யோசுவா 21 : 1 (ECTA)
லேவியர்க்குரிய நகர்கள் லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி,
யோசுவா 21 : 2 (ECTA)
கானான் நாட்டில் சீலோவில் கூறியது: “நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்.” * எண் 35:1-8..
யோசுவா 21 : 3 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளைப்படி தங்கள் பங்கிலிருந்து லேவியருக்குப் பின்வருமாறு நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர்.
யோசுவா 21 : 4 (ECTA)
கோகாத்தியரின் குடும்பங்களுக்காகச் சீட்டுப் போட்டனர். லேவியருள் குரு ஆரோனின் மக்களுக்கு, யூதா குலத்திலிருந்தும் சிமியோன் குலத்திலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.
யோசுவா 21 : 5 (ECTA)
கோகாத்தியரில் ஏனைய மக்களுக்கு, எப்ராயிம் குலத்தின் குடும்பத்திலிருந்தும் தாண் குலத்திலிருந்தும் மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பத்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.
யோசுவா 21 : 6 (ECTA)
கேர்சோன் மக்களுக்கு இசக்கார் குலத்தின் குடும்பங்களிலிருந்தும் ஆசேர் குலத்திலிருந்தும் நப்தலி குலத்திலிருந்தும் பாசானிலிருந்த மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.
யோசுவா 21 : 7 (ECTA)
மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும் காத்துக் குலத்திலிருந்தும் செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன.
யோசுவா 21 : 8 (ECTA)
ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர்.
யோசுவா 21 : 9 (ECTA)
யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்;
யோசுவா 21 : 10 (ECTA)
லேவியரின் மக்கள் கோகாத்தியரின் குடும்பத்தைச் சார்ந்த ஆரோனின் மக்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் அவர்களுக்குப் பின்வருமாறு நகர்கள் கிடைத்தன.
யோசுவா 21 : 11 (ECTA)
யூதா மலைநாட்டில் உள்ள எபிரோன் என்னும் கிரியத்து அர்பாவைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுக்குக் கிடைத்தது. அர்பா ஆனாக்கின் தந்தை.
யோசுவா 21 : 12 (ECTA)
நகரின் விளைநிலமும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு உடைமையாகக் கிடைத்தன.
யோசுவா 21 : 13 (ECTA)
குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
யோசுவா 21 : 14 (ECTA)
யாத்திர், அதன் மேய்ச்சல் நிலம்; எசுத்தமோவா, அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 15 (ECTA)
கோலோன், அதன் மேய்ச்சல் நிலம்; தெபீர், அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 16 (ECTA)
அயின், அதன் மேய்ச்சல் நிலம்; யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்; பெத்சமேசு அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள்.
யோசுவா 21 : 17 (ECTA)
பென்யமின் குலத்திலிருந்து கொடுக்கப்பட்டவை; கிபயோன், அதன் மேய்ச்சல் நிலம்; கேபா, அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 18 (ECTA)
அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; அல்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 19 (ECTA)
குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை மொத்தம் பதின் மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
யோசுவா 21 : 20 (ECTA)
லேவியரைச் சார்ந்த கோகாத்தின் ஏனைய குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் உடைமைகளிலிருந்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கொடுக்கப்பட்டன.
யோசுவா 21 : 21 (ECTA)
அவர்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்; மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்; கேசேர், அதன் மேய்ச்சல் நிலம்
யோசுவா 21 : 22 (ECTA)
கிபட்சயிம், அதன் மேய்ச்சல் நிலம், பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 23 (ECTA)
தாணின் குலத்திலிருந்து கிடைத்தவை; எல்தக்கே, அதன் மேய்ச்சல் நிலம்; கிபத்தோன், அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 24 (ECTA)
அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 25 (ECTA)
மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
யோசுவா 21 : 26 (ECTA)
இவ்வாறு, கோகாத்தின் எஞ்சிய குடும்பங்களுக்குப் பத்து நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.
யோசுவா 21 : 27 (ECTA)
லேவியரின் குடும்பத்தைச் சார்ந்த கேர்சோனின் குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான பாசானில் கோலான், அதன் மேய்ச்சல் நிலம்; பெயசுதரா, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
யோசுவா 21 : 28 (ECTA)
இசக்காரின் குலத்திலிருந்து கிடைத்தவை; கிசியோன், அதன் மேய்ச்சல் நிலம்; தாபராத்து, அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 29 (ECTA)
யார்முத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஏன்கன்னிம், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 30 (ECTA)
ஆசேரின் குலத்திலிருந்து கிடைத்தவை; மிசால், அதன் மேய்ச்சல் நிலம்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலம்,
யோசுவா 21 : 31 (ECTA)
எல்காத்து, அதன் மேய்ச்சல் நிலம்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 32 (ECTA)
நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கலிலேயாவின் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலம்; அம்மோத்தோர், அதன் மேய்ச்சல் நிலம்; காத்தான், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக மூன்று நகர்கள்.
யோசுவா 21 : 33 (ECTA)
இவ்வாறு, கேர்சோனின் குடும்பங்களுக்குக் கிடைத்தவை இப் பதின்மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
யோசுவா 21 : 34 (ECTA)
எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்; கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம்.
யோசுவா 21 : 35 (ECTA)
திம்னா, அதன் மேய்ச்சல் நிலம்; நகலால், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 36 (ECTA)
ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்; யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 37 (ECTA)
கெதமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 38 (ECTA)
காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்;
யோசுவா 21 : 39 (ECTA)
எஸ்போன், அதன் மேய்ச்சல் நிலம்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
யோசுவா 21 : 40 (ECTA)
இவ்வாறு, எஞ்சிய லேவியருள் மெராரி குடும்பங்களுக்குச் சீட்டு விழுந்ததன்படி கிடைத்த மொத்த நகர்கள் பன்னிரண்டு.
யோசுவா 21 : 41 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
யோசுவா 21 : 42 (ECTA)
எல்லா நகர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன.
யோசுவா 21 : 43 (ECTA)
இவ்வாறு, ஆண்டவர் அவர்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாடு முழுவதையும் இஸ்ரயேலுக்குக் கொடுத்தார். அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்தார்கள்.
யோசுவா 21 : 44 (ECTA)
அவர்கள் மூதாதையருக்கு வாக்களித்தபடி ஆண்டவர் அவர்களுக்கு நாட்டின் எல்லை எங்கும் அமைதி நிலவச் செய்தார். பகைவர்களில் எவனாலும் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. கடவுள் அவர்களுடைய பகைவர்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார்.
யோசுவா 21 : 45 (ECTA)
ஆண்டவர் இஸ்ரயேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45