நியாயாதிபதிகள் 5 : 1 (ECTA)
தெபோரா, பாராக்கின் வெற்றிப்பாடல் அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
நியாயாதிபதிகள் 5 : 2 (ECTA)
“இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர். ஆண்டவரைப் போற்றுங்கள்.!
நியாயாதிபதிகள் 5 : 3 (ECTA)
அரசர்களே, கேளுங்கள்! இளவரசர்களே, செவிகொடுங்கள்.! நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன்.
நியாயாதிபதிகள் 5 : 4 (ECTA)
ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது.
நியாயாதிபதிகள் 5 : 5 (ECTA)
ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின. சீனாய் மலையே! நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய். * விப 19:18..
நியாயாதிபதிகள் 5 : 6 (ECTA)
அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.
நியாயாதிபதிகள் 5 : 7 (ECTA)
தெபோரா! நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.
நியாயாதிபதிகள் 5 : 8 (ECTA)
வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது. இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது?
நியாயாதிபதிகள் 5 : 9 (ECTA)
என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது. மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
நியாயாதிபதிகள் 5 : 10 (ECTA)
பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே! விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே! பாதையில் பயணம் செய்வோரே! பாடி மகிழுங்கள்!
நியாயாதிபதிகள் 5 : 11 (ECTA)
நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது. இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது. அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள்.
நியாயாதிபதிகள் 5 : 12 (ECTA)
எழுந்திடு! தெபோரா! எழுந்திடு! பாடல் ஒன்று பாடு! எழுந்திடு! பாராக்கு! அபினோவாம் புதல்வா! உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு!
நியாயாதிபதிகள் 5 : 13 (ECTA)
அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர் பீடு நடைபோட்டனர். வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர்.
நியாயாதிபதிகள் 5 : 14 (ECTA)
எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர். பென்யமின்! உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
நியாயாதிபதிகள் 5 : 15 (ECTA)
இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர். இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்; அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர். ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே!
நியாயாதிபதிகள் 5 : 16 (ECTA)
மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய்? ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே!
நியாயாதிபதிகள் 5 : 17 (ECTA)
கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது. தாண்! நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய்? ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான்.
நியாயாதிபதிகள் 5 : 18 (ECTA)
செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!
நியாயாதிபதிகள் 5 : 19 (ECTA)
மன்னர்கள் வந்து போரிட்டனர். கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர். கொள்ளைப் பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை.
நியாயாதிபதிகள் 5 : 20 (ECTA)
வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன! தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன!
நியாயாதிபதிகள் 5 : 21 (ECTA)
கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து வரும் ஆறே கீசோன் ஆறு. என் உயிரே! வலிமையுடன் பீடு நடை போடு!
நியாயாதிபதிகள் 5 : 22 (ECTA)
குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன. குதிரைகள் பாய்ந்து ஓடின; வேகமாக விரைந்து ஓடின.
நியாயாதிபதிகள் 5 : 23 (ECTA)
‘மேரோசைச் சபியுங்கள்’ என்கிறார் ஆண்டவரின் தூதர். அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.
நியாயாதிபதிகள் 5 : 24 (ECTA)
கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறு பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்!
நியாயாதிபதிகள் 5 : 25 (ECTA)
அவன் கேட்டதோ தண்ணீர்! இவள் கொடுத்ததோ பால்! அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்.
நியாயாதிபதிகள் 5 : 26 (ECTA)
அவள் தன் கையைக் கூடார முளையில் வைத்தாள். அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது. சீசராவின் தலையில் அடித்தாள்; சிதைத்தாள்; அவன் நெற்றிப் பொட்டினை நொறுக்கினான்; துளைத்தான்.
நியாயாதிபதிகள் 5 : 27 (ECTA)
அவன் சரிந்தான்; விழுந்தான்; அவள் காலடியில் உயிரற்றுக் கிடந்தான்; அவள் காலடியில் அவன் சரிந்தான்; விழுந்தான்; அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்.
நியாயாதிபதிகள் 5 : 28 (ECTA)
சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்; “அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்? அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?
நியாயாதிபதிகள் 5 : 29 (ECTA)
அவளுடைய அறிவார்ந்த பணிப் பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்;
நியாயாதிபதிகள் 5 : 30 (ECTA)
அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ? ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்; சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்; என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்; இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.
நியாயாதிபதிகள் 5 : 31 (ECTA)
“ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும்! உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்!” பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31