எண்ணாகமம் 27 : 1 (ECTA)
செலொபுகாதின் புதல்வியர் யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர்.
எண்ணாகமம் 27 : 2 (ECTA)
அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது:
எண்ணாகமம் 27 : 3 (ECTA)
எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை.
எண்ணாகமம் 27 : 4 (ECTA)
இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.”
எண்ணாகமம் 27 : 5 (ECTA)
மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார்.
எண்ணாகமம் 27 : 6 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 27 : 7 (ECTA)
செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே; அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய். [* எண் 36: 2 ]
எண்ணாகமம் 27 : 8 (ECTA)
நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு; மகன் இல்லாமலே ஒருவன் இறந்து விட்டால் அவன் உரிமைச் சொத்து அவன் மகளுக்குச் சேர வேண்டும்.
எண்ணாகமம் 27 : 9 (ECTA)
அவனுக்கு மகளும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 27 : 10 (ECTA)
அவனுக்குச் சகோதரரும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் தந்தையின் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 27 : 11 (ECTA)
அவன் தந்தைக்கும் சகோதரர் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் குடும்பத்தில் அவனுக்கடுத்த உறவினனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் அதை உடைமையாக்கிக் கொள்வான். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கும்.
எண்ணாகமம் 27 : 12 (ECTA)
மோசேக்குப் பதிலாக யோசுவா தேர்ந்தெடுக்கப்படல்
(இச 31:1-8) மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “இந்த அபாரிம் மலை மேல் ஏறிச் சென்று நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்துள்ள நாட்டைப் பார். [* இச 3:23-27; 32:48- 52 ]
எண்ணாகமம் 27 : 13 (ECTA)
நீ அதைப் பார்த்த பின் உன் சகோதரன் ஆரோன் சேர்த்துக் கொள்ளப்பட்டது போன்று, நீயும் உன் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய். [* இச 3:23-27; 32:48- 52 ]
எண்ணாகமம் 27 : 14 (ECTA)
ஏனெனில், சீன் பாலைநிலத்தில் மக்கள் கூட்டமைப்பு தண்ணீருக்காக வாக்குவாதம் செய்தபொழுது நீங்கள் அவர்கள் பார்வையில் என்னைப் புனிதப்படுத்தாது என் வார்த்தையை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்” — இவையே சீன் பாலை நிலத்தில் காதேசிலுள்ள மெரிபாவின் நீர்நிலைகள். [* இச 3:23-27; 32:48- 52 ]
எண்ணாகமம் 27 : 16 (ECTA)
“உயிர்க்கு எல்லாம் கடவுளாகிய ஆண்டவர் இந்த மக்கள் கூட்டமைப்புக்கு ஒருவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்துவாராக;
எண்ணாகமம் 27 : 17 (ECTA)
அவன் அவர்களுக்கு முன்னே போகவும், அவர்களுக்கு முன்னே வரவும் வேண்டும்; அவ்வாறே வெளியே நடத்திச் செல்லவும் உள்ளே அழைத்து வரவும் வேண்டும். இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது” என்றார். [* 1 அர 22:17; எசே 34:5; மத் 9:36; மாற் 6: 34 ]
எண்ணாகமம் 27 : 18 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்; அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்; நீ அவன் மேல் உன் கையை வை. [* விப 24: 13 ]
எண்ணாகமம் 27 : 19 (ECTA)
குரு எலயாசருக்கும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் முன்பாக அவனை நிற்கச் செய்; அவர்கள் பார்வையில் நீ அவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்து.
எண்ணாகமம் 27 : 20 (ECTA)
மக்கள் கூட்டமைப்பின் அனைத்து மக்களும் கீழ்ப்படியும்படி உன் அதிகாரத்தை அவனுடன் பகிர்ந்துகொள்.
எண்ணாகமம் 27 : 21 (ECTA)
அவன் குரு எலயாசருக்கு முன் நிற்க, அவனுக்காக எலயாசர் ஆண்டவர் முன்னிலையில் ஊரிம் வழங்கும் தீர்ப்பை நாடுவான்; அவனும் அவனுடன் இருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருமான மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எலயாசரின் வார்த்தையின்படியே வெளியே செல்லவும், உள்ளே வரவும் வேண்டும். [* விப 28:30; 1 சாமு 14:41; 28: 6 ]
எண்ணாகமம் 27 : 22 (ECTA)
ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவை அழைத்து குரு எலயாசர் மக்கள் அனைவர் முன்னிலையில் அவரை நிற்கச் செய்தார்.
எண்ணாகமம் 27 : 23 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தம் கைகளை அவர் மேல் வைத்து அவரைப் பொறுப்பாளராக நியமித்தார். * இச 31:23..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23