நெகேமியா 7 : 1 (ECTA)
மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்; வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன்.
நெகேமியா 7 : 2 (ECTA)
என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்; கடவுளுக்கு அஞ்சியவர்.
நெகேமியா 7 : 3 (ECTA)
நான் அவர்களைப் பார்த்து, “வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்; காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்; எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்; அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்” என்று சொன்னேன்.
நெகேமியா 7 : 4 (ECTA)
சிறையிருப்பினின்று திரும்பியோர் பட்டியல்
(எஸ்ரா 2:1-70) எருசலேம் நகர் பரந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.
நெகேமியா 7 : 5 (ECTA)
அப்பொழுது கடவுள் என்னைத் தூண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவரின் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு:
நெகேமியா 7 : 6 (ECTA)
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.
நெகேமியா 7 : 7 (ECTA)
இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை:
நெகேமியா 7 : 8 (ECTA)
பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து நூற்றுமுப்பதிரண்டு பேர்;
நெகேமியா 7 : 9 (ECTA)
செபாற்றியாவின் புதல்வர் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 10 (ECTA)
அராகின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 11 (ECTA)
பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்;
நெகேமியா 7 : 12 (ECTA)
ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்;
நெகேமியா 7 : 13 (ECTA)
சத்தூவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்;
நெகேமியா 7 : 14 (ECTA)
சக்காயின் புதல்வர் எழுநூற்று அறுபது பேர்;
நெகேமியா 7 : 15 (ECTA)
பின்னூயின் புதல்வர் அறுநூற்று நாற்பத்தெட்டு பேர்;
நெகேமியா 7 : 16 (ECTA)
பேபாயின் புதல்வர் அறுநூற்று இருபத்தெட்டு பேர்;
நெகேமியா 7 : 17 (ECTA)
அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 18 (ECTA)
அதோனிக்காமின் புதல்வர் அறுநூற்று அறுபத்தேழு பேர்;
நெகேமியா 7 : 19 (ECTA)
பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்;
நெகேமியா 7 : 20 (ECTA)
ஆதினின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர்;
நெகேமியா 7 : 21 (ECTA)
எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்;
நெகேமியா 7 : 22 (ECTA)
ஆசுமின் புதல்வர் முந்நூற்று இருபத்தெட்டுப் பேர்;
நெகேமியா 7 : 23 (ECTA)
பேசாயின் புதல்வர் முந்நூற்று இருபத்து நான்கு பேர்;
நெகேமியா 7 : 24 (ECTA)
ஆரிப்பின் புதல்வர் நூற்றுப்பன்னிரண்டு பேர்;
நெகேமியா 7 : 25 (ECTA)
கிபயோனின் புதல்வர் நூற்றுத் தொண்ணூற்றைந்து பேர்;
நெகேமியா 7 : 26 (ECTA)
பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் நூற்று எண்பத்தெட்டுப் பேர்;
நெகேமியா 7 : 27 (ECTA)
அனத்தோத்தின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்;
நெகேமியா 7 : 28 (ECTA)
பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 29 (ECTA)
கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுநூற்று நாற்பத்திமூன்று பேர்;
நெகேமியா 7 : 30 (ECTA)
இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுநூற்று இருபத்தொரு பேர்;
நெகேமியா 7 : 31 (ECTA)
மிக்மாசின் ஆண்கள் நூற்று இருபத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 32 (ECTA)
பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் நூற்று இருபத்து மூன்று பேர்;
நெகேமியா 7 : 33 (ECTA)
மற்றொரு நெபோவின் ஆண்கள் ஐம்பத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 34 (ECTA)
மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்திநான்கு பேர்;
நெகேமியா 7 : 35 (ECTA)
ஆரிமின் புதல்வர் முந்நூற்று இருபது பேர்;
நெகேமியா 7 : 36 (ECTA)
எரிகோவின் புதல்வர் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்;
நெகேமியா 7 : 37 (ECTA)
லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுநூற்று இருபத்தொரு பேர்;
நெகேமியா 7 : 38 (ECTA)
செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர்.
நெகேமியா 7 : 39 (ECTA)
குருக்கள்; ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்;
நெகேமியா 7 : 40 (ECTA)
இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்;
நெகேமியா 7 : 41 (ECTA)
பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்;
நெகேமியா 7 : 42 (ECTA)
ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர்.
நெகேமியா 7 : 43 (ECTA)
லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்;
நெகேமியா 7 : 44 (ECTA)
பாடகர்: ஆசாபின் புதல்வர் நூற்று நாற்பத்தெட்டுப் பேர்;
நெகேமியா 7 : 45 (ECTA)
வாயிற்காவலர்: சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் நூற்று முப்பத்தெட்டுப் பேர்.
நெகேமியா 7 : 46 (ECTA)
கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்; அசுப்பாவின் புதல்வர்; தபாயோத்தின் புதல்வர்;
நெகேமியா 7 : 47 (ECTA)
கேரோசின் புதல்வர்; சீயாவின் புதல்வர்; கிதோனின் புதல்வர்;
நெகேமியா 7 : 48 (ECTA)
இலபனாவின் புதல்வர்; அகாபாவின் புதல்வர்; சல்மாயின் புதல்வர்;
நெகேமியா 7 : 49 (ECTA)
அனானின் புதல்வர்; கிதேலின் புதல்வர்; ககாரின் புதல்வர்;
நெகேமியா 7 : 50 (ECTA)
இரயாயாவின் புதல்வர்; இரசினின் புதல்வர்; நெக்கோதாவின் புதல்வர்;
நெகேமியா 7 : 51 (ECTA)
கசாமின் புதல்வர்; உசாவின் புதல்வர்; பாசயாகின் புதல்வர்;
நெகேமியா 7 : 52 (ECTA)
பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்; நெபுசசிமின் புதல்வர்;
நெகேமியா 7 : 53 (ECTA)
பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்; அர்குரின் புதல்வர்;
நெகேமியா 7 : 54 (ECTA)
பட்சிலித்தின் புதல்வர்; மெகிதாவின் புதல்வர்; அர்சாவின் புதல்வர்;
நெகேமியா 7 : 55 (ECTA)
பர்கோசின் புதல்வர்; சீசாவின் புதல்வர்; தேமாகின் புதல்வர்;
நெகேமியா 7 : 56 (ECTA)
நெட்சியாகின் புதல்வர்; அற்றிப்பாவின் புதல்வர்;
நெகேமியா 7 : 57 (ECTA)
சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்; சோற்றாவின் புதல்வர்; சொபரேத்தின் புதல்வர்; பெரிதாவின் புதல்வர்;
நெகேமியா 7 : 58 (ECTA)
ஏலாவின் புதல்வர்; தர்கோனின் புதல்வர்; கித்தேலின் புதல்வர்;
நெகேமியா 7 : 59 (ECTA)
செபத்தியாவின் புதல்வர்; அற்றிலின் புதல்வர்; பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்; அம்மோனின் புதல்வர்;
நெகேமியா 7 : 60 (ECTA)
கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.
நெகேமியா 7 : 61 (ECTA)
மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு:
நெகேமியா 7 : 62 (ECTA)
தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
நெகேமியா 7 : 63 (ECTA)
குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்; அக்கோசின் புதல்வர்; பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார்.
நெகேமியா 7 : 64 (ECTA)
இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
நெகேமியா 7 : 65 (ECTA)
ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்தூயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார். [* விப 28:30; இச 33: 8 ]
நெகேமியா 7 : 66 (ECTA)
மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்நூற்று அறுபது.
நெகேமியா 7 : 67 (ECTA)
அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள்.
நெகேமியா 7 : 68 (ECTA)
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து;
நெகேமியா 7 : 69 (ECTA)
அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது.
நெகேமியா 7 : 70 (ECTA)
இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஐம்பது பாத்திரங்கள், ஐந்நூற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார்.
நெகேமியா 7 : 71 (ECTA)
குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஐநூறு கிலோகிராம்* வெள்ளியும் கொடுத்தார்கள். * ‘இரண்டாயிரத்து இருநூறு மினா’ என்பது எபிரேய பாடம்.
நெகேமியா 7 : 72 (ECTA)
ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்நூற்று எழுபது கிலோகிராம்* வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள். * ‘இரண்டாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம்.
நெகேமியா 7 : 73 (ECTA)
குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள். * 1 குறி 9:2; நெகே 11:3..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73