எண்ணாகமம் 26 : 1 (ECTA)
{இரண்டாம் கணக்கெடுப்பு} [PS] அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும்,
எண்ணாகமம் 26 : 2 (ECTA)
“இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்” என்றார்.
எண்ணாகமம் 26 : 3 (ECTA)
மோசேயும் குரு எலயாசரும் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபு சமவெளியில் அவர்களிடம்,
எண்ணாகமம் 26 : 4 (ECTA)
“ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இருபது வயதும் அதற்கு மேலுமுள்ளவர்களைக் கணக்கெடுங்கள்” என்று கூறினர். எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி வந்த இஸ்ரயேலின் ஆண் மக்கள் பின்வருமாறு;[PE]
எண்ணாகமம் 26 : 5 (ECTA)
[PS] ரூபன் இஸ்ரயேலின் தலைமகன். ரூபன் புதல்வர்; அனோக்கு, அனோக்கு வீட்டார்; பல்லூ, பல்லூ வீட்டார்;
எண்ணாகமம் 26 : 6 (ECTA)
எட்சரோன், எட்சரோன் வீட்டார், கர்மி, கர்மி வீட்டார்,
எண்ணாகமம் 26 : 7 (ECTA)
ரூபன் குடும்பங்கள் இவைகளே. இவற்றில் எண்ணப்பட்டோர் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பது பேர்.
எண்ணாகமம் 26 : 8 (ECTA)
பல்லூ புதல்வர் எலியாபு.
எண்ணாகமம் 26 : 9 (ECTA)
எலியாபு புதல்வர்; நெமுவேல், தாத்தான், அபிராம். கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே.
எண்ணாகமம் 26 : 10 (ECTA)
அப்போது நிலம் வாயைத் திறந்து கோராகுடன் சேர்ந்து அவர்களை விழுங்கியது. நெருப்பு இருநூற்றைம்பது பேரைக் கவ்வியது; அக்கூட்டம் மாண்டது; இவ்வாறு, அவர்கள் ஓர் எச்சரிப்பாயினர்.
எண்ணாகமம் 26 : 11 (ECTA)
ஆனால், கோராகு புதல்வர் மடியவில்லை.[PE]
எண்ணாகமம் 26 : 12 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாகச் சிமியோன் புதல்வர்; நெமுவேல், நெமுவேல் வீட்டார்; யாமீன், யாமீன் வீட்டார்; யாக்கின், யாக்கின் வீட்டார்;
எண்ணாகமம் 26 : 13 (ECTA)
செராகு, செராகின் வீட்டார்; சாவூல், சாவூல் வீட்டார்;
எண்ணாகமம் 26 : 14 (ECTA)
சிமியோன் குடும்பங்கள் இவையே. இவர்கள் இருபத்து இரண்டாயிரத்து இருநூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 15 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்; செப்போன், செப்போன் வீட்டார்; அக்கி, அக்கி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்;
எண்ணாகமம் 26 : 16 (ECTA)
ஒசுனீ, ஒசுனீ வீட்டார்; ஏரி, ஏரி வீட்டார்;
எண்ணாகமம் 26 : 17 (ECTA)
அரோது, அரோது வீட்டார்; அரேலி, அரேலி வீட்டார்.
எண்ணாகமம் 26 : 18 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி காத்துப் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 19 (ECTA)
[PS] யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்; ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர்.
எண்ணாகமம் 26 : 20 (ECTA)
தங்கள் குடும்பங்கள் வாரியாக யூதாவின் புதல்வர்; சேலா, சேலா வீட்டார்; பெரேட்சு, பெசேட்சு வீட்டார்; செராகு, செராகு வீட்டார்.
எண்ணாகமம் 26 : 21 (ECTA)
பெரேட்சின் புதல்வர்; எட்சரோன், எட்சரோன் வீட்டார்; ஆமூல், ஆமூல் வீட்டார்;
எண்ணாகமம் 26 : 22 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி யூதாவின் குடும்பங்கள் இவையே. அவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 23 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக இசக்கார் புதல்வர்; தோலா, தோலா வீட்டார்; பூவா, பூவா வீட்டார்;
எண்ணாகமம் 26 : 24 (ECTA)
யாசூபு, யாசூபு வீட்டார்; சிம்ரோன், சிம்ரோன் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 25 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி இசக்கார் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 26 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக செபுலோன் புதல்வர்; செரேது, செரேது வீட்டார்; ஏலோன், ஏலோன் வீட்டார்; யாகுலவேல், யாகுலவேல் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 27 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி செபுலோன் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 28 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் மனாசேயும் எப்ராயிமும் ஆவர்.
எண்ணாகமம் 26 : 29 (ECTA)
மனாசே புதல்வர்; மாக்கிர், மாக்கிர் வீட்டார்; மாக்கிர் கிலயாதின் தந்தை; கிலயாது, கிலயாது வீட்டார்.
எண்ணாகமம் 26 : 30 (ECTA)
கிலயாது புதல்வர் இவர்களே; இயசேர், இயசேர் வீட்டார்; ஏலேக்கு, ஏலேக்கு வீட்டார்;
எண்ணாகமம் 26 : 31 (ECTA)
அசிரியேல், அசிரியேல் வீட்டார்; செக்கேம், செக்கேம் வீட்டார்;
எண்ணாகமம் 26 : 32 (ECTA)
செமிதா, செமிதா வீட்டார்; ஏபேர், ஏபேர் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 33 (ECTA)
ஏபேர் மகன் செலோபுகாதுக்குப் புதல்வர்கள் இல்லை; ஆனால் புதல்வியர் இருந்தனர்; செலோபுகாதின் புதல்வியர் பெயர்கள்; மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா.
எண்ணாகமம் 26 : 34 (ECTA)
மனாசேயின் குடும்பங்கள் இவைகளே. அவர்கள் தொகை ஐம்பத்தீராயிரத்து எழுநூறு.
எண்ணாகமம் 26 : 35 (ECTA)
தங்கள் குடும்பங்கள் வாரியாக எப்ராயிம் புதல்வர் இவர்களே; சுத்தேலாகு, சுத்தேலாகு வீட்டார்; பெக்கேர், பெக்கேர் வீட்டார்; தகான், தகான் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 36 (ECTA)
சுத்தேலாகின் புதல்வர், ஏரானும் ஏரான் வீட்டாருமே.[PE]
எண்ணாகமம் 26 : 37 (ECTA)
[PS] அவர்கள் எண்ணிக்கைப்படி எப்ராயிம் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறு பேர். ஆக மொத்தம் தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் இவர்களே.[PE]
எண்ணாகமம் 26 : 38 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர்; பேலா, பேலா வீட்டார், அசுபேல், அசுபேல் வீட்டார்; அகிராம், அகிராம் வீட்டார்;
எண்ணாகமம் 26 : 39 (ECTA)
செபூபாம், செபூபாம் வீட்டார்; கூபாம், கூபாம் வீட்டார்;
எண்ணாகமம் 26 : 40 (ECTA)
பேலா புதல்வர் அருது, நாமான் என்போரே; அருது, அருது வீட்டார்; நாமான், நாமான் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 41 (ECTA)
தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர் இவர்களே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூறு.[PE]
எண்ணாகமம் 26 : 42 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக தாண் புதல்வர் இவர்களே; சூகாம், சூகாம் வீட்டார். தங்கள் குடும்பங்கள் வாரியாக இவைகளே தாண் குடும்பங்கள்.
எண்ணாகமம் 26 : 43 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி சூகாம் குடும்பத்தினர் அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 44 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக ஆசேர் புதல்வர்; இம்னா, இம்னா வீட்டார்; இசுவி, இசுவி வீட்டார்; பெரியா, பெரியா வீட்டார்.
எண்ணாகமம் 26 : 45 (ECTA)
பெரியா புதல்வர்; எபேர், எபேர் வீட்டார்; மல்கியேல், மல்கியேல் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 46 (ECTA)
ஆசேர் புதல்வி பெயர் செராகு.
எண்ணாகமம் 26 : 47 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி ஆசேர் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.[PE]
எண்ணாகமம் 26 : 48 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக நப்தலி புதல்வர்; யாகுட்சேல், யாகுட்சேல் வீட்டார்; கூனி, கூனி வீட்டார்;
எண்ணாகமம் 26 : 49 (ECTA)
எட்சேர், எட்சேர் வீட்டார், சில்லேம், சில்லேம் வீட்டார்.
எண்ணாகமம் 26 : 50 (ECTA)
அவர்கள் எண்ணிக்கைப்படி நப்தலிக் குடும்பங்கள் இவையே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து நானூறு.
எண்ணாகமம் 26 : 51 (ECTA)
ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.[PE]
எண்ணாகமம் 26 : 52 (ECTA)
[PS] ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 26 : 53 (ECTA)
பெயர்களின் எண்ணிக்கைக்குத்தக்கவாறு இவர்களுக்கு இந்த நாடு உரிமைச் சொத்தாகப் பங்கிடப்படும். [* எண் 34:13; யோசு 14:1-2 ]
எண்ணாகமம் 26 : 54 (ECTA)
குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் நீ அதனதன் உரிமைச் சொத்தைக் கொடுப்பாய். ஒவ்வொன்றுக்கும் அதன் தொகைக்கேற்ப உரிமைச் சொத்து வழங்கப்படும். [* எண் 34:13; யோசு 14:1-2 ]
எண்ணாகமம் 26 : 55 (ECTA)
ஆயினும், திருவுளச் சீட்டு முறையிலேயே நாடு பங்கிடப்படும். அவர்கள் தங்கள் மூதாதையர் குலப்பெயர்கள் வாரியாக உரிமைச் சொத்தைப் பெறுவர். [* எண் 34:13; யோசு 14:1-2 ]
எண்ணாகமம் 26 : 56 (ECTA)
பெரியவற்றுக்கும், சிறியவற்றுக்குமிடையே திருவுளச் சீட்டு முறைப்படி அதனதன் உரிமைச் சொத்து பங்கிடப்படும். [* எண் 34:13; யோசு 14:1-2 ] [PE]
எண்ணாகமம் 26 : 57 (ECTA)
[PS] தங்கள் குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்ட லேவியர் இவர்களே; கேர்சோன், கேர்சோன் வீட்டார்; கெகாது, கெகாது வீட்டார்; மெராரி, மெராரி வீட்டார். [* எண் 34:13; யோசு 14:1-2 ]
எண்ணாகமம் 26 : 58 (ECTA)
லேவி குடும்பங்களாவன; லிப்னி குடும்பம், எபிரோன் குடும்பம், மக்லி குடும்பம், மூசி குடும்பம், கோராகு குடும்பம். கெகாது அம்ராமின் தந்தை.
எண்ணாகமம் 26 : 59 (ECTA)
அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்; லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
எண்ணாகமம் 26 : 60 (ECTA)
ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர்.
எண்ணாகமம் 26 : 61 (ECTA)
ஆனால், நாதாபும் அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர். [* எண் 3:2 ]
எண்ணாகமம் 26 : 62 (ECTA)
லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை. [* லேவி 10:1-2; எண் 3:4 ] [PE]
எண்ணாகமம் 26 : 63 (ECTA)
[PS] மோசேயாலும் குரு எலயாரசராலும் எண்ணப்பட்டோர் இவர்களே. அவர்கள் இஸ்ரயேல் மக்களை எரிகோவுக்கு எதிரே யோர்தானை அடுத்த மோவாபியச் சமவெளியில் எண்ணினார்கள்.
எண்ணாகமம் 26 : 64 (ECTA)
ஆனால், சீனாய்ப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை.
எண்ணாகமம் 26 : 65 (ECTA)
ஏனெனில், “அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர்” என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். எபுன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.[PE]
❮
❯