நியாயாதிபதிகள் 2 : 1 (ECTA)
பொக்கிமில் ஆண்டவரின் தூதர் ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்.
நியாயாதிபதிகள் 2 : 2 (ECTA)
நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள்” என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? [* விப 34:12-13; இச 7:2- 5 ]
நியாயாதிபதிகள் 2 : 3 (ECTA)
ஆகவே, இப்பொழுது கூறுகின்றேன்; நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன். அவர்கள் உங்களுக்கு முள்ளாக இருப்பார்கள். அவர்கள் தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருப்பார்கள்”.
நியாயாதிபதிகள் 2 : 4 (ECTA)
ஆண்டவரின் தூதர் இவ்வார்த்தைகளை எல்லா இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும், மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர்.
நியாயாதிபதிகள் 2 : 5 (ECTA)
அவ்விடத்தின் பெயரைப் ‘பொக்கிம்’ என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
நியாயாதிபதிகள் 2 : 6 (ECTA)
யோசுவாவின் இறப்பு யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர்.
நியாயாதிபதிகள் 2 : 7 (ECTA)
யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 8 (ECTA)
நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து.
நியாயாதிபதிகள் 2 : 9 (ECTA)
காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர். * யோசு 19:49-50..
நியாயாதிபதிகள் 2 : 10 (ECTA)
அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.
நியாயாதிபதிகள் 2 : 11 (ECTA)
இஸ்ரயேல் ஆண்டவரை விட்டு விலகுதல் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 12 (ECTA)
அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
நியாயாதிபதிகள் 2 : 13 (ECTA)
அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 14 (ECTA)
இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருக்க எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால், அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று.
நியாயாதிபதிகள் 2 : 15 (ECTA)
ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.
நியாயாதிபதிகள் 2 : 16 (ECTA)
ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 17 (ECTA)
ஆயினும், அவர்கள் தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை; ஏனெனில், அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர்.
நியாயாதிபதிகள் 2 : 18 (ECTA)
ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில், துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
நியாயாதிபதிகள் 2 : 19 (ECTA)
ஆனால், அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை.
நியாயாதிபதிகள் 2 : 20 (ECTA)
எனவே, இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. அவர், “இம்மக்களின் மூதாதையர் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை இவர்கள் மீறிவிட்டனர். என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.
நியாயாதிபதிகள் 2 : 21 (ECTA)
ஆகவே, நானும் யோசுவா இறக்கும்பொழுதுவிட்டு வைத்த வேற்றினத்தாரை இவர்கள் முன்னிருந்து இனியும் விரட்டமாட்டேன்.
நியாயாதிபதிகள் 2 : 22 (ECTA)
ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன்” என்றார்.
நியாயாதிபதிகள் 2 : 23 (ECTA)
எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23