எண்ணாகமம் 23 : 1 (ECTA)
பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்” என்றார்.
எண்ணாகமம் 23 : 2 (ECTA)
பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர்.
எண்ணாகமம் 23 : 3 (ECTA)
பிலயாம், பாலாக்கைப் பார்த்து, “உம் எரிபலியருகே நின்று கொள்ளும்; நான் போகிறேன்; அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன்” என்றார். பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார்.
எண்ணாகமம் 23 : 4 (ECTA)
கடவுள் பிலயாமைச் சந்தித்தார். பிலயாம் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன்” என்றார்.
எண்ணாகமம் 23 : 5 (ECTA)
ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்றார். * எண் 31:8; 2 பேது 2:15-16; யூதா 11..
எண்ணாகமம் 23 : 6 (ECTA)
அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான்.
எண்ணாகமம் 23 : 7 (ECTA)
பிலயாம் திருஉரையாகக் கூறியது:“ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான். ‘வா, எனக்காக யாக்கோபைச் சபி! வா, இஸ்ரயேலைப் பழித்துரை!’ என்கிறான்.
எண்ணாகமம் 23 : 8 (ECTA)
கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்?
எண்ணாகமம் 23 : 9 (ECTA)
மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்; குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்; இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை;
எண்ணாகமம் 23 : 10 (ECTA)
யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்? நான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக! என் முடிவும் அவர் போன்று இருப்பதாக!”
எண்ணாகமம் 23 : 11 (ECTA)
பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக் கொண்டுவந்தேன்; ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்!” என்றான்.
எண்ணாகமம் 23 : 12 (ECTA)
அதற்கு மறுமொழியாக அவர், “ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?” என்றார்.
எண்ணாகமம் 23 : 13 (ECTA)
பிலயாமின் இரண்டாம் உரை பாலாக்கு அவரிடம், “வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு, எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்” என்றான்;
எண்ணாகமம் 23 : 14 (ECTA)
அவ்வாறே, பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்; அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.
எண்ணாகமம் 23 : 15 (ECTA)
பிலயாம் பாலாக்கிடம், “நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்” என்றார்.
எண்ணாகமம் 23 : 16 (ECTA)
ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்; அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்று சொன்னார்.
எண்ணாகமம் 23 : 17 (ECTA)
அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், “ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?” என்று கேட்டான்.
எண்ணாகமம் 23 : 18 (ECTA)
பிலயாம் திருஉரையாகக் கூறியது: “பாலாக்கு, எழுந்து கேள்; சிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு.
எண்ணாகமம் 23 : 19 (ECTA)
பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்; மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர். அவர் சொல்லியதைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததை நிறைவேற்றிமலிருப்பாரா?
எண்ணாகமம் 23 : 20 (ECTA)
இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்; அவர் ஆசி பொழிந்துள்ளார்; அதை என்னால் மாற்றியமைக்க இயலாது.
எண்ணாகமம் 23 : 21 (ECTA)
யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை! இஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை! ஆண்டவராம் கடவுள் அவர்களோடிருக்கிறார்? ஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு.
எண்ணாகமம் 23 : 22 (ECTA)
எகிப்திலிருந்து இறைவன் அவர்களை வெளிக்கொணர்கின்றார்; காண்டாமிருகத்தின் கொம்புகள் அவர்களுக்கு உண்டு.
எண்ணாகமம் 23 : 23 (ECTA)
யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை. இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை; யாக்கோபையும் இஸ்ரயேலையும் பற்றி இப்போது சொல்லப்படுவது; “எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்!
எண்ணாகமம் 23 : 24 (ECTA)
இதோ, ஒரு மக்களினம்; அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது; ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.”
எண்ணாகமம் 23 : 25 (ECTA)
பாலாக்கு பிலாயாமிடம், “ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்” என்றான்.
எண்ணாகமம் 23 : 26 (ECTA)
ஆனால், பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, “ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?” என்றார்.
எண்ணாகமம் 23 : 27 (ECTA)
பிலயாமின் மூன்றாம் உரை பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்” என்றான்.
எண்ணாகமம் 23 : 28 (ECTA)
அங்ஙனமே, பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்; அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது.
எண்ணாகமம் 23 : 29 (ECTA)
பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்; எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்” என்றார்.
எண்ணாகமம் 23 : 30 (ECTA)
பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30