மீகா 5 : 1 (ECTA)
அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.
மீகா 5 : 2 (ECTA)
ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார் நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். [* மத் 2:6; யோவா 7: 42 ]
மீகா 5 : 3 (ECTA)
ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
மீகா 5 : 4 (ECTA)
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்;
மீகா 5 : 5 (ECTA)
அவரே அமைதியை அருள்வார்.விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும் (5b) அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.
மீகா 5 : 6 (ECTA)
அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்; அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள். [* தொநூ 10:8-11.. ]
மீகா 5 : 7 (ECTA)
அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காகக் காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
மீகா 5 : 8 (ECTA)
மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
மீகா 5 : 9 (ECTA)
உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.
மீகா 5 : 10 (ECTA)
அந்நாளில், “நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்” என்கிறார் ஆண்டவர்.
மீகா 5 : 11 (ECTA)
“உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.
மீகா 5 : 12 (ECTA)
உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்; குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.
மீகா 5 : 13 (ECTA)
நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்; உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.
மீகா 5 : 14 (ECTA)
நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.
மீகா 5 : 15 (ECTA)
எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15