நெகேமியா 3 : 1 (ECTA)
எருசலேமின் மதில்கள் புதுப்பிக்கப்படல் அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து ‘ஆட்டு வாயிலைக்’ கட்டி அர்ப்பணம் செய்தனர்; அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்; ‘மேயா காவல்மாடம்’ வரையும் ‘அன்னியேல் காவல்மாடம்’ வரையும் அர்ப்பணம் செய்தனர்.
நெகேமியா 3 : 2 (ECTA)
அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர்.
நெகேமியா 3 : 3 (ECTA)
பின் அசனாவாவின் வழிமரபினர் ‘மீன் வாயிலைக்’ கட்டினர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். * 2 அர 25:8-10; 2 குறி 36:19; எரே 52:12-14..
நெகேமியா 3 : 4 (ECTA)
அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 5 (ECTA)
தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை.
நெகேமியா 3 : 6 (ECTA)
பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் ‘பழைய வாயிலைப்’ பழுது பார்த்தனர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
நெகேமியா 3 : 7 (ECTA)
யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன் - மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
நெகேமியா 3 : 8 (ECTA)
பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் ‘பெரிய மதில்’ வரை புதுப்பித்தார்கள்.
நெகேமியா 3 : 9 (ECTA)
எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
நெகேமியா 3 : 10 (ECTA)
இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்றூசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.
நெகேமியா 3 : 11 (ECTA)
ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், ‘சூளைக்காவல் மாடத்தையும்’ பழுது பார்த்தனர்.
நெகேமியா 3 : 12 (ECTA)
எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லூமும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
நெகேமியா 3 : 13 (ECTA)
ஆனூனும், சானோவாகில் வாழ்ந்தவர்களும், ‘பள்ளத்தாக்கு வாயிலைப்’ பழுதுபார்த்தனர்; அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். ‘குப்பைமேட்டு வாயில்’ வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள்.
நெகேமியா 3 : 14 (ECTA)
பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, ‘குப்பைமேட்டு வாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.
நெகேமியா 3 : 15 (ECTA)
மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லூம், ‘ஊருணிவாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த ‘சேலா குளத்துச்’ சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 16 (ECTA)
அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.
நெகேமியா 3 : 17 (ECTA)
மதில் பழுதுபார்ப்பில் உதவிய லேவியர் அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 18 (ECTA)
பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பார்த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.
நெகேமியா 3 : 19 (ECTA)
மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 20 (ECTA)
அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 21 (ECTA)
அவருக்கு அடுத்து, ஆக்கோனின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 22 (ECTA)
மதில் பழுதுபார்ப்பில் உதவிய குருக்கள் அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.
நெகேமியா 3 : 23 (ECTA)
இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
நெகேமியா 3 : 24 (ECTA)
அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 25 (ECTA)
மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்
நெகேமியா 3 : 26 (ECTA)
ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த ‘தண்ணீர் வாயிலின்’ எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.
நெகேமியா 3 : 27 (ECTA)
மதில் பழுதுபார்ப்பில் உதவிய ஏனையோர் அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.
நெகேமியா 3 : 28 (ECTA)
‘குதிரை வாயில்’ முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர்.
நெகேமியா 3 : 29 (ECTA)
அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 30 (ECTA)
அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலூவும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.
நெகேமியா 3 : 31 (ECTA)
அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.
நெகேமியா 3 : 32 (ECTA)
மூலையிலிருந்த மேல் மாடிக்கும் ‘ஆட்டு வாயிலுக்கும்’ இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32