லேவியராகமம் 9 : 1 (ECTA)
ஆரோன் பலி செலுத்தல் மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.
லேவியராகமம் 9 : 2 (ECTA)
அவர் ஆரோனிடம் கூறியது: “நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்றையும் எரிபலியாக ஊனமற்ற ஓர் ஆட்டுக்கிடாயையும் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா.
லேவியராகமம் 9 : 3 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்
லேவியராகமம் 9 : 4 (ECTA)
நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில், இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.”
லேவியராகமம் 9 : 5 (ECTA)
அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.
லேவியராகமம் 9 : 6 (ECTA)
அப்பொழுது மோசே, “நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே; ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்” என்றார்.
லேவியராகமம் 9 : 7 (ECTA)
மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்” என்றார். [* எபி 7: 27 ]
லேவியராகமம் 9 : 8 (ECTA)
ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார்.
லேவியராகமம் 9 : 9 (ECTA)
ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார்.
லேவியராகமம் 9 : 10 (ECTA)
பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து,
லேவியராகமம் 9 : 11 (ECTA)
இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.
லேவியராகமம் 9 : 12 (ECTA)
பின்பு, அவர் எரிபலிக்கிடாயை அடித்தார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.
லேவியராகமம் 9 : 13 (ECTA)
எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து,
லேவியராகமம் 9 : 14 (ECTA)
குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார்.
லேவியராகமம் 9 : 15 (ECTA)
பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார்.
லேவியராகமம் 9 : 16 (ECTA)
பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்;
லேவியராகமம் 9 : 17 (ECTA)
உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார்.
லேவியராகமம் 9 : 18 (ECTA)
பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். [* லேவி 3:1- 11 ]
லேவியராகமம் 9 : 19 (ECTA)
காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து,
லேவியராகமம் 9 : 20 (ECTA)
நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள். கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார்.
லேவியராகமம் 9 : 21 (ECTA)
நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.
லேவியராகமம் 9 : 22 (ECTA)
பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்; தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார். * எண் 6:22-26..
லேவியராகமம் 9 : 23 (ECTA)
மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்; பின்னர், வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
லேவியராகமம் 9 : 24 (ECTA)
ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது. மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24