நெகேமியா 11 : 1 (ECTA)
எருசலேமில் வாழ்ந்தோர் பட்டியல் மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.
நெகேமியா 11 : 2 (ECTA)
எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.
நெகேமியா 11 : 3 (ECTA)
இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள். * நெகே 7:73..
நெகேமியா 11 : 4 (ECTA)
எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு; இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு; உசியா மகன் அத்தாயா — உசியா செக்கரியாவின் மகன்; இவர் அமரியாவின் மகன்; இவர் செபற்றியாவின் மகன்; இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்:
நெகேமியா 11 : 5 (ECTA)
மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன்.
நெகேமியா 11 : 6 (ECTA)
எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.
நெகேமியா 11 : 7 (ECTA)
பென்யமினின் புதல்வர் இவர்களே; சல்லூ மெசுல்லாமின் மகன்; இவர் யோபேதுவின் மகன்; இவர் பெத்யாவின் மகன்; இவர் கொலயாவின் மகன்; இவர் மாசேயாவின் மகன்; இவர் இத்தியேலின் மகன்; இவர் ஏசாயாவின் மகன்.
நெகேமியா 11 : 8 (ECTA)
அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.
நெகேமியா 11 : 9 (ECTA)
சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.
நெகேமியா 11 : 10 (ECTA)
குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்;
நெகேமியா 11 : 11 (ECTA)
செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.
நெகேமியா 11 : 12 (ECTA)
கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன்.
நெகேமியா 11 : 13 (ECTA)
குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அம்சசாய் அசரியேலின் மகன்; இவர் அகிசாயின் மகன்; இவர் மெசில்ல மோத்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
நெகேமியா 11 : 14 (ECTA)
படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.
நெகேமியா 11 : 15 (ECTA)
லேவியர்: செமாயா; இவர் அசூபாவின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் பூனியின் மகன்.
நெகேமியா 11 : 16 (ECTA)
கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;
நெகேமியா 11 : 17 (ECTA)
மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா; இவர் மீக்காவின் மகன்; இவர் சப்தியின் மகன்; இவர் ஆசாபின் மகன்; பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்; இவர் காலாயின் மகன்; இவர் எதுத்தூனின் மகன்.
நெகேமியா 11 : 18 (ECTA)
புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.
நெகேமியா 11 : 19 (ECTA)
வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
நெகேமியா 11 : 20 (ECTA)
ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.
நெகேமியா 11 : 21 (ECTA)
கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.
நெகேமியா 11 : 22 (ECTA)
எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மத்தனியாவின் மகன்; இவர் மீக்காவின் மகன்; இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.
நெகேமியா 11 : 23 (ECTA)
பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.
நெகேமியா 11 : 24 (ECTA)
மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.
நெகேமியா 11 : 25 (ECTA)
மற்ற ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்தோர் பட்டியல் சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;
நெகேமியா 11 : 26 (ECTA)
மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்
நெகேமியா 11 : 27 (ECTA)
அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
நெகேமியா 11 : 28 (ECTA)
சிக்லாசிலும், மெக்கோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,
நெகேமியா 11 : 29 (ECTA)
ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,
நெகேமியா 11 : 30 (ECTA)
சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.
நெகேமியா 11 : 31 (ECTA)
பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,
நெகேமியா 11 : 32 (ECTA)
அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்
நெகேமியா 11 : 33 (ECTA)
ஆட்சோரிலும், இராமாவிலும், கித்தயிமிலும்
நெகேமியா 11 : 34 (ECTA)
ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,
நெகேமியா 11 : 35 (ECTA)
லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
நெகேமியா 11 : 36 (ECTA)
லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36