE]
எண்ணாகமம் 29 : 16 (ECTA)
[PS] மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய் செலுத்துவாய்.[PE]
எண்ணாகமம் 29 : 17 (ECTA)
[PS] இரண்டாம் நாள்; இளங்காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 18 (ECTA)
அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக் கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றிற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.
எண்ணாகமம் 29 : 19 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 20 (ECTA)
[PS] மூன்றாம் நாள்; காளைகள் பதினொன்று, ஆட்டுக் கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடையனவும் பழுதற்றனவுமான ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 21 (ECTA)
அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய படையல், நீர்மப் படையல்கள்.
எண்ணாகமம் 29 : 22 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 23 (ECTA)
[PS] நான்காம் நாள்; காளைகள் பத்து, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 24 (ECTA)
அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்;
எண்ணாகமம் 29 : 25 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதன் நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 26 (ECTA)
[PS] ஐந்தாம் நாள்; காளைகள் ஒன்பது, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்;
எண்ணாகமம் 29 : 27 (ECTA)
அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்.
எண்ணாகமம் 29 : 28 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 29 (ECTA)
[PS] ஆறாம் நாள்; காளைகள் எட்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.[PE]
எண்ணாகமம் 29 : 30 (ECTA)
[PS] அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல்கள்,
எண்ணாகமம் 29 : 31 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய அதன் உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 32 (ECTA)
[PS] ஏழாம் நாள்; காளைகள் ஏழு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 33 (ECTA)
அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.
எண்ணாகமம் 29 : 34 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தம் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 35 (ECTA)
[PS] எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடைபெறும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது.
எண்ணாகமம் 29 : 36 (ECTA)
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புக் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டுபவை; காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 37 (ECTA)
அவற்றுடன் முறைமைப்படி காளை, ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்;
எண்ணாகமம் 29 : 38 (ECTA)
மேலும், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.[PE]
எண்ணாகமம் 29 : 39 (ECTA)
[PS] நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே.[PE]
எண்ணாகமம் 29 : 40 (ECTA)
[PS] ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னார்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: