நெகேமியா 12 : 1 (ECTA)
{குருக்கள் மற்றும் லேவியர் பட்டியல்} [PS] செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின்வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,
நெகேமியா 12 : 2 (ECTA)
அமரியா, மல்லூக்கு, அத்தூசு,
நெகேமியா 12 : 3 (ECTA)
செக்கனியா, இரகூம், மெரமோத்து,
நெகேமியா 12 : 4 (ECTA)
இத்தோ, கின்னத்தோய், அபியா,
நெகேமியா 12 : 5 (ECTA)
மியாமின், மாதியா, பில்கா,
நெகேமியா 12 : 6 (ECTA)
செமாயா, யோயாரிபு, எதாயா,
நெகேமியா 12 : 7 (ECTA)
சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.
நெகேமியா 12 : 8 (ECTA)
லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
நெகேமியா 12 : 9 (ECTA)
பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.[PE]
நெகேமியா 12 : 10 (ECTA)
{தலைமைக்குரு ஏசுவாவின் வழிவந்தோர்} [PS] ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.
நெகேமியா 12 : 11 (ECTA)
யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்; யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.[PE]
நெகேமியா 12 : 12 (ECTA)
{குருகுலத் தலைவர்கள்} [PS] யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா;
நெகேமியா 12 : 13 (ECTA)
எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்; அமரியா வழிவந்த யோகனான்;
நெகேமியா 12 : 14 (ECTA)
மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு;
நெகேமியா 12 : 15 (ECTA)
ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்;
நெகேமியா 12 : 16 (ECTA)
இத்தோ வழிவந்த செக்கரியா; கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்;
நெகேமியா 12 : 17 (ECTA)
அபியா வழிவந்த சிக்ரி; மின்யமீன், மோவதியா, பில்த்தாய்;
நெகேமியா 12 : 18 (ECTA)
பில்கா வழிவந்த சம்முவா; செமாயா வழிவந்த யோனத்தான்;
நெகேமியா 12 : 19 (ECTA)
யோயாரிபு வழிவந்த மத்தனாய்; எதாயா வழிவந்த உசீ;
நெகேமியா 12 : 20 (ECTA)
சல்லாம் வழிவந்த கல்லாய்; அமோக்கு வழிவந்த ஏபேர்;
நெகேமியா 12 : 21 (ECTA)
இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.[PE]
நெகேமியா 12 : 22 (ECTA)
{குருக்கள் மற்றும் லேவியரின் பதிவேடு} [PS] லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
நெகேமியா 12 : 23 (ECTA)
லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.[PE]
நெகேமியா 12 : 24 (ECTA)
{கோவில் பணியின் பிரித்தளிப்பு} [PS] லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.
நெகேமியா 12 : 25 (ECTA)
மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.
நெகேமியா 12 : 26 (ECTA)
இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.[PE]
நெகேமியா 12 : 27 (ECTA)
{எருசலேம் மதிலின் அர்ப்பணம்} [PS] எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.
நெகேமியா 12 : 28 (ECTA)
பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும்,
நெகேமியா 12 : 29 (ECTA)
பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.
நெகேமியா 12 : 30 (ECTA)
குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.[PE]
நெகேமியா 12 : 31 (ECTA)
[PS] அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.
நெகேமியா 12 : 32 (ECTA)
அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,
நெகேமியா 12 : 33 (ECTA)
அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,
நெகேமியா 12 : 34 (ECTA)
யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.
நெகேமியா 12 : 35 (ECTA)
மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்; ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,
நெகேமியா 12 : 36 (ECTA)
அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.
நெகேமியா 12 : 37 (ECTA)
அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.[PE]
நெகேமியா 12 : 38 (ECTA)
[PS] இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.
நெகேமியா 12 : 39 (ECTA)
எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ ‘காவலர்’ வாயிலில் நின்று கொண்டார்கள்.[PE]
நெகேமியா 12 : 40 (ECTA)
[PS] பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.
நெகேமியா 12 : 41 (ECTA)
குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.
நெகேமியா 12 : 42 (ECTA)
மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.[PE]
நெகேமியா 12 : 43 (ECTA)
[PS] அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.[PE]
நெகேமியா 12 : 44 (ECTA)
{கோவில் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள்} [PS] கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.
நெகேமியா 12 : 45 (ECTA)
தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.
நெகேமியா 12 : 46 (ECTA)
ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன. [* 1 குறி 25:1-8; 26:12. ]
நெகேமியா 12 : 47 (ECTA)
மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.[PE]
❮
❯