மத்தேயு 19 : 1 (ECTA)
5.விண்ணரசின் வருகைமணமுறிவு
(மாற் 10:1-12)
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.
மத்தேயு 19 : 2 (ECTA)
பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.
மத்தேயு 19 : 3 (ECTA)
பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டனர்.
மத்தேயு 19 : 4 (ECTA)
அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார். [* தொநூ 1:27; 5: 2 ]
மத்தேயு 19 : 5 (ECTA)
(5-6) மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.” என்றார். [* தொநூ 2:24; 1 கொரி 6:16; 7: 10 ]
மத்தேயு 19 : 6 (ECTA)
மத்தேயு 19 : 7 (ECTA)
அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள். [* இச 24:1-4; மத் 5: 31 ]
மத்தேயு 19 : 8 (ECTA)
அதற்கு அவர் “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால், தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.
மத்தேயு 19 : 9 (ECTA)
பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்*” என்றார். <b> /b> ‟விலக்கப்பட்டவளை மணப்பவனும் விபச்சாரம் செய்கிறான்” என்னும் சொற்றொடர், சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. ; மத் 5:32; லூக் 16:18; 1 கொரி 7:10,11..
மத்தேயு 19 : 10 (ECTA)
அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள்.
மத்தேயு 19 : 11 (ECTA)
அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
மத்தேயு 19 : 12 (ECTA)
சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
மத்தேயு 19 : 13 (ECTA)
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மாற் 10:13-16; லூக் 18:15-17)
சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
மத்தேயு 19 : 14 (ECTA)
ஆனால், இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், ,விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார்.
மத்தேயு 19 : 15 (ECTA)
அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.
மத்தேயு 19 : 16 (ECTA)
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞர்
(மாற் 10:17-31; லூக் 18:18-30)
அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
மத்தேயு 19 : 17 (ECTA)
இயேசு அவரிடம், “நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.
மத்தேயு 19 : 18 (ECTA)
அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; [* விப 20:13-15; இச 5:18- 20 ]
மத்தேயு 19 : 19 (ECTA)
தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார். [* விப 20:12; லேவி 19:18; இச 5: 16 ]
மத்தேயு 19 : 20 (ECTA)
அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார்.
மத்தேயு 19 : 21 (ECTA)
அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார். [* மத் 13:44- 46 ]
மத்தேயு 19 : 22 (ECTA)
அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
மத்தேயு 19 : 23 (ECTA)
இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.
மத்தேயு 19 : 24 (ECTA)
மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
மத்தேயு 19 : 25 (ECTA)
சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.
மத்தேயு 19 : 26 (ECTA)
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும்” என்றார். [* லூக் 1: 37 ]
மத்தேயு 19 : 27 (ECTA)
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.
மத்தேயு 19 : 28 (ECTA)
அதற்கு இயேசு, “புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். [* தானி 7:22; லூக் 22:30; 1 கொரி 6:2; திவெ 3:21; 20: 4 ]
மத்தேயு 19 : 29 (ECTA)
மேலும், என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.
மத்தேயு 19 : 30 (ECTA)
ஆனால், முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார். [* மத் 20:16; லூக் 13: 30 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30