நெகேமியா 10 : 1 (ECTA)
முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,
நெகேமியா 10 : 2 (ECTA)
குருக்கள்: செராயா அசரியா, எரேமியா,
நெகேமியா 10 : 3 (ECTA)
பஸ்கூர், அமரியா, மல்கியா,
நெகேமியா 10 : 4 (ECTA)
அத்தூசு, செபானியா, மல்லூக்கு,
நெகேமியா 10 : 5 (ECTA)
ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு,
நெகேமியா 10 : 6 (ECTA)
மெசுல்லாம், அபியா, மியாமின்,
நெகேமியா 10 : 7 (ECTA)
மாசியா, பில்காய், செமாயா.
நெகேமியா 10 : 8 (ECTA)
லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில்
நெகேமியா 10 : 9 (ECTA)
பின்னூய், கத்மியேல்,
நெகேமியா 10 : 10 (ECTA)
இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான்,
நெகேமியா 10 : 11 (ECTA)
மீக்கா, இரகோபு, அசபியா,
நெகேமியா 10 : 12 (ECTA)
சக்கூர், செரேபியா, செபானியா,
நெகேமியா 10 : 13 (ECTA)
ஓதியா, பானி, பெனினு.
நெகேமியா 10 : 14 (ECTA)
மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்தூ, பானி,
நெகேமியா 10 : 15 (ECTA)
புன்னி, அஸ்காது, பேபாய்,
நெகேமியா 10 : 16 (ECTA)
அதோனியா, பிக்வாய், ஆதின்,
நெகேமியா 10 : 17 (ECTA)
அத்தேர், எசேக்கியா, அசூர்,
நெகேமியா 10 : 18 (ECTA)
ஓதியா, ஆசும், பெசாய்,
நெகேமியா 10 : 19 (ECTA)
ஆரிபு, அனத்தோத்து, நேபாய்,
நெகேமியா 10 : 20 (ECTA)
மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர்,
நெகேமியா 10 : 21 (ECTA)
மெசபேல், சாதோக்கு யாதுவா,
நெகேமியா 10 : 22 (ECTA)
பெலாத்தியா, ஆனான், அனாயா,
நெகேமியா 10 : 23 (ECTA)
ஓசேயா, அனனியா, அசூபு,
நெகேமியா 10 : 24 (ECTA)
அல்லோகேசு, பில்கா, சோபேக்கு,
நெகேமியா 10 : 25 (ECTA)
இரகூம், மாசேயா,
நெகேமியா 10 : 26 (ECTA)
அகியா, ஆனான், அனான்,
நெகேமியா 10 : 27 (ECTA)
மல்லூக்கு, ஆரிம், பானா.
நெகேமியா 10 : 28 (ECTA)
ஒப்பந்தம் ஏனைய மக்களும், குருக்களும், லேவியரும், வாயிற்காப்போரும், பாடகர்களும், கோவிற் பணியாளர்களும், வேற்றின மக்களிடமிருந்து பிரிந்து கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த அனைவரும், அவர்களின் மனைவியரும், புதல்வரும், புதல்வியரும், அறிவுத் தெளிவு அடைந்த அனைவரும்,
நெகேமியா 10 : 29 (ECTA)
மேன்மக்களாகிய தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளின் ஊழியனான மோசே வழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் சாபமும் உள்ளிட்ட கடவுளின் திருசட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிப்பதாகவும், தம் தலைவராகிய ஆண்டவரின் அனைத்து விதிமுறைகளையும் நீதி நெறிகளையும், நியமங்களையும் காத்து நடப்பதாகவும் வாக்குறுதி தந்தார்கள்.
நெகேமியா 10 : 30 (ECTA)
சிறப்பாக, “நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம். [* விப 34:6; இச 7: 3 ]
நெகேமியா 10 : 31 (ECTA)
வேற்றின மக்கள் ஓய்வு நாளில் சரக்குகளையும், தானிய வகைகளையும் விற்கக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களிடமிருந்து ஓய்வு நாளிலும், புனித நாளிலும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டின் விளைச்சலை விட்டுக் கொடுப்போம்; எவ்விதக் கடனையும் திரும்பக் கேட்க மாட்டோம். [* விப 23:10-11; லேவி 25:1-7; இச 15:1- 2 ]
நெகேமியா 10 : 32 (ECTA)
காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக [* விப 30:11- 16 ]
நெகேமியா 10 : 33 (ECTA)
ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை* நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம். * ‘செக்கேலில் மூன்றில் ஒரு பகுதி’ என்பது எபிரேய பாடம்..
நெகேமியா 10 : 34 (ECTA)
திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.
நெகேமியா 10 : 35 (ECTA)
எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம். [* விப 23:19; 34:26; இச 26: 2 ]
நெகேமியா 10 : 36 (ECTA)
திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் மக்களின் தலைப்பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளின் தலைப்பேறுகளையும், அதாவது மாட்டு மந்தைகளின் தலைப்பேறுகளையும், ஆட்டுக் கிடைகளின் தலைப்பேறுகளையும், நம் இறைவனின் இல்லத்தில் பணி செய்யும் குருக்களிடம் கொண்டு வர நேர்ந்து கொண்டோம். [* விப 13: 2 ]
நெகேமியா 10 : 37 (ECTA)
மேலும், எங்களது முதல் பிசைந்த மாவையும், எங்கள் படையல்களையும், ஒவ்வொரு மரத்தின் கனிகளையும், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்காக, நம் கடவுளின் கோவில் அறைகளில் கொடுப்போம் என்றும், எங்கள் நிலப் பலனில் பத்தில் ஒரு பகுதியை லேவியருக்குக் கொடுப்போம் என்றும் நேர்ந்து கொண்டோம். ஆனால், அதை நாங்கள் உழைக்கும் ஒவ்வொரு நகரிலும் லேவியர் வசூல் செய்வர். [* எண் 18: 21 ]
நெகேமியா 10 : 38 (ECTA)
பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும். [* எண் 18: 26 ]
நெகேமியா 10 : 39 (ECTA)
ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். ‘எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்’ என்று வாக்குறுதி அளித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39