லேவியராகமம் 6 : 1 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 2 (ECTA)
தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ, [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 3 (ECTA)
காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ — இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால், [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 4 (ECTA)
அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 5 (ECTA)
பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ — இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு, அதன் ஐந்தில் ஒருபங்கைசச் சேர்த்துக் குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும். [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 6 (ECTA)
குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும். [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 7 (ECTA)
அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்; இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும். [* எண் 5:5- 8 ]
லேவியராகமம் 6 : 8 (ECTA)
எரிபலிகள் ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
லேவியராகமம் 6 : 9 (ECTA)
ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது; எரிபலி பற்றிய சட்டம் இதுவே; இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
லேவியராகமம் 6 : 10 (ECTA)
குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்; பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப் பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்;
லேவியராகமம் 6 : 11 (ECTA)
பின்னர், தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.
லேவியராகமம் 6 : 12 (ECTA)
பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்;
லேவியராகமம் 6 : 13 (ECTA)
பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.
லேவியராகமம் 6 : 14 (ECTA)
தானியப் படையல்கள் உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே; ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.
லேவியராகமம் 6 : 15 (ECTA)
அவர்கள் உணவுப்படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப்படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப்படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.
லேவியராகமம் 6 : 16 (ECTA)
எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.
லேவியராகமம் 6 : 17 (ECTA)
அதைப் புளிப்பேற்றாது சுடவேண்டும். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.
லேவியராகமம் 6 : 18 (ECTA)
ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.
லேவியராகமம் 6 : 19 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது;
லேவியராகமம் 6 : 20 (ECTA)
ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி* அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப்படையலாக அளிக்க வேண்டும். <b> /b> ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்..
லேவியராகமம் 6 : 21 (ECTA)
தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும். சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.
லேவியராகமம் 6 : 22 (ECTA)
அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும். இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.
லேவியராகமம் 6 : 23 (ECTA)
குருவின் எந்த உணவுப்படையலும் முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.
லேவியராகமம் 6 : 24 (ECTA)
குற்ற நீக்கக் காணிக்கைகள் ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
லேவியராகமம் 6 : 25 (ECTA)
நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது; பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே; எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும் பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும். அது மிகத் தூயது.
லேவியராகமம் 6 : 26 (ECTA)
பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார். சந்திப்புக்கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.
லேவியராகமம் 6 : 27 (ECTA)
அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே. அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால், இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.
லேவியராகமம் 6 : 28 (ECTA)
அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.
லேவியராகமம் 6 : 29 (ECTA)
குருக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.
லேவியராகமம் 6 : 30 (ECTA)
கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது; நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30