லேவியராகமம் 12 : 1 (ECTA)
பேறுகாலப் பெண்களைத் தூய்மைப்படுத்தல் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 12 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள்.
லேவியராகமம் 12 : 3 (ECTA)
எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். [* தொநூ 17:12; லூக் 2: 21 ]
லேவியராகமம் 12 : 4 (ECTA)
தொடர்ந்து வரும் முப்பதி மூன்று நாள்கள், அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது; தூயதலத்திற்குள் வரலாகாது.
லேவியராகமம் 12 : 5 (ECTA)
அவள் பெண் குழந்தை பெற்றால், இரண்டு வாரம் விலக்கு நாள்களில் இருப்பது போலவே, தீட்டாயிருப்பாள். பின்னர், அறுபத்தாறு நாள் தன் உதிரத் தீட்டில் இருப்பாள்.
லேவியராகமம் 12 : 6 (ECTA)
குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர், ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப் புறா ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 12 : 7 (ECTA)
அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.
லேவியராகமம் 12 : 8 (ECTA)
ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து, அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்; அப்போது அவள் தூய்மையாவாள். * லூக் 2:24..
❮
❯