மத்தேயு 24 : 1 (ECTA)
நிறைவுகாலப் பொழிவுஎருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
(மாற் 13:1-2; லூக் 21:5-6)
இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.
மத்தேயு 24 : 2 (ECTA)
அவர் அவர்களைப் பார்த்து, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
மத்தேயு 24 : 3 (ECTA)
வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்
(மாற் 13:3-13; லூக் 21:7-19)
ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, “நீர் கூறியவை எப்போது நிகழும்? உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். [* 1 யோவா 2: 28 ]
மத்தேயு 24 : 4 (ECTA)
அதற்கு இயேசு கூறியது: “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மத்தேயு 24 : 5 (ECTA)
ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.
மத்தேயு 24 : 6 (ECTA)
போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால், திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால், இவையே முடிவாகா.
மத்தேயு 24 : 7 (ECTA)
நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.
மத்தேயு 24 : 8 (ECTA)
இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.
மத்தேயு 24 : 9 (ECTA)
பின்பு, உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். [* மத் 10: 22 ]
மத்தேயு 24 : 10 (ECTA)
அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.
மத்தேயு 24 : 11 (ECTA)
பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்.
மத்தேயு 24 : 12 (ECTA)
நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.
மத்தேயு 24 : 13 (ECTA)
ஆனால், இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
மத்தேயு 24 : 14 (ECTA)
உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.”
மத்தேயு 24 : 15 (ECTA)
வரப்போகும் பெரும் துன்பம்
(மாற் 13:14-23; லூக் 21:20-24)
“இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’* திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். — அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.— * ‘நடுங்கவைக்கும் தீட்டு’ என்பது மக்கபேயர் காலத்தில் எருசலேம் கோவிலில் அந்தியோக்கு எப்பிப்பானசு நிறுவிய சிலையைக் குறிக்கும்.
மத்தேயு 24 : 16 (ECTA)
யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
மத்தேயு 24 : 17 (ECTA)
வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித் தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும். [* லூக் 17: 31 ]
மத்தேயு 24 : 18 (ECTA)
வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம். [* லூக் 17: 31 ]
மத்தேயு 24 : 19 (ECTA)
அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!
மத்தேயு 24 : 20 (ECTA)
குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.
மத்தேயு 24 : 21 (ECTA)
ஏனெனில், அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை. [* தானி 12:1; திவெ 7: 14 ]
மத்தேயு 24 : 22 (ECTA)
அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே, தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.
மத்தேயு 24 : 23 (ECTA)
அப்பொழுது யாராவது உங்களிடம், ‘இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்’ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். [* லூக் 17:23,24; 2 தெச 2:3; 4: 9 ]
மத்தேயு 24 : 24 (ECTA)
ஏனெனில், போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். [* 2 பேது 2:1-3; 1 யோவா 4: 1 ]
மத்தேயு 24 : 25 (ECTA)
இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.
மத்தேயு 24 : 26 (ECTA)
ஆகையால், எவராவது உங்களிடம் வந்து, ‘அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்’ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘இதோ, உள்ளறையில் இருக்கிறார்’ என்றால் நம்பாதீர்கள்.
மத்தேயு 24 : 27 (ECTA)
ஏனெனில், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும். * இதனைப்பற்றித் தானி ; 11:31; 12:11; 1 மக் 1:54 ஆகிய வசனங்களில் காணலாம்..
மத்தேயு 24 : 28 (ECTA)
பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.” [* யோபு 39:30; லூக் 17: 37 ]
மத்தேயு 24 : 29 (ECTA)
மானிடமகன் வருகை
(மாற் 13:24-27; லூக் 21:25-26)
“துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும். [* எசா 13:10; 34:4; எசே 32:7; யோவே 2:10,31; 3:15; திவெ 6:12, 13 ]
மத்தேயு 24 : 30 (ECTA)
பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். [* தானி 7:13; திவெ 1:7; 1 தெச 4: 16 ]
மத்தேயு 24 : 31 (ECTA)
அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.”
மத்தேயு 24 : 32 (ECTA)
அத்தி மர உவமை
(மாற் 13:28-31; லூக் 21:29-33)
“அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
மத்தேயு 24 : 33 (ECTA)
அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மத்தேயு 24 : 34 (ECTA)
இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 24 : 35 (ECTA)
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”
மத்தேயு 24 : 36 (ECTA)
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மாற் 13:32-37; லூக் 17:26-30, 34-36)
“அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.
மத்தேயு 24 : 37 (ECTA)
நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். [* தொநூ 6:5-8; எபி 11: 7 ]
மத்தேயு 24 : 38 (ECTA)
வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.
மத்தேயு 24 : 39 (ECTA)
வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். [* தொநூ 7:11-23; 2 பேது 3: 6 ]
மத்தேயு 24 : 40 (ECTA)
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
மத்தேயு 24 : 41 (ECTA)
இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
மத்தேயு 24 : 42 (ECTA)
விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. [* மத் 25:13; லூக் 12:39,40; 1 தெச 5:2; 2 பேது 3:10; திவெ 3: 3 ]
மத்தேயு 24 : 43 (ECTA)
இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். [* மத் 25:13; லூக் 12:39,40; 1 தெச 5:2; 2 பேது 3:10; திவெ 3: 3 ]
மத்தேயு 24 : 44 (ECTA)
எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” [* மத் 25:13; லூக் 12:39,40; 1 தெச 5:2; 2 பேது 3:10; திவெ 3: 3 ]
மத்தேயு 24 : 45 (ECTA)
நம்பிக்கைக்குரிய பணியாளர்
(லூக் 12:41-48)
“தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர்அமர்த்தியநம்பிக்கைக்குஉரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்?
மத்தேயு 24 : 46 (ECTA)
தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.
மத்தேயு 24 : 47 (ECTA)
அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 24 : 48 (ECTA)
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,
மத்தேயு 24 : 49 (ECTA)
தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.
மத்தேயு 24 : 50 (ECTA)
அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.
மத்தேயு 24 : 51 (ECTA)
அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51