எண்ணாகமம் 1 : 1 (ECTA)
இஸ்ரயேலில் முதல் கணக்கெடுப்பு இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது: * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 3 (ECTA)
இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 4 (ECTA)
ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்; அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 5 (ECTA)
உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன; ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்; இவன் செதேயூர் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 6 (ECTA)
சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்; இவன் சுரிசத்தாய் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 7 (ECTA)
யூதா குலத்திலிருந்து நகுசோன்; இவன் அம்மினதாபின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 8 (ECTA)
இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்; இவன் சூவார் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 9 (ECTA)
செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 10 (ECTA)
யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன்; மனாசே குலத்திலிருந்து கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 11 (ECTA)
பென்யமின் குலத்திலிருந்து அபிதான்; இவன் கிதயோனின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 12 (ECTA)
தாண் குலத்திலிருந்து அகியசேர்; இவன் அம்மிசத்தாயின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 13 (ECTA)
ஆசேர் குலத்திலிருந்து பகியேல்; இவன் ஒக்ரானின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 14 (ECTA)
காத்து குலத்திலிருந்து எல்யாசாபு; இவன் தெகுவேலின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 15 (ECTA)
நப்தலி குலத்திலிருந்து அகிரா; இவன் ஏனானின் மகன்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 16 (ECTA)
மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 17 (ECTA)
பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 18 (ECTA)
இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 19 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே; அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 20 (ECTA)
இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 21 (ECTA)
ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 22 (ECTA)
சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 23 (ECTA)
சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 24 (ECTA)
காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 25 (ECTA)
காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 26 (ECTA)
யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 27 (ECTA)
யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 28 (ECTA)
இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 29 (ECTA)
இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 30 (ECTA)
செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 31 (ECTA)
செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 32 (ECTA)
யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 33 (ECTA)
எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 34 (ECTA)
மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 35 (ECTA)
மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 36 (ECTA)
பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 37 (ECTA)
பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 38 (ECTA)
தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 39 (ECTA)
தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 40 (ECTA)
ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 41 (ECTA)
ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 42 (ECTA)
நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 43 (ECTA)
நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 44 (ECTA)
மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே. * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 45 (ECTA)
ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை; * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 46 (ECTA)
மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். * எண் 26:1-51..
எண்ணாகமம் 1 : 47 (ECTA)
ஆனால், இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 1 : 48 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம் சொன்னது:
எண்ணாகமம் 1 : 49 (ECTA)
“லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்; இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்;
எண்ணாகமம் 1 : 50 (ECTA)
லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து; அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்; அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள்.
எண்ணாகமம் 1 : 51 (ECTA)
புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்; கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்.
எண்ணாகமம் 1 : 52 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர்.
எண்ணாகமம் 1 : 53 (ECTA)
லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்; உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே.
எண்ணாகமம் 1 : 54 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54