எண்ணாகமம் 22 : 1 (ECTA)
பிலயாமுக்காக மோவாபு மன்னன் ஆளனுப்புதல் அதன் பின்னர், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள்.
எண்ணாகமம் 22 : 2 (ECTA)
சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.
எண்ணாகமம் 22 : 3 (ECTA)
இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று; அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது.
எண்ணாகமம் 22 : 4 (ECTA)
மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், “மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும்” என்று கூறிற்று. அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு.
எண்ணாகமம் 22 : 5 (ECTA)
அவன் பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் பிலயாமை அழைத்துவரத் தூதரை அனுப்பினான்; அந்த இடம் ஆமாபு நாட்டின் ஆற்றருகே இருந்தது. அவன் கூறியது:“ இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எனக்கு எதிரில் குடியேறியிருக்கிறார்கள். * எண் 31:8; 2 பேது 2:15-16; யூதா 11..
எண்ணாகமம் 22 : 6 (ECTA)
இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக இம்மக்களைச் சபித்துவிடும்; அவர்கள் என்னிலும் மிகவும் வலிமை மிக்கவராய் இருக்கின்றனர்; ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து நாட்டிலிருந்து துரத்தக்கூடும்; ஏனெனில், நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான் என்று நான் அறிவேன்.”
எண்ணாகமம் 22 : 7 (ECTA)
அங்ஙனமே, மோவாபு மூப்பரும் மிதியான் மூப்பரும் குறிசொல்வதற்கான கட்டணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போயினர். அவர்கள் பிலயாமிடம் வந்து பாலாக்கு அனுப்பிய செய்தியைச் சொன்னார்கள்.
எண்ணாகமம் 22 : 8 (ECTA)
அவர் அவர்களிடம், “இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்; ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன்” என்றார். அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள்.
எண்ணாகமம் 22 : 9 (ECTA)
கடவுள் பிலயாமிடம் வந்து, “உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்?” என்று கேட்டார்.
எண்ணாகமம் 22 : 10 (ECTA)
பிலயாம் கடவுளிடம், “மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்;
எண்ணாகமம் 22 : 11 (ECTA)
‘இதோ! ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்; ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும்’ என்று கூறியனுப்பியுள்ளான்” என்றார்.
எண்ணாகமம் 22 : 12 (ECTA)
கடவுள் பிலயாமிடம், “நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில், அவர்கள் ஆசி பெற்றோர்” என்று கூறினார்.
எண்ணாகமம் 22 : 13 (ECTA)
அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்; நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார்” என்று சொன்னார்.
எண்ணாகமம் 22 : 14 (ECTA)
அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், “பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார்” என்றார்கள்.
எண்ணாகமம் 22 : 15 (ECTA)
மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான்.
எண்ணாகமம் 22 : 16 (ECTA)
அவர்கள் பிலயாமிடம் வந்து, “சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, “என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும்;
எண்ணாகமம் 22 : 17 (ECTA)
உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்; நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்; வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்’” என்றனர்.
எண்ணாகமம் 22 : 18 (ECTA)
ஆனால், பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;
எண்ணாகமம் 22 : 19 (ECTA)
இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்; ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.
எண்ணாகமம் 22 : 20 (ECTA)
கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், “இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 22 : 21 (ECTA)
அங்ஙனமே, பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.
எண்ணாகமம் 22 : 22 (ECTA)
பிலயாமும் அவர் கழுதையும் ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.
எண்ணாகமம் 22 : 23 (ECTA)
ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில் நின்றுகொண்டிருப்பதைக் கழுதை கண்டது; எனவே, கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது; பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார்.
எண்ணாகமம் 22 : 24 (ECTA)
அடுத்து, ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபுறமும் சுவர்களுள்ள ஒரு குறுகிய பாதையில் நின்றார்.
எண்ணாகமம் 22 : 25 (ECTA)
ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது; ஆதலால், அதை அவர் மறுபடியும் அடித்தார்.
எண்ணாகமம் 22 : 26 (ECTA)
பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார்.
எண்ணாகமம் 22 : 27 (ECTA)
ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார்.
எண்ணாகமம் 22 : 28 (ECTA)
உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது அவரிடம், “நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” என்றது.
எண்ணாகமம் 22 : 29 (ECTA)
பிலயாம் கழுதையிடம், “நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்” என்றார்.
எண்ணாகமம் 22 : 30 (ECTA)
கழுதை பிலயாமிடம், “நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா?” என்றது, அதற்கு அவர், “இல்லை” என்றார்.
எண்ணாகமம் 22 : 31 (ECTA)
ஆண்டவர் பிலயாமின் கண்களைத் திறந்தார், கையில் உருவிய வாளுடன் ஆண்டவரின் தூதர் பாதையில் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டார்; அவர் தலை வணங்கி முகங்குப்புற விழுந்தார்.
எண்ணாகமம் 22 : 32 (ECTA)
ஆண்டவரின் தூதர் அவரிடம் கூறியது: “ஏன் மூன்று முறை இவ்வாறு கழுதையை அடித்தாய்? இதோ நான் உனக்கு எதிரியாக வந்திருக்கிறேன்; ஏனெனில், என் பார்வையில் உன் வழி தவறானது.
எண்ணாகமம் 22 : 33 (ECTA)
இந்தக் கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று முறையும் என் முன்னின்று திரும்பி விலகியது. அது என் முன்னின்று திரும்பி விலகாதிருந்தால் உறுதியாக இப்போதே உன்னை நான் கொன்று, அதை வாழ விட்டிருப்பேன்.”
எண்ணாகமம் 22 : 34 (ECTA)
பிலயாம் ஆண்டவரின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன்; நீர் பாதையிலே எனக்கு எதிராக நின்றதை நான் அறிந்து கொள்ளவில்லை; எனவே, இப்போதும் இது உம் பார்வையில் தீயதாக இருப்பின் நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றார்.
எண்ணாகமம் 22 : 35 (ECTA)
ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், “இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும், நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்” என்றார். அவ்வாறே, பிலயாம் பாலாக்கு அனுப்பிய தலைவர்களுடன் போனார்.
எண்ணாகமம் 22 : 36 (ECTA)
பாலாக்கு பிலயாமை வரவேற்றல் பிலயாம் வந்திருப்பதைப் பாலாக்கு கேட்டதும் அவரைச் சந்திக்கும்படி அவன் மோவாபு நகருக்குப் புறப்பட்டுப்போனான்; அது அர்னோன் எல்லையின் இறுதியில் இருந்தது.
எண்ணாகமம் 22 : 37 (ECTA)
பாலாக்கு பிலயாமிடம், “நான் உம்மை அழைத்து வர ஆளனுப்பவில்லையா? பின்னர் ஏன் நீர் வரவில்லை? உமக்கு மரியாதை செய்ய நான் இயலாதவனோ?” என்று கேட்டான்.
எண்ணாகமம் 22 : 38 (ECTA)
பிலயாம் பாலாக்கிடம், “இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்; நானாக எதையும் பேச இப்போது என்னால் இயலாதே! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 22 : 39 (ECTA)
அதன்பின், பிலயாம் பாலாக்குடன் போனார்; அவர்கள் கிர்யத்து குசோத்துக்கு வந்தனர்.
எண்ணாகமம் 22 : 40 (ECTA)
பாலாக்கு ஆடு மாடுகளைப் பலியிட்டு அவற்றிலிருந்து பிலயாமுக்கும் அவரோடிருந்த தன் அலுவலர்க்கும் கொடுத்தடுப்பினான்.
எண்ணாகமம் 22 : 41 (ECTA)
பிலயாமின் முதல் உரை மறுநாள் பாலாக்கு பிலயாமை பாமோத்து பாகாலுக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்; அங்கிருந்து அவன் இஸ்ரயேல் மக்களில் மிகவும் அண்மையிலிருந்தோரைப் பார்த்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41