எண்ணாகமம் 13 : 1 (ECTA)
உளவாளிகள்
(இச 1:19-33) ஆண்டவர் மோசேயிடம்,
எண்ணாகமம் 13 : 2 (ECTA)
“இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 13 : 3 (ECTA)
ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.
எண்ணாகமம் 13 : 4 (ECTA)
அவர்களின் பெயர்கள்; ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா;
எண்ணாகமம் 13 : 5 (ECTA)
சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று;
எண்ணாகமம் 13 : 6 (ECTA)
யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு;
எண்ணாகமம் 13 : 7 (ECTA)
இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்;
எண்ணாகமம் 13 : 8 (ECTA)
எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா;
எண்ணாகமம் 13 : 9 (ECTA)
பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி;
எண்ணாகமம் 13 : 10 (ECTA)
செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்;
எண்ணாகமம் 13 : 11 (ECTA)
யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி;
எண்ணாகமம் 13 : 12 (ECTA)
தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்;
எண்ணாகமம் 13 : 13 (ECTA)
ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்;
எண்ணாகமம் 13 : 14 (ECTA)
நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி;
எண்ணாகமம் 13 : 15 (ECTA)
காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்;
எண்ணாகமம் 13 : 16 (ECTA)
நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை ‘யோசுவா’* என்று பெயரிட்டு அழைத்தார். * எபிரேயத்தில், ‘விடுதலையளிப்பவர்’ என்பது பொருள்.
எண்ணாகமம் 13 : 17 (ECTA)
கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்;
எண்ணாகமம் 13 : 18 (ECTA)
அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,
எண்ணாகமம் 13 : 19 (ECTA)
அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா,
எண்ணாகமம் 13 : 20 (ECTA)
அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.
எண்ணாகமம் 13 : 21 (ECTA)
அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.
எண்ணாகமம் 13 : 22 (ECTA)
அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்; எகிப்திலுள்ள சோவானுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது.
எண்ணாகமம் 13 : 23 (ECTA)
பின்னர், அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.
எண்ணாகமம் 13 : 24 (ECTA)
இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு ‘எசுக்கோல்’** பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. * எபிரேயத்தில், ‘குலை’ என்பது பொருள்..
எண்ணாகமம் 13 : 25 (ECTA)
நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.
எண்ணாகமம் 13 : 26 (ECTA)
அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.
எண்ணாகமம் 13 : 27 (ECTA)
அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி.
எண்ணாகமம் 13 : 28 (ECTA)
ஆயினும், அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்;
எண்ணாகமம் 13 : 29 (ECTA)
அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர்.
எண்ணாகமம் 13 : 30 (ECTA)
காலேபு மோசேமுன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில், நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்” என்றார்.
எண்ணாகமம் 13 : 31 (ECTA)
ஆனால், அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில், அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர்.
எண்ணாகமம் 13 : 32 (ECTA)
இவ்வாறு, அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்;
எண்ணாகமம் 13 : 33 (ECTA)
அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். [* தொநூ 6: 4 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33