லேவியராகமம் 24 : 1 (ECTA)
விளக்குகளைப் பேணுதல்
(விப 27:20-21)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 24 : 2 (ECTA)
எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
லேவியராகமம் 24 : 3 (ECTA)
சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வழிமரபினருக்கு என்றுமுள நியமம் ஆகும்.
லேவியராகமம் 24 : 4 (ECTA)
ஆண்டவர் திருமுன் இருக்கும் பசும்பொன் குத்துவிளக்குத் தண்டின் மேலிருக்கிற கிளைவிளக்குகளை எப்போதும் எரியவிட வேண்டும்.
லேவியராகமம் 24 : 5 (ECTA)
கடவுளுக்கான அப்பப் படையல் இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கு மிருதுவான மாவில் செய்யப்பட்ட பன்னிரண்டு அப்பங்களைச் சுட்டு, [* விப 25: 30 ]
லேவியராகமம் 24 : 6 (ECTA)
அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும். [* விப 25: 30 ]
லேவியராகமம் 24 : 7 (ECTA)
அவற்றின்மேல் வாசனைப்பொடி தூவ வேண்டும்; அது அப்பத்திற்கு மாற்றான நெருப்புப்பலி.
லேவியராகமம் 24 : 8 (ECTA)
இது என்றுமுள உடன்படிக்கை; இதை இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்று, ஓய்வு நாள்தோறும் ஆண்டவரின் திருமுன் அடுக்கி வைக்க வேண்டும்.
லேவியராகமம் 24 : 9 (ECTA)
அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத் தூயகத்திலேயே உண்ண வேண்டும். ஏனெனில், அது தூயதின் தூயது. ஆண்டவரின் நெருப்புப்பலிகளில் அது அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமை ஆகும். [* மத் 12:4; மாற் 2:26; லூக் 6: 4 ]
லேவியராகமம் 24 : 10 (ECTA)
நேர்மையான தண்டனைக்கு எடுத்துக்காட்டு இஸ்ரயேல் இனத்துப் பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் மகனாகப் பிறந்த ஒருவன் இஸ்ரயேல் மக்களோடு வந்திருந்தான். அவனுக்கும் இஸ்ரயேல் ஆண் ஒருவனுக்கும் பாளையத்தில் சண்டை ஏற்பட்டது.
லேவியராகமம் 24 : 11 (ECTA)
இஸ்ரயேல் பெண்ணின் மகன் ஆண்டவரின் திருப்பெயரை இகழ்ந்தான்; எனவே, அவனை மோசேயிடம் கொண்டுவந்தனர். அவன் தாயின் பெயர் செலோமித்து; அவள் தாண்குலத்தைச் சார்ந்த திப்ரியின் மகள்.
லேவியராகமம் 24 : 12 (ECTA)
ஆண்டவரின் திருவுளம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்வரை அவனைக் காவலில் வைத்தனர்.
லேவியராகமம் 24 : 13 (ECTA)
அப்போது ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 24 : 14 (ECTA)
"இகழ்ந்தவனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டுசென்று அவனது பழிப்புரையைக் கேட்டவர்களெல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கட்டும். பின்னர், சபை அனைத்தும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
லேவியராகமம் 24 : 15 (ECTA)
எவராவது கடவுளை இகழ்ந்தால், அவர் தம் பாவத்தைச் சுமப்பார் என்று இஸ்ரயேல் மக்களிடம் சொல்.
லேவியராகமம் 24 : 16 (ECTA)
ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அந்நியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்.
லேவியராகமம் 24 : 17 (ECTA)
மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார். [* விப 21: 12 ]
லேவியராகமம் 24 : 18 (ECTA)
விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும்.
லேவியராகமம் 24 : 19 (ECTA)
தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும்.
லேவியராகமம் 24 : 20 (ECTA)
முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும். [* விப 21:23-25; இச 19:21; மத் 5: 38 ]
லேவியராகமம் 24 : 21 (ECTA)
விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்; மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும்.
லேவியராகமம் 24 : 22 (ECTA)
அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!" * எண் 15:16..
லேவியராகமம் 24 : 23 (ECTA)
அப்படியே இறைவனை இகழ்ந்தோனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டு போய் அவனைக் கல்லாலெறியுமாறு மோசே கட்டளையிட்டார். ஆண்டவர் மோசேயிடம் கூறியபடி அவர்கள் செய்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23