நாகூம் 2 : 1 (ECTA)
நினிவேயின் வீழ்ச்சி உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து; வழிகளில் காவலர்களை அமர்த்து; உம் இடையே வரிந்து கட்டிக்கொள்; உன் படை வலிமையை மிகுதிப்படுத்து. [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ]
நாகூம் 2 : 2 (ECTA)
இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப்போட்டனர். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ]
நாகூம் 2 : 3 (ECTA)
எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை; அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்; போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது; குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன. [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ]
நாகூம் 2 : 4 (ECTA)
வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன; திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன; தீப்பந்தங்களைப்போலச் சுடர்விடுகின்றன; மின்னலைப்போலப் பாய்கின்றன.
நாகூம் 2 : 5 (ECTA)
படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்; அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்; கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்; காப்புக் கருவி அமைத்தாயிற்று.
நாகூம் 2 : 6 (ECTA)
ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை இடிந்து கரைந்தது.
நாகூம் 2 : 7 (ECTA)
அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்; அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து, மாரடித்துப் புலம்புகின்றார்கள்.
நாகூம் 2 : 8 (ECTA)
உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்; ‘நில்லுங்கள், நில்லுங்கள்!’ என அவர்கள் அலறுகிறார்கள்; ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
நாகூம் 2 : 9 (ECTA)
வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்; பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்; கருவூலங்கள் மிகப்பெரியவை; அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை.
நாகூம் 2 : 10 (ECTA)
வெறுமை! பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது; கால்கள் தள்ளாடுகின்றன; திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது; முகங்களெல்லாம் வெளிறிப் போகின்றன.
நாகூம் 2 : 11 (ECTA)
சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ?
நாகூம் 2 : 12 (ECTA)
சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று.
நாகூம் 2 : 13 (ECTA)
இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்; உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்; உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்; நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்; உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13