மத்தேயு 16 : 1 (ECTA)
அடையாளம் கேட்டுச் சோதித்தல்
(மாற் 8:11-13; லூக் 12:54-56) பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர். [* மத் 12:36; லூக் 11:16; யோவா 6:30, 31 ]
மத்தேயு 16 : 2 (ECTA)
அவர் அவர்களிடம் மறுமொழியாக, [ “மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால் ‘வானிலை நன்றாக இருக்கிறது’ என நீங்கள் சொல்வீர்கள். * அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
மத்தேயு 16 : 3 (ECTA)
காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், ‘இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்’ என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால், காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா?” ]* * அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. ; அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
மத்தேயு 16 : 4 (ECTA)
“இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது” என்றார். பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.
மத்தேயு 16 : 5 (ECTA)
பரிசேயர், சதுசேயரின் புளிப்புமாவு
(மாற் 8:14-21) சீடர்கள் மறு கரைக்குச் சென்ற போது அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.
மத்தேயு 16 : 6 (ECTA)
இயேசு அவர்களிடம் “பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்” என்றார். [* லூக் 12: 1 ]
மத்தேயு 16 : 7 (ECTA)
“நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்” எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
மத்தேயு 16 : 8 (ECTA)
இதை அறிந்த இயேசு, “நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று உங்களிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்?
மத்தேயு 16 : 9 (ECTA)
உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்? [* மத் 14:17- 21 ]
மத்தேயு 16 : 10 (ECTA)
அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்? [* மத் 15:34- 38 ]
மத்தேயு 16 : 11 (ECTA)
நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி? பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார்.
மத்தேயு 16 : 12 (ECTA)
அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை; மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
மத்தேயு 16 : 13 (ECTA)
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27-30; லூக் 9:18-21) இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
மத்தேயு 16 : 14 (ECTA)
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். [* மத் 14:1,2; மாற் 6:14,15; லூக் 9:7- 8 ]
மத்தேயு 16 : 15 (ECTA)
“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.
மத்தேயு 16 : 16 (ECTA)
(16-17) சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். [* யோவா 6:68, 69 ]
மத்தேயு 16 : 18 (ECTA)
எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு*; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. * ‘பேதுரு’ என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் ‘பாறை’ என்பது பொருள்..
மத்தேயு 16 : 19 (ECTA)
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். [* மத் 18:18; யோவா 20: 23 ]
மத்தேயு 16 : 20 (ECTA)
பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
மத்தேயு 16 : 21 (ECTA)
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31-9:1; லூக் 9:22-27) இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
மத்தேயு 16 : 22 (ECTA)
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார்.
மத்தேயு 16 : 23 (ECTA)
ஆனால், இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.
மத்தேயு 16 : 24 (ECTA)
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். [* மத் 10:38; லூக் 14:27; 17:33; யோவா 12:25, 26 ]
மத்தேயு 16 : 25 (ECTA)
ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். [* மத் 10:38; லூக் 14:27; 17:33; யோவா 12:25, 26 ]
மத்தேயு 16 : 26 (ECTA)
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
மத்தேயு 16 : 27 (ECTA)
மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார். [* யோபு 14:11; திபா 62:12; மத் 25:31; உரோ 2: 6 ]
மத்தேயு 16 : 28 (ECTA)
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28