நியாயாதிபதிகள் 8 : 1 (ECTA)
மிதியானியர் முற்றும் அழிவுறுதல் எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், “என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே!” என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 2 (ECTA)
அவர் அவர்களிடம், “நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன்? எப்ராயிமின் இரண்டாம் திராட்சைப்பழப் பறிப்பு அபியேசரின் முதல் பறிப்பைவிடச் சிறந்ததல்லவா?
நியாயாதிபதிகள் 8 : 3 (ECTA)
ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் உங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது?” என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது. * திபா 83:11..
நியாயாதிபதிகள் 8 : 4 (ECTA)
கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர். * திபா 83:11..
நியாயாதிபதிகள் 8 : 5 (ECTA)
அவர் சுக்கோத்து மக்களிடம், “என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்” என்றார். * திபா 83:11..
நியாயாதிபதிகள் 8 : 6 (ECTA)
“செபாகையும் சல்முன்னாவையம் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும்?” என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர்.
நியாயாதிபதிகள் 8 : 7 (ECTA)
கிதியோன், “அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழிப்பேன்” என்றார்.
நியாயாதிபதிகள் 8 : 8 (ECTA)
அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 9 (ECTA)
பெனுவேல் மக்களிடம், “நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன்” என்றார்.
நியாயாதிபதிகள் 8 : 10 (ECTA)
செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தனர். பதினைந்தாயிரம் பேர் கொண்ட படையும் அவர்களோடு இருந்தது. அவர்கள் அனைவரும் கிழக்கில் வாழும் மக்களின் படை அனைத்திலிருந்தும் எஞ்சி இருந்தவர்கள். ஏற்கெனவே, ஓர் இலட்சத்து இருபதாயிரம் போர் வீரர் மடிந்திருந்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 11 (ECTA)
கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார்.
நியாயாதிபதிகள் 8 : 12 (ECTA)
செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.
நியாயாதிபதிகள் 8 : 13 (ECTA)
யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார்.
நியாயாதிபதிகள் 8 : 14 (ECTA)
அவர் சுக்கோத்தைச் சார்ந்த ஓர் இளைஞனைப் பிடித்து அவனை விசாரித்தார். அவன் அவருக்குச் சுக்கோத்தின் தலைவர்களும் பெரியோர்களுமாக எழுபத்தேழுபேரின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 8 : 15 (ECTA)
அவர் சுக்கோத்து மக்களிடம் வந்து, “இப்பொழுதே செபாகையும் சல்முன்னாவையும் பிடித்துவிட்டாயா? களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே! அந்தச் செபாகையும் சல்முன்னாவையும் இதோ பாருங்கள்” என்று கூறினார்.
நியாயாதிபதிகள் 8 : 16 (ECTA)
பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார்.
நியாயாதிபதிகள் 8 : 17 (ECTA)
பெனுவேலின் கோபுரத்தை இடித்து நகரின் மக்களைக் கொன்றார்.
நியாயாதிபதிகள் 8 : 18 (ECTA)
செபாகிடமும் சல்முன்னாவிடமும், “நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?” என்று கேட்டார். அவர்கள், “உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர்” என்றனர்.
நியாயாதிபதிகள் 8 : 19 (ECTA)
அவர், “அவர்கள் என் சகோதரர்கள்; என் தாயின் மக்கள்; நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்லமாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை!” என்றார்.
நியாயாதிபதிகள் 8 : 20 (ECTA)
அவர் தம் தலைமகன் எத்தேரிடம், “எழு! அவர்களைக் கொல்” என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில், அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான்.
நியாயாதிபதிகள் 8 : 21 (ECTA)
செபாகும் சல்முன்னாவும், “நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல்” என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.
நியாயாதிபதிகள் 8 : 22 (ECTA)
இஸ்ரயேலர் கிதியோனிடம், “எங்களை ஆள்வீர்! நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக! ஏனெனில், நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்!” என்றனர்.
நியாயாதிபதிகள் 8 : 23 (ECTA)
கிதியோன் அவர்களிடம், “நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார்” என்றார்.
நியாயாதிபதிகள் 8 : 24 (ECTA)
அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு வரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள்” என்றார். ஏனெனில், இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம்.
நியாயாதிபதிகள் 8 : 25 (ECTA)
இஸ்ரயேலர், “நாங்கள் உறுதியாகச் செய்வோம்” என்றனர். அவர்கள் ஒரு துணியை விரித்தனர். அதன்மீது ஒவ்வொருவனும் தான் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியைப் போட்டான்.
நியாயாதிபதிகள் 8 : 26 (ECTA)
அவர் கேட்ட தங்கக் காதணிகளின் எடை ஆயிரத்து எழுநூறு செக்கேல் ஆகும். அத்தோடு இளம்பிறை அணிகள், தொங்கணிகள், மிதியான் அரசர்களின் பட்டாடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தின்மீது இருந்த அணிகலன்கள் ஆகியவற்றையும் கொடுத்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 27 (ECTA)
கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.
நியாயாதிபதிகள் 8 : 28 (ECTA)
மிதியானியர் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டனர். அவர்களால் தலைதூக்க முடியவில்லை. கிதியோனின் காலத்தில் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.
நியாயாதிபதிகள் 8 : 29 (ECTA)
கிதியோனின் இறப்பு யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார்.
நியாயாதிபதிகள் 8 : 30 (ECTA)
கிதியோனுக்கு அவருடைய சொந்த மக்கள் எழுபது பேர். ஏனெனில், அவருக்குப் மனைவியர் பலர் இருந்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 31 (ECTA)
செக்கேமிலிருந்த அவருடைய வைப்பாட்டி அவருக்கு ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவர் அவனுக்கு அபிமெலக்கு என்று பெயரிட்டார்.
நியாயாதிபதிகள் 8 : 32 (ECTA)
யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 33 (ECTA)
கிதியோன் இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாகாலிடம் திரும்பி வேசித்தனம் செய்தனர். பாகால் பெரித்தைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொண்டனர்.
நியாயாதிபதிகள் 8 : 34 (ECTA)
தங்களைச் சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கையிலிருந்து விடுவித்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை இஸ்ரயேல் மக்கள் நினைவிற் கொள்ளவில்லை.
நியாயாதிபதிகள் 8 : 35 (ECTA)
கிதியோன் என்ற எருபாகால் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் தக்க நன்றியை அவர்கள் அவரது வீட்டுக்குக் காட்டவில்லை.
❮
❯