புலம்பல் 3 : 1 (ECTA)
தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும் ஆண்டவரது சினத்தின் கோலால் வேதனை அனுபவித்த ஒருவன் நான்!
புலம்பல் 3 : 2 (ECTA)
அவர் என்னைத் துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார்!
புலம்பல் 3 : 3 (ECTA)
உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்! நாள் முழுதும் ஓங்குகிறார்! மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்!
புலம்பல் 3 : 4 (ECTA)
அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!
புலம்பல் 3 : 5 (ECTA)
அவர் கசப்பாலும் துயராலும் என்னை முற்றுகையிட்டு வளைத்துக்கொண்டார்!
புலம்பல் 3 : 6 (ECTA)
பண்டைக் காலத்தில் இறந்தோர் போல, இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்!
புலம்பல் 3 : 7 (ECTA)
நான் தப்பிச் செல்ல இயலாதவாறு என்னைச் சுற்றிலும் அவர் மதில் எழுப்பினார்! பளுவான தளைகளால் என்னைக் கட்டினார்!
புலம்பல் 3 : 8 (ECTA)
துணை வேண்டி நான் கூக்குரல் எழுப்பியபோதும், அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுத்துவிட்டார்!
புலம்பல் 3 : 9 (ECTA)
செதுக்கிய கற்களால் என் வழிகளில் தடைச் சுவர் எழுப்பினார்! என் பாதைகளைக் கோணாலாக்கினார்!
புலம்பல் 3 : 10 (ECTA)
பதுங்கியிருக்கும் கரடி போன்றும் மறைந்திருக்கும் சிங்கம் போன்றும், அவர் எனக்கு ஆனார்!
புலம்பல் 3 : 11 (ECTA)
என் வழிகளினின்று இழுத்துச் சென்று, என்னைப் பீறிக் கிழித்தார்! என்னை முற்றிலும் பாழாக்கினார்!
புலம்பல் 3 : 12 (ECTA)
அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்!
புலம்பல் 3 : 13 (ECTA)
அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை என் நெஞ்சுள் பாய்ச்சினார்!
புலம்பல் 3 : 14 (ECTA)
நாள் முழுதும் நான் என் மக்கள் அனைவரின் நகைப்புக்கு உள்ளானேன்! அவர்களது வசைப்பாடலின் பொருள் ஆனேன்!
புலம்பல் 3 : 15 (ECTA)
அவர் கசப்புணவால் என்னை நிரப்பினார்! எட்டிக் காடியால் எனக்கு வெறியூட்டினார்!
புலம்பல் 3 : 16 (ECTA)
கற்களால் என் பற்களை நொறுக்கினார்! என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்!
புலம்பல் 3 : 17 (ECTA)
அமைதியை நான் இழக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!
புலம்பல் 3 : 18 (ECTA)
‘என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!’ என்று நான் சொல்லிக் கொண்டேன்.
புலம்பல் 3 : 19 (ECTA)
என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!
புலம்பல் 3 : 20 (ECTA)
அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!
புலம்பல் 3 : 21 (ECTA)
இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
புலம்பல் 3 : 22 (ECTA)
‘ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
புலம்பல் 3 : 23 (ECTA)
காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’
புலம்பல் 3 : 24 (ECTA)
‘ஆண்டவரே என் பங்கு’ என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.
புலம்பல் 3 : 25 (ECTA)
ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!
புலம்பல் 3 : 26 (ECTA)
ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
புலம்பல் 3 : 27 (ECTA)
இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது!
புலம்பல் 3 : 28 (ECTA)
அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்; எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும்.
புலம்பல் 3 : 29 (ECTA)
அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்; நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்!
புலம்பல் 3 : 30 (ECTA)
தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்! அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!
புலம்பல் 3 : 31 (ECTA)
என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார்!
புலம்பல் 3 : 32 (ECTA)
அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.
புலம்பல் 3 : 33 (ECTA)
மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை; துன்புறுத்துவதுமில்லை.
புலம்பல் 3 : 34 (ECTA)
நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும் காலால் மிதிக்கப்படுவதையோ,
புலம்பல் 3 : 35 (ECTA)
உன்னதரின் திருமுன் மனிதருக்கு நீதி மறுக்கப்படுவதையோ,
புலம்பல் 3 : 36 (ECTA)
வழக்கில் ஒருவர் வஞ்சிக்கப்படுவதையோ, என் தலைவர் காணாது இருப்பாரோ?
புலம்பல் 3 : 37 (ECTA)
என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக்கூடும்?
புலம்பல் 3 : 38 (ECTA)
நன்மையும் தீமையும் புறப்படுவது, உன்னதரின் வாயினின்று அன்றோ?
புலம்பல் 3 : 39 (ECTA)
உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்? மானிடர் அடைவது தம் பாவத்தின் விளைவை அன்றோ?
புலம்பல் 3 : 40 (ECTA)
நம் வழிகளை ஆய்ந்தறிவோம்! ஆண்டவரிடம் திரும்புவோம்!
புலம்பல் 3 : 41 (ECTA)
விண்ணக இறைவனை நோக்கி நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!
புலம்பல் 3 : 42 (ECTA)
நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை!
புலம்பல் 3 : 43 (ECTA)
நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு எம்மைப் பின்தொடர்ந்தீர்! இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?
புலம்பல் 3 : 44 (ECTA)
எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி, மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!
புலம்பல் 3 : 45 (ECTA)
மக்களினங்கள் இடையே எம்மை குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!
புலம்பல் 3 : 46 (ECTA)
எங்கள் பகைவர் அனைவரும் எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!
புலம்பல் 3 : 47 (ECTA)
திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன! சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!
புலம்பல் 3 : 48 (ECTA)
என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின!
புலம்பல் 3 : 49 (ECTA)
வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன;
புலம்பல் 3 : 50 (ECTA)
ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!
புலம்பல் 3 : 51 (ECTA)
என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு, என் உள்ளம் புலம்புகின்றது!
புலம்பல் 3 : 52 (ECTA)
காரணமின்றி என் பகைவர், பறவையை வேட்டையாடுவது போன்று, என்னை வேட்டையாடினர்!
புலம்பல் 3 : 53 (ECTA)
உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்!
புலம்பல் 3 : 54 (ECTA)
வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! ‘நான் தொலைந்தேன்’ என்றேன்.
புலம்பல் 3 : 55 (ECTA)
படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.
புலம்பல் 3 : 56 (ECTA)
என் குரலை நீர் கேட்டீர்; என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும் உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!
புலம்பல் 3 : 57 (ECTA)
உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, ‘அஞ்சாதே’ என்றீர்!
புலம்பல் 3 : 58 (ECTA)
என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்!
புலம்பல் 3 : 59 (ECTA)
ஆண்டவரே! எனக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்! எனக்கு நீதி வழங்கும்!
புலம்பல் 3 : 60 (ECTA)
அவர்களின் பழிவாங்கும் திட்டத்தையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!
புலம்பல் 3 : 61 (ECTA)
ஆண்டவரே! அவர்களின் வசைமொழிகளையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!
புலம்பல் 3 : 62 (ECTA)
என் பகைவர் நாள் முழுவதும் எனக்கெதிராக, முணுமுணுத்துத் திட்டமிடுகின்றனர்.
புலம்பல் 3 : 63 (ECTA)
பாரும்! அவர்கள் அமர்ந்தாலும் எழுந்தாலும் என்னைப் பற்றியே வசைபாடுகிறார்கள்!
புலம்பல் 3 : 64 (ECTA)
ஆண்டவரே! அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கைம்மாறு அளித்தருளும்!
புலம்பல் 3 : 65 (ECTA)
நீர் அவர்கள் மனதைக் கடினப்படுத்தும்! உம் சாபம் அவர்கள்மேல் விழச் செய்யும்!
புலம்பல் 3 : 66 (ECTA)
ஆண்டவரே, சினம் கொண்டு அவர்களைப் பின்தொடரும்! வானத்தின்கீழ் இல்லாதவாறு அவர்களை அழித்தொழியும்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66