மீகா 6 : 1 (ECTA)
{இஸ்ரயேல் மீது ஆண்டவரின் வழக்கு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:[SE][SS] நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில்[SE][SS] உன் வழக்கைச் சொல்;[SE][SS] குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.[SE][QE]
மீகா 6 : 2 (ECTA)
[QS][SS] மலைகளே, மண்ணுலகின்[SE][SS] நிலையான அடித்தளங்களே,[SE][SS] ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்;[SE][SS] ஆண்டவருக்குத் தம் மக்களோடு[SE][SS] வழக்கு ஒன்று உண்டு;[SE][SS] இஸ்ரயேலோடு அவர்[SE][SS] வாதாடப் போகின்றார்.[SE][QE]
மீகா 6 : 3 (ECTA)
[QS][SS] என் மக்களே,[SE][SS] நான் உங்களுக்கு என்ன செய்தேன்?[SE][SS] எதில் நான் உங்களைத்[SE][SS] துயரடையச் செய்தேன்?[SE][SS] எனக்கு மறுமொழி கூறுங்கள்.[SE][QE]
மீகா 6 : 4 (ECTA)
[QS][SS] நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து[SE][SS] அழைத்து வந்தேன்;[SE][SS] அடிமைத்தன வீட்டிலிருந்து[SE][SS] மீட்டு வந்தேன்;[SE][SS] உங்களுக்கு முன்பாக[SE][SS] மோசேயையும், ஆரோனையும்,[SE][SS] மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.[SE][QE]
மீகா 6 : 5 (ECTA)
[QS][SS] என் மக்களே, மோவாபு அரசன்[SE][SS] பாலாக்கு வகுத்த திட்டத்தை[SE][SS] நினைத்துப் பாருங்கள்;[SE][SS] பெயோரின் மகன் பிலயாம்[SE][SS] அவனுக்குக் கூறிய மறுமொழியையும்,[SE][SS] சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே[SE][SS] நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்;[SE][SS] அப்போது ஆண்டவரின்[SE][SS] மீட்புச் செயல்களை[SE][SS] அறிந்து கொள்வீர்கள். [* விப 4:10-16; 12:50-51; 15:20 ] [SE][PE][QE]
மீகா 6 : 6 (ECTA)
{ஆண்டவர் விரும்புவது} [PS] [QS][SS] ஆண்டவரின் திருமுன் வரும்போது[SE][SS] உன்னதரான கடவுளாகிய அவருக்கு[SE][SS] எதைக் கொண்டுவந்து[SE][SS] பணிந்து நிற்பேன்?[SE][SS] எரிபலிகளோடும்[SE][SS] ஒரு வயதுக் கன்றுகளோடும்[SE][SS] அவர் முன்னிலையில் வரவேண்டுமா? [* எண் 22:2-25:25; யோசு 3:1-4:19 ] [SE][QE]
மீகா 6 : 7 (ECTA)
[QS][SS] ஆயிரக்கணக்கான[SE][SS] ஆட்டுக்கிடாய்கள் மேலும்[SE][SS] பல்லாயிரக்கணக்கான[SE][SS] ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும்[SE][SS] எண்ணெய் மேலும்[SE][SS] ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?[SE][SS] என் குற்றத்தை அகற்ற[SE][SS] என் தலைப்பிள்ளையையும்,[SE][SS] என் பாவத்தைப் போக்க[SE][SS] நான் பெற்ற குழந்தையையும்[SE][SS] பலி கொடுக்க வேண்டுமா?[SE][QE]
மீகா 6 : 8 (ECTA)
[QS][SS] ஓ மானிடா, நல்லது எது என[SE][SS] அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே![SE][SS] நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,[SE][SS] இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்[SE][SS] உன் கடவுளுக்கு முன்பாக[SE][SS] தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர[SE][SS] வேறு எதை ஆண்டவர்[SE][SS] உன்னிடம் கேட்கின்றார்?[SE][QE]
மீகா 6 : 9 (ECTA)
[QS][SS] ஆண்டவரின் குரல்[SE][SS] நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது;[SE][SS] உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே[SE][SS] உண்மையான ஞானம்.[SE][SS] நகரில் கூடியிருப்போரே![SE][SS] நான் கூறுவதைக் கேளுங்கள்;[SE][QE]
மீகா 6 : 10 (ECTA)
[QS][SS] “கொடியோரின் வீட்டில்[SE][SS] தீய வழியால் சேர்க்கப்பட்ட[SE][SS] களஞ்சியங்களையும்[SE][SS] சபிக்கப்பட்ட மரக்காலையும்[SE][SS] நான் மறப்பேனோ?[SE][QE]
மீகா 6 : 11 (ECTA)
[QS][SS] கள்ளத் தராசையும்[SE][SS] கள்ள எடைக் கற்களையும் கொண்ட[SE][SS] பையை வைத்திருப்போரை[SE][SS] நேர்மையாளர் எனக் கொள்வேனோ?[SE][QE]
மீகா 6 : 12 (ECTA)
[QS][SS] உங்களிடையே உள்ள செல்வர்கள்[SE][SS] கொடுமை நிறைந்தவர்கள்;[SE][SS] அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்;[SE][SS] அவர்கள் வாயிலிருந்து[SE][SS] வஞ்சனையான பேச்சே[SE][SS] வெளிப்படுகின்றது.[SE][QE]
மீகா 6 : 13 (ECTA)
[QS][SS] ஆதலால், நான் உங்களை[SE][SS] உங்கள் பாவங்களுக்காகத்[SE][SS] தண்டிக்கத்தொடங்கியுள்ளேன்;[SE][SS] நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.[SE][QE]
மீகா 6 : 14 (ECTA)
[QS][SS] நீங்கள் உணவருந்தினாலும்[SE][SS] நிறைவடைய மாட்டீர்கள்;[SE][SS] பசி உங்கள் வயிற்றைக்[SE][SS] கிள்ளிக்கொண்டிருக்கும்;[SE][SS] நீங்கள் எதையும்[SE][SS] பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள்,[SE][SS] இழப்பீர்கள்;[SE][SS] அப்படியே நீங்கள் எதையாவது[SE][SS] பாதுகாப்பாக வைத்தாலும்[SE][SS] அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.[SE][QE]
மீகா 6 : 15 (ECTA)
[QS][SS] நீங்கள் விதைப்பீர்கள்;[SE][SS] ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்;[SE][SS] ஒலிவக் கொட்டைகளை[SE][SS] ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள்,[SE][SS] ஆனால், உங்களுக்கு எண்ணெய்[SE][SS] தடவிக்கொள்ளமாட்டீர்கள்;[SE][SS] திராட்சைப் பழம் பிழிவீர்கள்;[SE][SS] ஆனால், திராட்சை இரசத்தைச்[SE][SS] சுவைக்கமாட்டீர்கள்.[SE][QE]
மீகா 6 : 16 (ECTA)
[QS][SS] ஏனெனில், நீங்கள்[SE][SS] ஒம்ரியின் கட்டளைகளைக்[SE][SS] கடைப்பிடித்தீர்கள்;[SE][SS] ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள்[SE][SS] அனைத்தையும் பின்பற்றினீர்கள்,[SE][SS] அவர்களின் திட்டங்களைப்[SE][SS] பின்பற்றி நடந்தீர்கள்;[SE][SS] ஆதலால், நான் உங்களை[SE][SS] அழிவுக்குக் கையளிப்பேன்;[SE][SS] உங்களிடையே குடியிருப்போர்[SE][SS] இகழ்ச்சிக்கு உள்ளாவர்;[SE][SS] மக்களினங்களின்[SE][SS] நிந்தைக்கு ஆளாவீர்கள்.[SE][PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

BG:

Opacity:

Color:


Size:


Font: