லேவியராகமம் 23 : 1 (ECTA)
சமய பெருவிழாக்கள் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 23 : 2 (ECTA)
“இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன:
லேவியராகமம் 23 : 3 (ECTA)
ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள். [* விப 20:8-10; 23:12; 31:15; 34:21; 35:2; இச 5:12- 14 ]
லேவியராகமம் 23 : 4 (ECTA)
நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன;
லேவியராகமம் 23 : 5 (ECTA)
பாஸ்காவும் புளிப்பற்ற அப்பமும்
(எண் 28:16-25)
முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. [* விப 12:1-13; இச 16:1- 2 ]
லேவியராகமம் 23 : 6 (ECTA)
அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். [* விப 12:14-20; 23:15; 34:18; இச 16:3- 8 ]
லேவியராகமம் 23 : 7 (ECTA)
பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. [* விப 12:14-20; 23:15; 34:18; இச 16:3- 8 ]
லேவியராகமம் 23 : 8 (ECTA)
ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. [* விப 12:14-20; 23:15; 34:18; இச 16:3- 8 ]
லேவியராகமம் 23 : 9 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 23 : 10 (ECTA)
இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது; நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 23 : 11 (ECTA)
உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.
லேவியராகமம் 23 : 12 (ECTA)
அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.
லேவியராகமம் 23 : 13 (ECTA)
உணவுப்படையலாக இருபதுபடி* அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். * ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்..
லேவியராகமம் 23 : 14 (ECTA)
உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பின் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
லேவியராகமம் 23 : 15 (ECTA)
அறுவடைப் பெருவிழா
(எண் 28:26-31)
ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 16 (ECTA)
ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 17 (ECTA)
நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற்பலனின் ஆரத்திப் பலியாகக் கொண்டு வாருங்கள். [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 18 (ECTA)
இந்த அப்பத்துடன், ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும். உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலியாக இருக்கும். [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 19 (ECTA)
வெள்ளாட்டுக் கிடாய்களில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், ஓராண்டான இரண்டு ஆட்டுக் குட்டிகளை நல்லுறவுப் பலியாகவும் செலுத்துங்கள். [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 20 (ECTA)
இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை முதற்பலனான அப்பத்துடன் குரு ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். அவை ஆண்டவருக்குத் தூயதான காணிக்கைகள்; குருவுக்குரியவை. [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 21 (ECTA)
அந்நாளை திருப்பேரவை நாளாக அறிவியுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். [* விப 23:16; 34:22; இச 16:9- 12 ]
லேவியராகமம் 23 : 22 (ECTA)
உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அந்நியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! [* லேவி 19:9-10; இச 24:19- 22 ]
லேவியராகமம் 23 : 23 (ECTA)
புத்தாண்டுப் பெருவிழா
(எண் 29:1-6)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 23 : 24 (ECTA)
நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள்.
லேவியராகமம் 23 : 25 (ECTA)
எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்.
லேவியராகமம் 23 : 26 (ECTA)
பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்
(எண் 29:7-11)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 27 (ECTA)
அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 28 (ECTA)
அந்த நாளில் எத்தகைய வேலையும் செய்யலாகாது. ஏனெனில், அது கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் உங்களுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள். [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 29 (ECTA)
அந்த நாளில் தம்மைத் தாழ்த்திக்கொள்ளாத எந்த மனிதரும் தம் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவார். [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 30 (ECTA)
அந்த நாளில் யாராவது ஏதாவது வேலை செய்தால், அவரை அவர் இனத்திலிருந்து அழித்துவிடுவேன். [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 31 (ECTA)
நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் வாழுமிடங்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 32 (ECTA)
அன்று உங்களுக்கு முழுமையான ஓய்வு நாள்; அன்று உங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த மாதத்தின் ஒன்பதாம் நாளினை மாலைமுதல் மறுநாள் மாலை வரை, ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்க வேண்டும். [* லேவி 16:29- 34 ]
லேவியராகமம் 23 : 33 (ECTA)
கூடாரப் பெருவிழா
(எண் 29:12-40)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: [* இச 16:13- 15 ]
லேவியராகமம் 23 : 34 (ECTA)
நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது; ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். [* இச 16:13- 15 ]
லேவியராகமம் 23 : 35 (ECTA)
முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம். [* இச 16:13- 15 ]
லேவியராகமம் 23 : 36 (ECTA)
ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. [* இச 16:13- 15 ]
லேவியராகமம் 23 : 37 (ECTA)
ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,
லேவியராகமம் 23 : 38 (ECTA)
அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.
லேவியராகமம் 23 : 39 (ECTA)
நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள்.
லேவியராகமம் 23 : 40 (ECTA)
முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள்.
லேவியராகமம் 23 : 41 (ECTA)
ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
லேவியராகமம் 23 : 42 (ECTA)
ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.
லேவியராகமம் 23 : 43 (ECTA)
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
லேவியராகமம் 23 : 44 (ECTA)
இவ்வாறு, மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44