யோசுவா 19 : 1 (ECTA)
சிமியோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.
யோசுவா 19 : 2 (ECTA)
அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயேர்செபா, சேபா, மோலாதா, [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 3 (ECTA)
அட்சர்சூவால், பாலா எட்சேம், [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 4 (ECTA)
எல்தோலகு, பெத்தூல், ஓர்மா, [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 5 (ECTA)
சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா, [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 6 (ECTA)
பெத்லாபாவோத்து, சாருகன் ஆக பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 7 (ECTA)
அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 8 (ECTA)
இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து. [* 1 குறி 4:28- 33 ]
யோசுவா 19 : 9 (ECTA)
சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர்.
யோசுவா 19 : 10 (ECTA)
செபுலோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது.
யோசுவா 19 : 11 (ECTA)
அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது.
யோசுவா 19 : 12 (ECTA)
சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது.
யோசுவா 19 : 13 (ECTA)
அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது.
யோசுவா 19 : 14 (ECTA)
மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது.
யோசுவா 19 : 15 (ECTA)
கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 19 : 16 (ECTA)
இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து.
யோசுவா 19 : 17 (ECTA)
இசக்காருக்கு அளிக்கப்பட்ட பகுதி நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
யோசுவா 19 : 18 (ECTA)
அவர்களது எல்லை; இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம்,
யோசுவா 19 : 19 (ECTA)
அப்பாராயிம், சியோன், அனகராத்து,
யோசுவா 19 : 20 (ECTA)
இரப்பீத்து, கிசியோன், எபெசு,
யோசுவா 19 : 21 (ECTA)
இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே.
யோசுவா 19 : 22 (ECTA)
அவ்வெல்லை தாபோரையும் சகட்சிமாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 19 : 23 (ECTA)
இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.
யோசுவா 19 : 24 (ECTA)
ஆசேருக்கு அளிக்கப்பட்ட பகுதி ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
யோசுவா 19 : 25 (ECTA)
அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு,
யோசுவா 19 : 26 (ECTA)
அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு,
யோசுவா 19 : 27 (ECTA)
கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று செபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது.
யோசுவா 19 : 28 (ECTA)
எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று,
யோசுவா 19 : 29 (ECTA)
பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது.
யோசுவா 19 : 30 (ECTA)
உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 19 : 31 (ECTA)
இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.
யோசுவா 19 : 32 (ECTA)
நப்தலிக்கு அளிக்கப்பட்ட பகுதி ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
யோசுவா 19 : 33 (ECTA)
அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கம்வரை சென்று யோர்தானில் முடிகின்றது.
யோசுவா 19 : 34 (ECTA)
பிறகு, அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
யோசுவா 19 : 35 (ECTA)
அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து,
யோசுவா 19 : 37 (ECTA)
கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர்,
யோசுவா 19 : 38 (ECTA)
ஈரோன், மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 19 : 39 (ECTA)
இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.
யோசுவா 19 : 40 (ECTA)
தாணுக்கு அளிக்கப்பட்ட பகுதி ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
யோசுவா 19 : 41 (ECTA)
அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை; சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு
யோசுவா 19 : 42 (ECTA)
சாயலாபிம், அய்யலோன், இதிலா,
யோசுவா 19 : 44 (ECTA)
எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து,
யோசுவா 19 : 45 (ECTA)
எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன்,
யோசுவா 19 : 46 (ECTA)
மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும்.
யோசுவா 19 : 47 (ECTA)
தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் ‘தாண்’ என்று பெயரிட்டார்கள். * நீத 18:27-29..
யோசுவா 19 : 48 (ECTA)
இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.
யோசுவா 19 : 49 (ECTA)
நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர்.
யோசுவா 19 : 50 (ECTA)
எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார்.
யோசுவா 19 : 51 (ECTA)
இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51