மத்தேயு 22 : 1 (ECTA)
திருமண விருந்து உவமை
(லூக் 14:15-24) இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:
மத்தேயு 22 : 2 (ECTA)
“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.
மத்தேயு 22 : 3 (ECTA)
திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மத்தேயு 22 : 4 (ECTA)
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
மத்தேயு 22 : 5 (ECTA)
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.
மத்தேயு 22 : 6 (ECTA)
மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
மத்தேயு 22 : 7 (ECTA)
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
மத்தேயு 22 : 8 (ECTA)
பின்னர், தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.
மத்தேயு 22 : 9 (ECTA)
எனவே, நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார்.
மத்தேயு 22 : 10 (ECTA)
அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
மத்தேயு 22 : 11 (ECTA)
அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.
மத்தேயு 22 : 12 (ECTA)
அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். [* திவெ 19:7, 8 ]
மத்தேயு 22 : 13 (ECTA)
அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். [* மத் 8:12; 25:30; லூக் 13: 28 ]
மத்தேயு 22 : 14 (ECTA)
இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”
மத்தேயு 22 : 15 (ECTA)
சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13-17; லூக் 20:20-26) பின்பு, பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.
மத்தேயு 22 : 16 (ECTA)
தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
மத்தேயு 22 : 17 (ECTA)
சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.
மத்தேயு 22 : 18 (ECTA)
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
மத்தேயு 22 : 19 (ECTA)
வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
மத்தேயு 22 : 20 (ECTA)
இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார்.
மத்தேயு 22 : 21 (ECTA)
அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார். [* உரோ 13: 7 ]
மத்தேயு 22 : 22 (ECTA)
இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
மத்தேயு 22 : 23 (ECTA)
உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி
(மாற் 12:18-27; லூக் 20:27-40) அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, [* திப 23: 8 ]
மத்தேயு 22 : 24 (ECTA)
“போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார். [* தானி 25: 5 ]
மத்தேயு 22 : 25 (ECTA)
எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக் காலமானதால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.
மத்தேயு 22 : 26 (ECTA)
அப்படியே இரண்டாம், மூன்றாம், ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது.
மத்தேயு 22 : 27 (ECTA)
அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்ணும் இறந்தார்.
மத்தேயு 22 : 28 (ECTA)
அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார்? அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே” என்று கேட்டனர்.
மத்தேயு 22 : 29 (ECTA)
இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 22 : 30 (ECTA)
ஏனெனில், உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
மத்தேயு 22 : 31 (ECTA)
இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா?
மத்தேயு 22 : 32 (ECTA)
32 ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்” என்று கூறினார். * விப 3: 6.
மத்தேயு 22 : 33 (ECTA)
அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.
மத்தேயு 22 : 34 (ECTA)
முதன்மையான கட்டளை
(மாற் 12:28-34; லூக் 10:25-28) இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.
மத்தேயு 22 : 35 (ECTA)
(35-36) அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
மத்தேயு 22 : 37 (ECTA)
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ [* இச 6:5; 1 யோவா 2: 7 ]
மத்தேயு 22 : 38 (ECTA)
இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
மத்தேயு 22 : 39 (ECTA)
‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. [* லேவி 19:18; கலா 5: 14 ]
மத்தேயு 22 : 40 (ECTA)
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
மத்தேயு 22 : 41 (ECTA)
தாவீதின் மகன் பற்றிய விளக்கம்
(மாற் 12:35-37; லூக் 20:41-44) பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.
மத்தேயு 22 : 42 (ECTA)
அவர், “மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அவர்கள், “தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
மத்தேயு 22 : 43 (ECTA)
இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?
மத்தேயு 22 : 44 (ECTA)
‘ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்குஅடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்!" என்று உரைத்தார்’ என அவரே கூறியுள்ளார் அல்லவா! [* திபா 110:1; திப 2:34; எபி 1:13; 1 கொரி 15: 25 ]
மத்தேயு 22 : 45 (ECTA)
எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?” என்று கேட்டார்.
மத்தேயு 22 : 46 (ECTA)
அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை. * லூக் 20:40..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46