எண்ணாகமம் 16 : 1 (ECTA)
கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும், * யூதா 11..
எண்ணாகமம் 16 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.
எண்ணாகமம் 16 : 3 (ECTA)
அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், “நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்; மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்; ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்; அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
எண்ணாகமம் 16 : 4 (ECTA)
மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.
எண்ணாகமம் 16 : 5 (ECTA)
அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்; தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்;
எண்ணாகமம் 16 : 6 (ECTA)
செய்யவேண்டியது இதுவே; கோராகே! அவன் கூட்டத்தவரே! தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்;
எண்ணாகமம் 16 : 7 (ECTA)
நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்; ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்; லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.
எண்ணாகமம் 16 : 8 (ECTA)
மேலும், மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்;
எண்ணாகமம் 16 : 9 (ECTA)
இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா?
எண்ணாகமம் 16 : 10 (ECTA)
அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ?
எண்ணாகமம் 16 : 11 (ECTA)
ஆதலால், நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்; ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்?
எண்ணாகமம் 16 : 12 (ECTA)
பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, “நாங்கள் வர மாட்டோம்;
எண்ணாகமம் 16 : 13 (ECTA)
இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா?
எண்ணாகமம் 16 : 14 (ECTA)
மேலும், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை; திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை; இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம்” என்றனர்.
எண்ணாகமம் 16 : 15 (ECTA)
மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார்.
எண்ணாகமம் 16 : 16 (ECTA)
பின் மோசே கோராகிடம், “நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும் — நீயும் அவர்களும் ஆரோனும் — நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்;
எண்ணாகமம் 16 : 17 (ECTA)
உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும். நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
எண்ணாகமம் 16 : 18 (ECTA)
அவ்வாறே, ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்; அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்; அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.
எண்ணாகமம் 16 : 19 (ECTA)
பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.
எண்ணாகமம் 16 : 20 (ECTA)
ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
எண்ணாகமம் 16 : 21 (ECTA)
“ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
எண்ணாகமம் 16 : 22 (ECTA)
அவர்களோ முகங்குப்புறவிழுந்து, “கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?” என்றனர்.
எண்ணாகமம் 16 : 23 (ECTA)
உடனே ஆண்டவர் மோசேயிடம்,
எண்ணாகமம் 16 : 24 (ECTA)
“கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார்.
எண்ணாகமம் 16 : 25 (ECTA)
மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்; இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.
எண்ணாகமம் 16 : 26 (ECTA)
அவர் மக்கள் கூட்டமைப்பிடம், “இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்; அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்” என்றார்.
எண்ணாகமம் 16 : 27 (ECTA)
அவ்வாறே, கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.
எண்ணாகமம் 16 : 28 (ECTA)
மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.
எண்ணாகமம் 16 : 29 (ECTA)
எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.
எண்ணாகமம் 16 : 30 (ECTA)
ஆனால், ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால்- நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால்- அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.
எண்ணாகமம் 16 : 31 (ECTA)
இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது;
எண்ணாகமம் 16 : 32 (ECTA)
தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.
எண்ணாகமம் 16 : 33 (ECTA)
இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்; தரை தன் வாயை மூடிக்கொண்டது; சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர்.
எண்ணாகமம் 16 : 34 (ECTA)
அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர்.
எண்ணாகமம் 16 : 35 (ECTA)
பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.
எண்ணாகமம் 16 : 36 (ECTA)
தூபகலசங்கள் பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
எண்ணாகமம் 16 : 37 (ECTA)
எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.
எண்ணாகமம் 16 : 38 (ECTA)
ஏனெனில், அவை புனிதமானவை; பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன; அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்; அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்; ஆகவேதான் அவை புனிதமானவை; இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.
எண்ணாகமம் 16 : 39 (ECTA)
அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்; பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.
எண்ணாகமம் 16 : 40 (ECTA)
இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்; இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்; மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.
எண்ணாகமம் 16 : 41 (ECTA)
ஆரோன் மக்களை மீட்டல் ஆயினும், மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, “ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்” என்றனர்.
எண்ணாகமம் 16 : 42 (ECTA)
மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்; உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது.
எண்ணாகமம் 16 : 43 (ECTA)
மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள்.
எண்ணாகமம் 16 : 44 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
எண்ணாகமம் 16 : 45 (ECTA)
நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.” மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர்.
எண்ணாகமம் 16 : 46 (ECTA)
மோசே ஆரோனிடம், “உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்; ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்ளைநோய் தொடங்கிவிட்டது” என்றார்.
எண்ணாகமம் 16 : 47 (ECTA)
மோசே சொன்னபடியே ஆரோன் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்; அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார்.
எண்ணாகமம் 16 : 48 (ECTA)
அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது.
எண்ணாகமம் 16 : 49 (ECTA)
அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலாயிரத்து எழுநூறு பேர்.
எண்ணாகமம் 16 : 50 (ECTA)
கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50