எண்ணாகமம் 12 : 1 (ECTA)
மிரியாம் தண்டிக்கப்படல் மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.
எண்ணாகமம் 12 : 2 (ECTA)
அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார்.
எண்ணாகமம் 12 : 3 (ECTA)
பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்.
எண்ணாகமம் 12 : 4 (ECTA)
உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார். அவர்கள் மூவரும் வந்தனர்.
எண்ணாகமம் 12 : 5 (ECTA)
மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர்.
எண்ணாகமம் 12 : 6 (ECTA)
அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன்.
எண்ணாகமம் 12 : 7 (ECTA)
ஆனால், என்அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; [* எபி 3: 2 ]
எண்ணாகமம் 12 : 8 (ECTA)
நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர், ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?
எண்ணாகமம் 12 : 9 (ECTA)
மேலும், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார்.
எண்ணாகமம் 12 : 10 (ECTA)
கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.
எண்ணாகமம் 12 : 11 (ECTA)
ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்;
எண்ணாகமம் 12 : 12 (ECTA)
தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார்.
எண்ணாகமம் 12 : 13 (ECTA)
மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார்.
எண்ணாகமம் 12 : 14 (ECTA)
ஆனால், ஆண்டவர் மோசேயிடம், “அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்பட வேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழுநாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின், மீண்டும் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார். * எண் 5:2-3..
எண்ணாகமம் 12 : 15 (ECTA)
அவ்வாறே மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் மறுபடியும் உள்ளே கொண்டு வரப்படும்வரை மக்கள் தங்கள் பயணத்தைத் தொடரவில்லை.
எண்ணாகமம் 12 : 16 (ECTA)
அதன்பின் மக்கள் அசரோத்திலிருந்து புறப்பட்டுப் பாரான் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16