லேவியராகமம் 21 : 1 (ECTA)
குருக்களின் தூய்மை ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.
லேவியராகமம் 21 : 2 (ECTA)
தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன்,
லேவியராகமம் 21 : 3 (ECTA)
மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி — ஆகியவர்களைத் தவிர
லேவியராகமம் 21 : 4 (ECTA)
வேறேவராலும் — திருமணத்தால் உறவானவர் உட்பட — தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உட்படுத்தித் தீட்டுப்படவேண்டாம்.
லேவியராகமம் 21 : 5 (ECTA)
அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள். * லேவி 10:27-28; இச 14:1..
லேவியராகமம் 21 : 6 (ECTA)
அவர்கள் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் அவருக்கு ஏற்ற தூயோராய் இருப்பார்கள். ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தைச் செலுத்துவதால் அவர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும்.
லேவியராகமம் 21 : 7 (ECTA)
விலைமாதையோ தூய்மைக் கேடு உற்றவளையோ அவர்கள் மணம் புரியலாகாது. கணவனால் மணமுறிவு செய்யப்பட்ட பெண்ணையும் மணம்புரியலாகாது. ஏனெனில், குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.
லேவியராகமம் 21 : 8 (ECTA)
அவர்கள் தூயோர்கள். ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள்.
லேவியராகமம் 21 : 9 (ECTA)
குருவின் மகள் வேசியானால், அவள் தன் தந்தைக்குத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறாள். அவளை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
லேவியராகமம் 21 : 10 (ECTA)
தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்; தன் உடைகளைக் கிழித்தலாகாது.
லேவியராகமம் 21 : 11 (ECTA)
எந்தப் பிணமானாலும் — அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
லேவியராகமம் 21 : 12 (ECTA)
தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும். ஏனெனில், அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது. நானே ஆண்டவர்!
லேவியராகமம் 21 : 13 (ECTA)
கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும்.
லேவியராகமம் 21 : 14 (ECTA)
அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்.
லேவியராகமம் 21 : 15 (ECTA)
தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.”
லேவியராகமம் 21 : 16 (ECTA)
ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 21 : 17 (ECTA)
“நீ ஆரோனிடம் கூறவேண்டியது; உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது.
லேவியராகமம் 21 : 18 (ECTA)
உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்; பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன்,
லேவியராகமம் 21 : 19 (ECTA)
கால் கை ஒடிந்தவன்,
லேவியராகமம் 21 : 20 (ECTA)
கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்.
லேவியராகமம் 21 : 21 (ECTA)
குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம். மேலும், உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது.
லேவியராகமம் 21 : 22 (ECTA)
தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம்.
லேவியராகமம் 21 : 23 (ECTA)
ஆனால், தொங்குதிரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில், நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.”
லேவியராகமம் 21 : 24 (ECTA)
மோசே இவற்றை ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும், இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24