லேவியராகமம் 17 : 1 (ECTA)
இரத்தத்தின் புனிதம் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 17 : 2 (ECTA)
“ஆரோன், அவன் புதல்வர், எல்லா இஸ்ரயேல் மக்கள் ஆசியோரிடம் நீ கூறவேண்டிய ஆண்டவரின் வார்த்தை இதுவே:
லேவியராகமம் 17 : 3 (ECTA)
“இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் மாடு, ஆடு, அல்லது வெள்ளாடு இவற்றைச் சந்திப்புக்கூடார வாயிலான ஆண்டவர் உறையும் இடத்தில் அவரது திருமுன் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராமல்,
லேவியராகமம் 17 : 4 (ECTA)
குடியிருப்பிலோ, குடியிருப்பு எல்லைக்கு வெளியிலோ கொலை செய்தால், அது அவருக்குப் பழியாகும். குருதி சிந்தச் செய்ததால், அவர் தமது இனத்தினின்று அழிக்கப்படுவார்.
லேவியராகமம் 17 : 5 (ECTA)
எனவே, இஸ்ரயேல் மக்கள், வயல் வெளியில் பலியிடுகிற தங்கள் பலிகளைச் சந்திப்புக் கூடாரவாயிலுக்கு ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து, அங்கே அவருக்கு நல்லுறவுப் பலிகளாகச் செலுத்துவார்கள்.
லேவியராகமம் 17 : 6 (ECTA)
அங்குக் குரு அந்த இரத்தத்தைச் சந்திப்புக் கூடாரவாயிலில் இருக்கும் ஆண்டவரின் பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பை ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிப்பார்.
லேவியராகமம் 17 : 7 (ECTA)
அவர்கள் கள்ளத்தனமாய்ப் பின்பற்றிவந்த பேய்களுக்கு இனித் தங்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கு என்றுமுள நியமம் ஆகும்.
லேவியராகமம் 17 : 8 (ECTA)
எனவே, நீ அவர்களிடம் கூறவேண்டியது: இஸ்ரயேல் வீட்டாரிலோ, அவர்களோடு தங்கும் அந்நியர்களிலோ யாரேனும் எரிபலி செலுத்தினால்,
லேவியராகமம் 17 : 9 (ECTA)
அதனைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராவிடில், அவர் அவரது இனத்தவருள் இராமல் அழிக்கப்படுவார்.
லேவியராகமம் 17 : 10 (ECTA)
இஸ்ரயேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்கும் அந்நியரிலும் ஒருவர் குருதியை அருந்தினால், குருதி அருந்தியவருக்கு எதிராக நான் என்முகத்தைத் திருப்பி, அந்த மக்களிடையே அவர் இராதபடி அழிப்பேன். [* தொநூ 9:4; லேவி 7:26-27; 19:26; இச 12:16-23; 15: 23 ]
லேவியராகமம் 17 : 11 (ECTA)
உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவக்கழுவாய் நிறைவேற்றும் குருதி. * எபி 9:22..
லேவியராகமம் 17 : 12 (ECTA)
எனவேதான், இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னேன்; உங்களில் ஒருவரும் குருதியை அருந்த வேண்டாம். உங்களிடையே தங்கும் அந்நியரும் அருந்த வேண்டாம்.
லேவியராகமம் 17 : 13 (ECTA)
இஸ்ரயேல் மக்களிலோ, உங்களிடையே தங்கும் அந்நியரிலோ ஒருவர் உண்ணத்தக்க ஒரு விலங்கை அல்லது பறவையை வேட்டையாடிப்பிடித்தால், அவர் அதன் குருதியைத் தரையில் சிந்தவிட்டு மண்ணால் மூடவேண்டும்.
லேவியராகமம் 17 : 14 (ECTA)
ஏனெனில், அனைத்து உடலுக்கும் அதுவே உயிர், அதன் குருதி உயிர் போன்றது. ஆகையால், இஸ்ரயேல் மக்களுக்கு, ‘எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்’ என்று சொன்னேன். ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே; அதனை உண்பவர் அழிவார்.
லேவியராகமம் 17 : 15 (ECTA)
குடிமக்களிலும் அந்நியரிலும் செத்த உடலை அல்லது பீறிக் கிழிக்கப்பட்டதை உண்பவர் தம் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகுவார். அவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பார். பின்னர், தூய்மையாவார்.
லேவியராகமம் 17 : 16 (ECTA)
அவர் தம் உடைகளைத் துவைக்காமலும் தம் உடலைக் கழுவாமலும் இருந்தால், தம் குற்றத்தைத் தாமே சுமப்பார்”.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16