எண்ணாகமம் 14 : 1 (ECTA)
மக்களின் முறையீடு உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர்.
எண்ணாகமம் 14 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், “எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடிந்தால் அதுவும் நலமே!
எண்ணாகமம் 14 : 3 (ECTA)
வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்? எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள்! நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ?” என்றனர்.
எண்ணாகமம் 14 : 4 (ECTA)
மேலும், அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம்” என்றனர்.
எண்ணாகமம் 14 : 5 (ECTA)
உடனே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தனர்.
எண்ணாகமம் 14 : 6 (ECTA)
மேலும், நாட்டை உளவு பார்த்து வந்தவர்களிடையே இருந்த நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு,
எண்ணாகமம் 14 : 7 (ECTA)
இஸ்ரயேலர் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் கடந்து சென்ற நாடு மிகச் சிறந்த நாடு.
எண்ணாகமம் 14 : 8 (ECTA)
ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார்.
எண்ணாகமம் 14 : 9 (ECTA)
எனவே,ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்; நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்; அவர்கள் நமக்கு இரையாவர்; அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று; ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம். [* எபி 3: 16 ]
எண்ணாகமம் 14 : 10 (ECTA)
ஆனால்,மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்; உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
எண்ணாகமம் 14 : 11 (ECTA)
மோசே மக்களுக்காக வேண்டுதல் செய்தல் ஆண்டவர் மோசேயிடம், “எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்?
எண்ணாகமம் 14 : 12 (ECTA)
நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்; உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன்” என்றார்.
எண்ணாகமம் 14 : 13 (ECTA)
ஆனால், மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே! நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்! [* விப 32:11- 14 ]
எண்ணாகமம் 14 : 14 (ECTA)
அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர் முகமாய்க் காணப்படுகிறீர்; உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது; பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர். [* விப 32:11- 14 ]
எண்ணாகமம் 14 : 15 (ECTA)
நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம், [* விப 32:11- 14 ]
எண்ணாகமம் 14 : 16 (ECTA)
“ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்” என்று சொல்வார்களே! [* விப 32:11- 14 ]
எண்ணாகமம் 14 : 17 (ECTA)
இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக. [* விப 32:11- 14 ]
எண்ணாகமம் 14 : 18 (ECTA)
“ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்” என்றும் சொல்லியிருக்கிறீரே! [* விப 32:11- 14 ; விப 20:5-6; 34:6-7; இச 5:9-10; 7:9- 10. ]
எண்ணாகமம் 14 : 19 (ECTA)
உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும்". [* விப 32:11- 14 ]
எண்ணாகமம் 14 : 20 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்;
எண்ணாகமம் 14 : 21 (ECTA)
ஆயினும், உண்மையாகவே என் உயிர்மேல் ஆணை! பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியின் மேல் ஆணை! [* எபி 3: 18 ]
எண்ணாகமம் 14 : 22 (ECTA)
எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும் நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டிருந்தும், இப் பத்துத் தடவையும் இம்மனிதர்கள் என்னைச் சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்காததால், [* எபி 3: 18 ]
எண்ணாகமம் 14 : 23 (ECTA)
இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்; என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான். [* எபி 3: 18 ]
எண்ணாகமம் 14 : 24 (ECTA)
ஆனால், என் அடியான் காலேபு வேறுபட்ட மனநிலை கொண்டு என்னை முழமையாகப் பின்பற்றினான்; ஆகவே, அவன் சென்று வந்த நாட்டுக்குள் அவனைக் கொண்டு வருவேன்; அவன் தலைமுறையினர் அதனை உடைமையாக்கிக்கொள்வர். [* யோசு 14:9- 12 ]
எண்ணாகமம் 14 : 25 (ECTA)
இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே, நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.
எண்ணாகமம் 14 : 26 (ECTA)
முறையிட்ட மக்களை ஆண்டவர் தண்டித்தல் மேலும், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
எண்ணாகமம் 14 : 27 (ECTA)
இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர்? எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன்.
எண்ணாகமம் 14 : 28 (ECTA)
நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது; என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்;
எண்ணாகமம் 14 : 29 (ECTA)
எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். [* எபி 3: 17 ]
எண்ணாகமம் 14 : 30 (ECTA)
நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள்.
எண்ணாகமம் 14 : 31 (ECTA)
ஆனால், இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்; நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.
எண்ணாகமம் 14 : 32 (ECTA)
உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.
எண்ணாகமம் 14 : 33 (ECTA)
நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்; உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள்பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர். * திப 7:36..
எண்ணாகமம் 14 : 34 (ECTA)
நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.
எண்ணாகமம் 14 : 35 (ECTA)
ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கெதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்; இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.”
எண்ணாகமம் 14 : 36 (ECTA)
நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பி, பின் திரும்பி வந்து நாட்டைப் பற்றித் தவறான அறிக்கையைக் கொண்டுவந்து மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவருக்கு எதிராக முறுமுறுக்கச் செய்த ஆள்கள்,
எண்ணாகமம் 14 : 37 (ECTA)
அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.
எண்ணாகமம் 14 : 38 (ECTA)
ஆயினும், நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர்.
எண்ணாகமம் 14 : 39 (ECTA)
நாட்டைக் கைப்பற்றும் முதல் முயற்சி
(இச 1:41-46)
மோசே இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் கூறினார்; மக்கள் மிகவும் அழுது புலம்பினர்.
எண்ணாகமம் 14 : 40 (ECTA)
அவர்கள் காலையில் எழுந்து, “இதோ நாம் இங்கிருந்து ஆண்டவர் வாக்களித்த இடத்திற்கு ஏறிச் செல்வோம்; நாம் பாவம் செய்து விட்டோம்” என்று சொல்லி மலையுச்சிகளை நோக்கிச் சென்றனர்.
எண்ணாகமம் 14 : 41 (ECTA)
அப்போது மோசே சொன்னது: ஏன் இப்போது ஆண்டவர் கட்டளையை மீறுகிறீர்கள்? அது நடக்கப் போவதில்லை.
எண்ணாகமம் 14 : 42 (ECTA)
உங்கள் எதிரிகளால் முறியடிக்கப்படாதபடி நீங்கள் ஏறிச் செல்ல வேண்டாம்; ஆண்டவர்தாம் உங்களிடையே இல்லையே!
எண்ணாகமம் 14 : 43 (ECTA)
அங்கே அமலேக்கியரும் கானானியரும் உங்களை எதிர்க்க இருக்கிறார்கள்; நீங்கள் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள், ஏனெனில், ஆண்டவரைப் பின்பற்றுவதினின்று நீங்கள் விலகிவிட்டீர்கள்; ஆண்டவர் உங்களோடிருக்கமாட்டார்.
எண்ணாகமம் 14 : 44 (ECTA)
ஆனாலும், அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை.
எண்ணாகமம் 14 : 45 (ECTA)
அப்போது அம் மலை நாட்டில் தங்கியிருந்த அமலேக்கியரும் கானானியரும் இறங்கி வந்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45