எண்ணாகமம் 2 : 1 (ECTA)
பாளையத்தில் குலங்களின் ஒழுங்கமைப்பு ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்; எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 3 (ECTA)
கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர் யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர். யூதா மக்களின் தலைவன் நக்சோன்; இவன் அம்மினதாபின் மகன். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 4 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 5 (ECTA)
அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்; இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்; இவன் சூவாரின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 6 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து நாலாயிரத்து நானூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 7 (ECTA)
அடுத்து வருவது செபுலோன் குலம்; செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு; இவன் கேலோனின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 8 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தேழாயிரத்து நானூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 9 (ECTA)
இவ்வாறாக, யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு; இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 10 (ECTA)
தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 11 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 12 (ECTA)
இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்; சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல், இவன் சுரிசத்தாயின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 13 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 14 (ECTA)
அடுத்து வருவது காத்து குலம்; காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 15 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 16 (ECTA)
இவ்வாறாக, ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது; இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 17 (ECTA)
அதன் பின், சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும். அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 18 (ECTA)
மேற்கே பாளையமிறங்க வேண்டியவர் எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 19 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஐந்நூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 20 (ECTA)
அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்; மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 21 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 22 (ECTA)
அடுத்து வருவது பென்யமின் குலம்; பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்; இவன் கிதயோனியின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 23 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 24 (ECTA)
இவ்வாறாக, எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு. அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 25 (ECTA)
வடக்கே பாளையமிறங்க வேண்டியவர் தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; தாண் மக்களின் தலைவன் அகியேசர்; இவன் அம்மி சத்தாயின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 26 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 27 (ECTA)
அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்; ஆசேர் மக்களின் தலைவன் பகியேல், இவன் ஒக்ரானின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 28 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 29 (ECTA)
அடுத்து வருவது நப்தலிக் குலம்;நப்தலி மக்களின் தலைவன் அகிரா; இவன் ஏனானின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 30 (ECTA)
எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து மூவாயிரத்து நானூறு. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 31 (ECTA)
இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 32 (ECTA)
தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே; அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 33 (ECTA)
ஆனால், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை. * எண் 26:1-51..
எண்ணாகமம் 2 : 34 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர். * எண் 26:1-51..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34