மாற்கு 10 : 1 (ECTA)
{மண விலக்கு[BR](மத் 19:1-12)} [PS] இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
மாற்கு 10 : 2 (ECTA)
பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
மாற்கு 10 : 3 (ECTA)
அவர் அவர்களிடம் மறுமொழியாக, {SCJ}“மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” {SCJ.} [PE] என்று கேட்டார்.
மாற்கு 10 : 4 (ECTA)
அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
மாற்கு 10 : 5 (ECTA)
அதற்கு இயேசு அவர்களிடம், {SCJ}“உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.[PE] {SCJ.} {SCJ} [* இச 24:1-4; மத் 5:31 ]
மாற்கு 10 : 6 (ECTA)
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,[QS][SS]‘ஆணும் பெண்ணுமாக[SE][SS] அவர்களைப் படைத்தார்.[SE][QE]
மாற்கு 10 : 7 (ECTA)
[QS][SS] இதனால் கணவன்[SE][SS] தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத்[SE][SS] தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். [* தொநூ 1:27; 5:2 ] [SE][QE]
மாற்கு 10 : 8 (ECTA)
[QS][SS] இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’[SE][PE] இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். [* தொநூ 2:24 ] [QE]
மாற்கு 10 : 9 (ECTA)
{SCJ}எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” {SCJ.} [PE] என்றார். [* தொநூ 2:24 ]
மாற்கு 10 : 10 (ECTA)
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
மாற்கு 10 : 11 (ECTA)
இயேசு அவர்களை நோக்கி, {SCJ}“தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.[PE]
மாற்கு 10 : 12 (ECTA)
{SCJ}தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” {SCJ.} [PE] என்றார். [* மத் 5:32; லூக் 16:18; 1 கொரி 10:11 ] [PE]
மாற்கு 10 : 13 (ECTA)
{சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்[BR](மத் 19:13-15; லூக் 18:15-17)} [PS] சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். [* மத் 5:32; லூக் 16:18; 1 கொரி 10:11 ]
மாற்கு 10 : 14 (ECTA)
இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, {SCJ}“சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.[PE]
மாற்கு 10 : 15 (ECTA)
{SCJ}இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” {SCJ.} [PE] என்றார்.
மாற்கு 10 : 16 (ECTA)
பிறகு, அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார். [* மத் 18:3 ] [PE]
மாற்கு 10 : 17 (ECTA)
{இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்[BR](மத் 19:16-30; லூக் 18:18-30)} [PS] இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.
மாற்கு 10 : 18 (ECTA)
அதற்கு இயேசு அவரிடம், {SCJ}“நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.[PE]
மாற்கு 10 : 19 (ECTA)
{SCJ}உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? [QS][SS]‘கொலைசெய்யாதே; [BR] விபசாரம் செய்யாதே; [BR] களவு செய்யாதே; [BR] பொய்ச்சான்று சொல்லாதே; [BR] வஞ்சித்துப் பறிக்காதே; [BR] உன் தாய் தந்தையை மதித்து நட’” {SCJ.} [SE][PE] என்றார்.[QE]
மாற்கு 10 : 20 (ECTA)
அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார். [* விப 20:12-16; இச 5:16-20; 24:14 ]
மாற்கு 10 : 21 (ECTA)
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, {SCJ}“உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” {SCJ.} [PE] என்று அவரிடம் கூறினார்.
மாற்கு 10 : 22 (ECTA)
இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.[PE]
மாற்கு 10 : 23 (ECTA)
[PS] இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், {SCJ}“செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” {SCJ.} [PE] என்றார்.
மாற்கு 10 : 24 (ECTA)
சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, {SCJ}“பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.[PE]
மாற்கு 10 : 25 (ECTA)
{SCJ}அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” {SCJ.} [PE] என்றார்.
மாற்கு 10 : 26 (ECTA)
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
மாற்கு 10 : 27 (ECTA)
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, {SCJ}“மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” {SCJ.} [PE] என்றார்.[PE]
மாற்கு 10 : 28 (ECTA)
[PS] அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.
மாற்கு 10 : 29 (ECTA)
அதற்கு இயேசு, {SCJ}“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்[PE] {SCJ.} {SCJ}
மாற்கு 10 : 30 (ECTA)
இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.[PE]
மாற்கு 10 : 31 (ECTA)
{SCJ}முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” {SCJ.} [PE] என்றார்.[PE]
மாற்கு 10 : 32 (ECTA)
{இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்[BR](மத் 20:17-19; லூக் 18:31-34)} [PS] அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். [* மத் 20:16; லூக் 13:30 ]
மாற்கு 10 : 33 (ECTA)
அவர், {SCJ}“இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; [* யோவா 11:16 ] [PE]
மாற்கு 10 : 34 (ECTA)
{SCJ}அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” {SCJ.} [PE] என்று அவர்களிடம் கூறினார்.[PE]
மாற்கு 10 : 35 (ECTA)
{செபதேயுவின் மக்களது வேண்டுகோள்[BR](மத் 20:20-28)} [PS] செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள்.
மாற்கு 10 : 36 (ECTA)
அவர் அவர்களிடம், {SCJ}“நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” {SCJ.} [PE] என்று கேட்டார்.
மாற்கு 10 : 37 (ECTA)
அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.
மாற்கு 10 : 38 (ECTA)
இயேசுவோ அவர்களிடம், {SCJ}“நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” {SCJ.} [PE] என்று கேட்டார்.
மாற்கு 10 : 39 (ECTA)
அவர்கள் அவரிடம், “இயலும்” {SCJ.} என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, {SCJ}“நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். [* லூக் 12:50 ] [PE]
மாற்கு 10 : 40 (ECTA)
{SCJ}ஆனால், என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” {SCJ.} [PE] என்று கூறினார்.[PE]
மாற்கு 10 : 41 (ECTA)
[PS] இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
மாற்கு 10 : 42 (ECTA)
இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், {SCJ}“பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.[PE] {SCJ.} {SCJ}
மாற்கு 10 : 43 (ECTA)
ஆனால், உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். [* மத் 20:24-28; லூக் 22:24-27 ]
மாற்கு 10 : 44 (ECTA)
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். [* மத் 20:24-28; லூக் 22:24-27 ] [PE]
மாற்கு 10 : 45 (ECTA)
{SCJ}ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய* மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” {SCJ.} [PE] என்று கூறினார். [* மத் 20:24-28; லூக் 22:24-27 ] [PE]
மாற்கு 10 : 46 (ECTA)
{பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்[BR](மத் 20:29-34; லூக் 18:35-43)} [PS] இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். [* மத் 20:24-28; லூக் 22:24-27 ]
மாற்கு 10 : 47 (ECTA)
நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார்.
மாற்கு 10 : 48 (ECTA)
பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
மாற்கு 10 : 49 (ECTA)
இயேசு நின்று, {SCJ}“அவரைக் கூப்பிடுங்கள்”[PE] என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
மாற்கு 10 : 50 (ECTA)
அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
மாற்கு 10 : 51 (ECTA)
இயேசு அவரைப் பார்த்து, {SCJ}“உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?”[PE] என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார்.
மாற்கு 10 : 52 (ECTA)
இயேசு அவரிடம், {SCJ}“நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” {SCJ.} [PE] என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.[PE]
❮
❯