லேவியராகமம் 18 : 1 (ECTA)
பாலியற் குற்றங்கள் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 18 : 2 (ECTA)
“நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 18 : 3 (ECTA)
நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம்.
லேவியராகமம் 18 : 4 (ECTA)
நியமங்களை ஏற்று, என் ஆணைகளுக்குப் பணிந்து நடங்கள், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
லேவியராகமம் 18 : 5 (ECTA)
எனவே, என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார். நானே ஆண்டவர்! [* நெகே 9:29; எசே 18:9; 20:11-13 ; லூக் 10:28; உரோ 10:5; கலா 3: 12 ]
லேவியராகமம் 18 : 6 (ECTA)
உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்; நானே ஆண்டவர்!
லேவியராகமம் 18 : 7 (ECTA)
தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில், அவள் உன் தாய்; உன் தாயை வெற்றுடம்பாக்காதே!
லேவியராகமம் 18 : 8 (ECTA)
தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்! [* லேவி 20:11; இச 22:30; 27: 20 ]
லேவியராகமம் 18 : 9 (ECTA)
தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! [* லேவி 20:17; இச 27: 22 ]
லேவியராகமம் 18 : 10 (ECTA)
உன் மகனின் மகளையோ உன் மகளின் மகளையோ வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர்.
லேவியராகமம் 18 : 11 (ECTA)
உன் தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி.
லேவியராகமம் 18 : 12 (ECTA)
தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல். [* லேவி 20:19, 20 ]
லேவியராகமம் 18 : 13 (ECTA)
தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல். [* லேவி 20:19, 20 ]
லேவியராகமம் 18 : 14 (ECTA)
தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்; ஏனெனில், அவள் உன் சிற்றன்னை. [* லேவி 20:19, 20 ]
லேவியராகமம் 18 : 15 (ECTA)
மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் மகனின் மனைவி; அவளை வெற்றுடம்பாக்காதே! [* லேவி 20: 12 ]
லேவியராகமம் 18 : 16 (ECTA)
சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு. [* லேவி 20: 21 ]
லேவியராகமம் 18 : 17 (ECTA)
ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு [* லேவி 20:14; இச 27: 23 ]
லேவியராகமம் 18 : 18 (ECTA)
மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே!
லேவியராகமம் 18 : 19 (ECTA)
மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே! [* லேவி 20: 18 ]
லேவியராகமம் 18 : 20 (ECTA)
உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே. [* லேவி 20: 10 ]
லேவியராகமம் 18 : 21 (ECTA)
உன்பிள்ளைகளுள் யாரையேனும் மோலெக்கிற்கு எரிபலியாக்கி, உன் கடவுளின் திருப்பெயரை இழிவு படுத்தாதே. நானே ஆண்டவர்! [* லேவி 20:1- 5 ]
லேவியராகமம் 18 : 22 (ECTA)
பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு. [* லேவி 20: 13 ]
லேவியராகமம் 18 : 23 (ECTA)
எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு. * விப 22:19; லேவி 20:15-16; இச 17:21..
லேவியராகமம் 18 : 24 (ECTA)
இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.
லேவியராகமம் 18 : 25 (ECTA)
இவ்வாறு, நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன். நாடும் அவர்களை வெளியே கக்கியது.
லேவியராகமம் 18 : 26 (ECTA)
நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள். குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அந்நியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.
லேவியராகமம் 18 : 27 (ECTA)
ஏனெனில், இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று.
லேவியராகமம் 18 : 28 (ECTA)
உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள்.
லேவியராகமம் 18 : 29 (ECTA)
ஏனெனில்,யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான்.
லேவியராகமம் 18 : 30 (ECTA)
எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30