எண்ணாகமம் 21 : 1 (ECTA)
கானானியர்மேல் வெற்றி இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்; அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான். [* எண் 33: 40 ]
எண்ணாகமம் 21 : 2 (ECTA)
உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, “நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அவர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்” என்று கூறியது.
எண்ணாகமம் 21 : 3 (ECTA)
அவ்வாறே, ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்; அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்; எனவே, அந்த இடத்தின் பெயர் ‘ஓர்மா’* என்று வழங்கியது. * எபிரேயத்தில், ‘அழிவு’ என்பது பொருள்.
எண்ணாகமம் 21 : 4 (ECTA)
வெண்கலப் பாம்பு ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். [* இச 2: 1 ]
எண்ணாகமம் 21 : 5 (ECTA)
மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். [* 1 கொரி 10: 9 ]
எண்ணாகமம் 21 : 6 (ECTA)
உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை* மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். [* 1 கொரி 10: 9 ; எபிரேயத்தில், ‘சேராபின்கள்’ எனவும் பொருள்படும்.. ]
எண்ணாகமம் 21 : 7 (ECTA)
அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார்.
எண்ணாகமம் 21 : 8 (ECTA)
அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.
எண்ணாகமம் 21 : 9 (ECTA)
அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். [* 2 அர 18:4; யோவா 3: 14 ]
எண்ணாகமம் 21 : 10 (ECTA)
கோர் மலை முதல் மோவாபியர் பள்ளத்தாக்குவரை பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 21 : 11 (ECTA)
அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 21 : 12 (ECTA)
அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் செரத் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 21 : 13 (ECTA)
அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்; அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது; அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும்.
எண்ணாகமம் 21 : 14 (ECTA)
“ஆண்டவரின் போர்கள்” என்ற நூல் இவ்வாறு கூறுகிறது; “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும்,
எண்ணாகமம் 21 : 15 (ECTA)
ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு”.
எண்ணாகமம் 21 : 16 (ECTA)
அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். “மக்களை ஒன்றுகூட்டு; நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே.
எண்ணாகமம் 21 : 17 (ECTA)
பின், இஸ்ரயேல் பாடிய பாடல்; ‘ஊறிப் பெருகிடு கிணறே! அதைப் புகழ்ந்து பாடுங்கள்;
எண்ணாகமம் 21 : 18 (ECTA)
‘இளவரசர்கள் செங்கோலால் அகழ்ந்த கிணறு இதுவே; மேன்மக்கள் கோல்கொண்டு குடைந்த கிணறும் இதுவே’ பின், பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர்.
எண்ணாகமம் 21 : 19 (ECTA)
மத்தானாவிலிருந்து நகலியேலுக்குச் சென்றனர்; நகலியேலிலிருந்து பாமோத்துக்குச் சென்றனர்.
எண்ணாகமம் 21 : 20 (ECTA)
பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர்.
எண்ணாகமம் 21 : 21 (ECTA)
சீகோன், ஓகு மன்னர்களை வெல்லுதல்
(இச 2:26-3:11) இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது:
எண்ணாகமம் 21 : 22 (ECTA)
“உம் நாடு வழியே நான் செல்ல அனுமதியும்; நாங்கள் வயல் பக்கமோ திராட்சைத் தோட்டப் பக்கமோ திரும்ப மாட்டோம்; நாங்கள் யாதொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் உம் எல்லையைத் தாண்டும் வரை அரச நெடுஞ்சாலை வழியாகவே செல்வோம்.”
எண்ணாகமம் 21 : 23 (ECTA)
ஆனால், தன் எல்லை வழியே இஸ்ரயேல் கடந்து செல்ல சீகோன் இடந்தரவில்லை. அவன் தன் ஆள்கள் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகப் பாலை நிலத்துக்குச் சென்றான்; யாகாசுக்கு வந்து இஸ்ரயேலை எதிர்த்துப் போரிட்டான்.
எண்ணாகமம் 21 : 24 (ECTA)
இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது; அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது.
எண்ணாகமம் 21 : 25 (ECTA)
இஸ்ரயேல் இந்த நகர்கள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது; இஸ்ரயேல் எமோரியரின் அனைத்து நகர்களிலும் எஸ்போனிலும் அதன் எல்லாக் கிராமங்களிலும் குடியிருந்தது.
எண்ணாகமம் 21 : 26 (ECTA)
“எஸ்போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்; அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான்.
எண்ணாகமம் 21 : 27 (ECTA)
எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்: “எஸ்போனுக்கு வாருங்கள்; அது கட்டப்படட்டும்; சீகோன் நகர் நிறுவப்படட்டும்.
எண்ணாகமம் 21 : 28 (ECTA)
நெருப்பு, எஸ்போனிலிருந்தும் நெருப்புத் தழல் சீகோன் நகரிலிருந்தும் சென்றது; அது மோவாபிலுள்ள அர் நகரையும் அர்னோன் மேடுகளிலுள்ள தலைவர்களையும் விழுங்கிவிட்டது. [* எரே 48:45- 46 ]
எண்ணாகமம் 21 : 29 (ECTA)
மோவாபு! உனக்கு ஐயோ கேடு; கெமொசின் மக்களே, உங்களுக்கு முடிவு வந்துவிட்டது; எமோரிய அரசன் சீகோனுக்கு கெமோசின் காரணமாய் அவன் புதல்வர் புறங்காட்டி ஓடினர்; அவன் புதல்வியர் சிறைக் கைதிகளாயினர்; [* எரே 48:45- 46 ]
எண்ணாகமம் 21 : 30 (ECTA)
எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது; மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம்.”
எண்ணாகமம் 21 : 31 (ECTA)
இவ்வாறு, இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று.
எண்ணாகமம் 21 : 32 (ECTA)
பின்னர், யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்; அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர்.
எண்ணாகமம் 21 : 33 (ECTA)
அதன் பிறகு அவர்கள் திரும்பிப் பாசான் நெடுஞ்சாலை வழியாகப் போனார்கள்; பாசான் மன்னன் ஓகு என்பவனும் அவன் மக்கள் அனைவரும், எதிரேயி என்னுமிடத்தில் போர் புரியும்படி அவர்களுக்கு எதிராக வந்தனர்.
எண்ணாகமம் 21 : 34 (ECTA)
ஆனால், ஆண்டவர் மோசேயிடம், “அவனுக்கு அஞ்ச வேண்டாம், நான் அவனையும் அவன் மக்கள் அனைவரையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்; நீ எஸ்போனில் வாழ்ந்த எமோரியர் மன்னன் சீகோனுக்குச் செய்தது போல இவனுக்கும் செய்வாய்” என்றார்.
எண்ணாகமம் 21 : 35 (ECTA)
அங்ஙனமே, அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்; அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35